ஸ்டீபன் ஹாக்கிங் - வாழ்வும் பணியும் - ஆசிரியர் குறிப்பு

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/products/stephen-hawking-vaazhvum-paniyum
கிட்டி ஃபெர்கூசன்: ஒரு அறிமுகம்

கிட்டி 1941 ஆம் ஆண்டு அமெரிக்காவில் டெக்சாசில் பிறந்தார். பெற்றோர் இசைக் கலைஞர்கள். இள வயதில் திருமணம். கணவர் நியூயார்க்கில் பி.எச்டி படிக்கச் சென்றபோது உடன் சென்றார். அங்கு இசை பயின்று பட்டம் பெற்றார். இசைக் கலைஞராகப் புகழ் பெற்றார். 1981 இல் கணவருடன் இங்கிலாந்து வந்தார். கேம்பிரிட்ஜில் இயற்பியல் கூட்டங்களுக்குச் சென்றபோது ஹாக்கிங்கைச் சந்தித்தார். அமெரிக்கா மீண்ட பிறகு அறிவியலில் நாட்டம் கொண்டார். அறிவியல் தொடர்பான நூல்கள் எழுதத் தொடங்கினார். இது வரையில் பத்து நூல்களுக்கு மேல் எழுதியுள்ளார். அவருடைய 'ஸ்டீபன் ஹாக்கிங்' பல மொழிகளில் மொழி ஆக்கம் செய்யப்பட்டுள்ளது. கிட்டி தனது கணவருடனும் மகளுடனும் தென்னிந்தியா வந்து கிறிஸ்துவ மதப் பணி ஆற்றினார். தலித்களுக்குப் பள்ளி கட்ட உதவினார். ஸ்டீபன் ஹாக்கிங் பற்றி எழுதப் பலமுறை அவரை நேர்முகம் கண்டார். பல ஆராய்ச்சிகள் செய்தார். ஸ்டீபன் இறை நம்பிக்கை இல்லாதவர். ஆனால் கிட்டி ஆழ்ந்த இறைப்பற்று உள்ளவர். எனவே, நூலில் கிட்டி ஸ்டீபனிடத்தில் இறை உணர்வு இருக்கிறது என்று காட்ட முயல்வதைப் பார்க்கிறோம்.

Back to blog