1350 கோடி ஆண்டுகளுக்கு முன்பு |
பிரபஞ்சத்தில் பருப்பொருளும் ஆற்றலும் தோன்றுகின்றன. இயர்பியல் பிறக்கிறது. அணுக்களும் மூலக்கூறுகளும் தோன்றுகின்றன, வேதியியல் பிறக்கிறது. |
450 கோடி ஆண்டுகளுக்கு முன்பு |
பூமி உருவாகிறது. |
380 கோடி ஆண்டுகளுக்கு முன்பு |
உயிரினங்கள் தோன்றுகின்றன. உயிரியல் பிறக்கிறது. |
60 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு |
ஹோமோ பேரினத்திற்கும் சிம்பன்சிகளுக்கும் பொதுவான மூதாதையர் தோன்றுகின்றனர். |
25 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு |
ஆப்பிரிக்காவில் மோமோ பேரினம் தோன்றுகிறது. முதன்முதலாகக் கற்கருவிகள் உருவாக்கப்படுகின்றன. |
20 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு |
ஹோமோ பேரினம் ஆப்பிரிக்காவிலிருந்து யுரேசியாவிற்குப் பரவுகிறது. பல்வேறு மனித இனங்கள் உருவாகின்றனர். |
5 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு |
நியாண்டர்தால் இனத்தினர் ஐரோப்பாவிலும் மத்தியக் கிழக்கிலும் தோன்றுகின்றனர். |
3 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு |
நெருப்பின் அன்றாடப் பயன்பாடு நடைமுறைக்கு வருகிறது. |
2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு |
ஹோமோ சேப்பியன்ஸ் இனம் கிழக்கு ஆப்பிரிக்காவில் தோன்றுகிறது. |
70,000 ஆண்டுகளுக்கு முன்பு |
அறிவுப் புரட்சி மலர்கிறது. மொழி கண்டுபிடிக்கப்படுகிறது. வரலாறு உதயமாகிறது. ஹோமோ சேப்பியன்ஸ் ஆப்பிரிக்காவிற்கு வெளியே பரவுகின்றனர். |
45,000 ஆண்டுகளுக்கு முன்பு |
ஹோமோ சேப்பியன்ஸ் ஆஸ்திரேலியாவில் குடிபேறுகின்றனர். அங்குள்ள பூதாகரமான விலங்குகள் அழிகின்றன. |
30,000 ஆண்டுகளுக்கு முன்பு |
நியாண்டர்தால் இனத்தினர் பூண்டோடு அழிகின்றனர். |
16,000 ஆண்டுகளுக்கு முன்பு |
மோமோ சேப்பியன்ஸ் அமெரிக்காவில் குடியேறுகின்றனர். அங்குள்ள பூதாகரமான விலங்குகள் அழிகின்றன. |
13,000 ஆண்டுகளுக்கு முன்பு |
ஹோமோ ஃபுளோரெசியென்சிஸ் என்ற இன்னொரு மனித இனம் பூண்டோடு அழிகிறது, மனித இனங்களின் ஹோமோ சேப்பியன்ஸ் இனம் மட்டுமே எஞ்சி இருக்கிறது. |
12,000 ஆண்டுகளுக்கு முன்பு |
வேளாண் புரட்சி மலருகிறது. உணவுக்காகத் தாவரங்கள் பயிரிடப்படுகின்றன, விவங்குகள் பழக்கப்படுத்தப்பட்டு வீடுகளிலும் வயல்களிலும் தோட்டங்களிலும் வளர்க்கப்படுகின்றனர். நிரந்தரக் குடியேற்றம் தொடங்குகிறது. |
5,000 ஆண்டுகளுக்கு முன்பு |
முதல் மன்னராட்சி, பேச்சு மொழியின் எழுத்து, வடிவம், பணம் ஆகியனவே தோன்றுகின்றன, ’பல கடவுளர்' கோட்பாட்டை உள்ளடக்கிய மதங்கள் தலைதூக்குகின்றன. |
4,250 ஆண்டுகளுக்கு முன்பு |
வரலாற்றின் முதல் பேரரசரான சார்கானின் அக்கேடியப் பேரரசு உதயமாகிறது. |
2,500 ஆண்டுகளுக்கு முன்பு |
நாணயங்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன. உலகளாவிய பணம் பிறப்பெடுக்கிறது. 'மனிதகுல நன்மைக்கான உலகளாவிய அரசியலமைப்பு என்ற பிரகடனத்துடன் பாரசீகப் பேரரசு முளைக்கிறது. 'அனைத்து உயிர்களையும் துன்பத்திலிருந்து விடுவிக்கும் நோக்கத்துடன் இந்தியாவில் புத்தமதம் தோற்றுவிக்கப்படுகிறது. |
2,000 ஆண்டுகளுக்கு முன்பு |
சீனாவில் ஹான் பேரரசும், மத்தியத் தரைக்கடல் பகுதியில் ரோமானியப் பேரரசும் தோன்றுகின்றன. கிறித்தவ மதம் தோற்றுவிக்கப்படுகிறது. |
1,400 ஆண்டுகளுக்கு முன்பு |
இஸ்லாமிய மதம் தோற்றுவிக்கப்படுகிறது. |
500 ஆண்டுகளுக்கு முன்பு |
அறிவியல் புரட்சி மலருகிறது. மனிதகுலம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகாரத்தைக் கைப்பற்றத் தொடங்குகிறது. ஐரோப்பியர்கள் அமெரிக்காவைக் கண்டுபிடிக்கின்றனர், பெருங்கடல்களை வெற்றி கொள்ளத் தொடங்குகின்றனர், ஒன்றிணைந்த வரலாற்றுக் களமாக உலகம் மாறுகிறது. முதலாளித்துவம் தலைத்தூக்குகிறது. |
200 ஆண்டுகளுக்கு முன்பு |
தொழிற்புரட்சி வெடிக்கிறது. குடும்பமும் சமூகமும் பறக்கணிக்கப்பட்டு, நாடும் சந்தையும் அவற்றின் இடத்தை ஆக்கிரமித்துக் கொள்ளுகின்றன, தாவரங்களும் விலங்குகளும் பெரும் எண்ணிக்கையில் பூண்டோடு அழிகின்றன. |
தற்போது |
பூமி என்ற கோளிள் எல்லயை மனிதர்கள் கடக்கின்றனர். அணு ஆயுதங்கள் மனிதகுலத்தின் இருத்தலை அச்சுறுத்துகின்றன. இயற்கைத் தேர்ந்தெடுப்புச் செயல்முறையால் அன்றி நுண்ணறிவுசார் வடிவமைப்பின் மூலம் உயிரினங்கள் உருவாவது அதிகரிக்கிறது. |
எதிர்காலத்தில் |
நுண்ணறிவுசார் வடிவமைப்பின் மூலம் உருவாக்கப்படும் படைப்புகள் வாழ்வின் அடிப்படைக் கோட்பாடாக மாறப் போகின்றன, ஹோமோ சேப்பியன்ஸின் இடத்தை அதிமனிதர்கள் ஆக்கிரமித்துக் கொள்ளப் போகின்றனர். |