சஞ்சாரம் - சஞ்சாரம் விமர்சனம்

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/products/sanchaaram 
சஞ்சாரம் விமர்சனம்

- அழகியசிங்கர்

சமீபத்தில் நான் படித்த ஒரு நாவல் எஸ் ராமகிருஷ்ணனின் சஞ்சாரம். 375 பக்கங்கள் கொண்ட இந் நாவலைப் படிக்க சில நாட்கள் ஆயிற்று. ஒரே சமயத்தில் இப்போதெல்லாம் என்னால் ஒரு புத்தகத்தைப் படிக்க முடியவில்லை.

இந் நாவல் குறித்து இரண்டு கருத்துகளை அறிய முடிந்தது. இப்புத்தக வெளியீட்டுக் கூட்டத்திற்கு நான் சென்றேன். இந் நாவலைப் பற்றி ராமகிருஷ்ணன் ஒன்று சொன்னார். அவருக்கு இசையைப் பற்றி ஒன்றும் தெரியாதாம். இசையை ரசிப்பது வேறு; இசையைப் பற்றி நுணுக்கம் தெரிந்து கொள்வது வேறு. இந்த நாவலுக்காக இசையைப் பற்றி தெரிந்த நண்பர்கள் பலரைத் தொடர்பு கொண்டு பல விஷயங்களûத் தெரிந்து கொண்டாராம். எனக்கு அவர் சொன்னது ஆச்சரியமாக இருந்தது. இந்தப் புத்தகததை வாங்கி வைத்துக்கொண்டிருந்த நான், எப்படி இப் புத்தகத்தில் இசையைப்ப் பற்றி அதுவும் நாதஸ்வரம் வாசிப்பைப் பற்றி எழுதியிருக்கிறார் என்பதை அறிய ஆவலாக இருந்தது.

இன்னொரு விஷயம். இப் புத்தகத்தை அந்த அரங்கில் விமர்சனம் செய்த ஒருவர் இப் புத்தகத்தின் எந்தப் பகுதியும எடுத்து வாசிக்கலாம் என்றார். அதாவது முதல் பக்கத்திலிருந்து கடைசிப் பக்கம் வரை தொடர்ச்சியாக வாசிக்க வேண்டும் என்பது இல்லை என்று. மொத்தம் 33 அத்தியாயங்களாக மொத்தம் 375 பக்கங்கள் வரை எழுதியிருக்கிறார். அந்த விமர்சகர் கருத்தை நானும் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் நாவல் ஆரம்பமும், முடிவும் முக்கியம். நடுவில் பல அத்தியாயங்களில் பல விஷயங்களை சொல்லிக் கொண்டே போனாலும், இந்த இரண்டு முனைகளும் சேராமல் நாவலை படித்தத் திருப்தி வராது.

இந் நாவலைப் படிக்கும் போது, நாவல் கரிசல் கிராமத்தைச் சேர்ந்த நாதஸ்வரக்காரர்களைப் பற்றி சொல்கிறதா என்ற சந்தேகம் வருகிறது. உண்மையில நாவல் ஜாதி கலவரத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்டதாகப் படுகிறது.

நாவலை அதன் மூலமாகச் சொல்லாமல், நாதஸ்வரம் வாசிக்கிற கலைஞர்களைப் பற்றி சொல்லிக் கொண்டு போகிறார். கதையை விறுவிறுப்பாக எழுதிக்கொண்டே போகிறார். ஒவ்வொரு அத்தியாயம் மூலமாக ஒவ்வொரு கதை மாதிரி பல கதைகளை நாதஸ்வரம் இசைக் கருவியை மையமாக வைத்து அடுக்கிக் கொண்டு போகிறார். இவர் எழுத்தைப் படிக்குமபோது, இசையைப் பற்றி நன்றாகத் தெரிந்த ஒரு மேதாவி எழுதுவதுபோல் எழுதிக் கொண்டு போகிறார்.

நாவலின் 100வது பக்கத்தில் சாமிநாதப் பிள்ளையைப் பற்றி சொல்கிறார்: …….மனுசன் நிக்குற வெறிய பார்த்தா நரசிம்மம் மாதிரி நம்ம வயிற்றைக் கிழித்துப் போட்டுறப் போறானோனு. ஆனா அவர் ஒண்ணுமே செய்யலை. சீவாளியை எடுத்து வாயிலே வச்சார். தோடி வாசிக்கத் துவங்கியதம் மேகத்துல சஞ்சரிக்கிறது மாதிரி எல்லோரும் மிதக்க ஆரû; பிஞ்சாங்க. அப்படியொரு பிரவாகத்தை அவர்கள் கேட்டதேயில்லை. பனங்கள்ளுல விழுந்த ஈ மாதிரி கிறங்கிப் போயிருந்தார்கள். வாசிதர்து முடியும்போது இரவு மணி இரண்டரை, பலலக்கிலிருந்து சிவனும் அத்தனை நேரம் வீதியிலே நின்று கொண்டிருந்தார். ஆனால் அவர் வாசித்து முடித்தவுடன் ராமஸ்வாமி போய் அவரது காலில் விழுந்து இத்தனை நேரம் தான் இசைத்த அத்தனையும் அழித்து மெழுகிவிட்டீர்கள். இதுக்கு மேல் சொல்ல எதுவுமில்லை எனக் கண்ணீர் மல்கினார்.

சாமிநாதபிள்ளை எதுவும் பேசவில்லை. விடுவிடுவென தனது நாதஸ்வரத்தை அதே இடத்தில் வைத்துவிட்டு நடந்து போய்விட்டார்.

நமக்கு அதிர்ஷ்டமிருந்தாதான் அவர் இசையைக் கேட்க முடியும். பொன்னும்மணியும் கொட்டி குடுத்தாலும் அந்த வாசிப்பு கிடைக்காது

…ஒவ்வொரு அத்தியாயத்திலும் ராமகிருஷ்ணனின் கதைகள் தொடர்ந்து வாசிக்க வேண்டுமென்ற ஆர்வத்தை உண்டாக்கிறது.

இது நாதஸ்வரன் என்ற இசைக்கருவியுடன், பலவித இன்னல்களைச் சுமந்து வாழும் மனிதர்களைப் பற்றிய கதை. இக் கதையைப் படிக்கும்போது, சோகத்துடன் சுவையும் மிளிர்கிறது. இசையைப் பற்றி தெரியாதவர் மாதிரி ராமகிருஷ்ணன் தெரியவில்லை. அதிலேயே அவர் ஊறியவர் மாதிரி அவர் எழுத்து மூலம் தெரியவருகிறார்.

நன்றி - அழகிய சிங்கர்

Back to blog