ராகுல் சாங்கிருத்தியாயன் சிறந்த சிந்தனையாளர். பலமொழிகளைக் கற்றுத்தேர்ந்தவர். வரலாற்று அடிப்படையில் கதைகள் பின்னுபவர். சிறந்த எழுத்தாளர். எல்லாராலும் விரும்பப்படும் தத்துவஞானி. த்த்துவ நூல்கள் பல படைத்த இவர் எழுதிய வால்கா முதல் கங்கை வரை என்னும் நூல் பதினான்கு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு நூல்களாக அச்சிடப்பட்டன. அதைப்போலவே சிந்து முதல் கங்களை வரை என்னும் இந்நூலும் வாசகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்ட நூலாகும்.
இந்நூல் எளிய நளினமான தமிழ் நடையில் வடிவம் பெற்றதற்குச் சிறந்த எழுத்தாளரான திரு. மாஜினிரங்கசாமி அவர்களே காரணமானவர்.
தமிழறிஞர்களின் தேவை கருதி சிந்து முதல் கங்கை வரை என்று இந்நூலை வெளியிட்டு வாசகர்களின் ஆதரவைப் பெரிதும் எதிர்பார்க்கிறோம்.
சமூகம், தத்துவம், வரலாறு, அறிவியல், பயணநூல், வாழ்க்கை வரலாறு, நாடகம், கட்டுரை, ஆய்வு எனப் பன்முகத் தளங்களில் தீவிர ஈடுபாட்டுடன் சுற்றிச் சுழன்று வந்த தத்துவார்த்த சிந்தனையாளர் ராகுல் சாங்கிருத்யாயன் எழுதிய இரண்டாவது நாவல்.
வைசாலிக் குடியரசு பற்றிய வரலாற்றுத் தகவல்களை அடிப்படையாகக் கொண்ட இந்நாவலில், வைசாலிக் குடியரசின் பிரதம சேனாபதி சிம்மனின் வாழ்க்கை சிறிதாகவும் அவன் காலத்து உலகத்தை முழுமையாகவும் உயிர்த்துடிப்பான நடையில் எழுதப்பட்டுள்ளது.
கி.பி. மூன்று அல்லது நான்காம் நூற்றாண்டு வாக்கிய்லான சிம்மனின் கால வரலாற்றை பாட்னா மியூசியத்திலுள்ள 1600 செங்கற்களில் எழுதப்பட்டிருந்த எழுத்துகளிலிருந்து கண்டுகொண்டதாகக் கூறியுள்ளார் ராகுல்ஜி.
தமிழறிஞர்களின் தேவை கருதி சிந்து முதல் கங்கை வரை என்று இந்நூலை வெளியிட்டு வாசகர்களின் ஆதரவைப் பெரிதும் எதிர்பார்க்கிறோம்.
பதிப்பகத்தார்
தொடர்புடைய மற்ற பதிவுகள்: