செவ்வி - பேரா.தொ.பரமசிவன் நேர்காணல் - முதல் பதிப்பிற்கான முன்னுரை
தலைப்பு |
செவ்வி - பேரா.தொ.பரமசிவன் நேர்காணல் |
---|---|
எழுத்தாளர் | பேரா.தொ.பரமசிவன் |
பதிப்பாளர் |
கலப்பை |
பக்கங்கள் | 144 |
பதிப்பு | இரண்டாம் பதிப்பு - 2013 |
அட்டை | காகித அட்டை |
விலை | Rs.130/- |
புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/sevvi-peraa-tho-paramasivan-nerkaanalgal.html
முதல் பதிப்பிற்கான முன்னுரை
நண்பர்களே வணக்கம்.
இந்த முன்னுரையை மிகுந்த கூச்சத்துடனே நான் எழுதுகிறேன். இந்த நேர்காணல்களின் வழி நான் இயங்குகின்ற கருத்தியல் தளத்தை நான் என்னுடைய சொற்களால் வெளிப்படுத்தி இருக்கிறேன். எனவே இவை ஆய்வுக் கட்டுரைகள் ஆகா.
என்னுடைய கருத்தியல் தளம் பெரும்பாலும் மனிதவாசிப்பு சார்ந்தது. மனித வாசிப்பு என்பது உரையாடல் மரபு சார்ந்தது. தமிழர்களின் அறிவுத்தொகுதி பெரும்பாலும் உரையாடல் மரபிலேயே வெளிப்படுகிறது. ஒரு மரத்தச்சரிடம் அறுகோணத்தின் சமன்பாடு பற்றிக் கேட்டால் அவருக்கு அதை சமன்பாட்டு விதியாகச் சொல்லத்தெரியாது. ஆனால் அதை நாலுக்கு மூனு நடுவுல பாதி' என்று உரையாடல் மரபிலே போகிற போக்கில் சொல்லிவிடுவார்.
தமிழர்களுடைய மரபுவழி அறிவுத்தொகுதியினை உரையாடல் மரபிலும் அதன் உள்ளீடாக விளங்கும் பழமொழிகள், சொல் அடைகள், கதைகள், சடங்குகள் இவற்றின் வழியாகவே மீட்டெடுக்க முடியும். அதையே நான் செய்திருக்கிறேன். என்னுடைய கண்டுபிடிப்பு அல்லது பங்களிப்பு என்று சொல்லிக்கொள்வதற்கு வேறெதுவும் இல்லை. என்னை நேர்காணல் செய்த இதழாளர்களுக்கும், அவைகளை வெளியிட்ட இதழ்களுக்கும் என் அன்பு உரித்தாகுக. இந்த நேர்காணல்களை தேர்ந்தெடுத்த இரா. சித்தானை, பேராசிரியர் ச. நவநீதகிருஷ்ணன் ஆகியோருக்கு என் நன்றி. இந்நூலை வெளியிடும் சந்தியா பதிப்பகத்தாருக்கு நான் நன்றியன்.
10.06.2013,
திங்கள்கிழமை
பாளையங்கோட்டை
தொ. பரமசிவன்