ரிக் வேதகால ஆரியர்கள் - பதிப்புரை

ரிக் வேதகால ஆரியர்கள் - பதிப்புரை

தலைப்பு

ரிக் வேதகால ஆரியர்கள்

எழுத்தாளர் ராகுல் சாங்கிருத்தியாயன்
பதிப்பாளர்

அலைகள் வெளியீட்டகம்

பக்கங்கள் 200
பதிப்பு இரண்டாம் பதிப்பு - 2016
அட்டை காகித அட்டை
விலை Rs.150/-

 

புத்தகத்தை இங்கே வாங்கலாம்

https://periyarbooks.com/rig-vedakaala-aariyargal.html

 

பதிப்புரை

ஆரியர்கள் இந்தியாவிற்கு வந்ததைப் பற்றி சமீபகாலமாக மாறுபட்ட கருத்துக்கள் முன்வைக்கப் படுகின்றன. உலகளவில் மானிடவியலாளர்கள் ஏற்றுக் கொண்ட கருத்துக்கு மாறாக, ஆரியர்கள் இந்தியாவுக்கு குடிபெயர்ந்தவர்கள் அல்லவென்றும் பூர்வ இந்தியக் குடிகளே என்றும் நிறுவும் முயற்சிக்கு அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தும் போக்கு சமீபகாலங்கலில் கூர்மையடைந்துள்ளது. ஹரப்பா நாகரிகம் ஆரிய நாகரிகம் என்று நிறுவ பல முயற்சிகள் நடைபெற்ற போதிலும் அவை தோற்றுப்போயின. இந்த இரண்டு கருத்துகளுக்குமான விவாதங்களில் பெரும்பாலான படித்த வர்க்கம் பார்வையாளர்களாகவே நின்று கொண்டுள்ளது.

இன்றைய சூழ்நிலையில் மேலே கண்ட இந்தக் கருத்தில் வாசகர்கள் தெளிவு பெற மார்க்சிய ஆய்வாளர் ராகுல சாங்கிருத்யாயனின் 'ரிக் வேதகால ஆரியர்கள்' என்ற இந்நூல் பயன்படும். மேலும் இவ்வாண்டு நாங்கள் வெளியிட்டுள்ள 'ரிக் வேதம்' (மூன்று தொகுதிகள்) நூலைப் படிப்பவர்களுக்கு கூடுதல் தகவல் நூலாகவும் இந்நூல் இருக்கும். இந்தக் காரணங்களால் வெளியிடப் பட்டுள்ள இந்நூல் வாசகர்களுக்கு அவசியமெனக் கருதுகிறோம். இந்நூலை வெளியிட அனுமதி அளித்த மொழிபெயர்ப்பாளர் தோழர் ஏ.ஜி. எத்திராஜூலு அவர்களுக்கு எமது நன்றியைத் தெரிவித்துக் கொள் கிறோம். முகப்பு அட்டைக்கு உதவும் வகையில் நூல் ஆசிரியர் ராகுல சாங்கிருத்யாயனின் நிழற்படம் அனுப்பி உதவிய கண்ண ன். எம் (Indology Department, French Institute of Pondicherry) அவர்களுக்கு எங்களது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

- பதிப்பகத்தார்.

 

தொடர்புடைய மற்ற பதிவுகள்:

Back to blog