ரெட் புக் - முன்னுரை

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/products/red-book 
முன்னுரை

தோழர் மா-சே-துங் எமது சகாப்தத்தின் மிகப் பெரிய மார்க்சிய லெனினியவாதி ஆவார். தோழர் மா-சே-துங் மேதாவிலாசத்துடன், சிருஷ்டிகரமாகவும் சகல அம்சமும் அடங்கிய முறையிலும், மார்க்சியம் - லெனினிசத் ைவழி வழியாகப் பெற்று, பாதுகத்து, அபிவிருத்தி செய்து, அதை ஒரு வழியாகப் பெற்று, பாதுகாத்து. அபிவிருத்தி செய்து, அதை ஒரு உயர்ந்த முற்றாகப் புதிய கட்டத்திற்கு முன்னேற்றியுள்ளார்.

மா-சே-துங்கின் சிந்தனையானது. ஏகாதிபத்தியம் முழுமையான தகர்வை நெருங்கிக்கொண்டும் சோஷலிசமானது பரந்த வெற்றியை நோக்கி முன்னேறிக் கொண்டும் இருக்கும் சகாப்தத்தின் மார்க்சிய-லெனினியமாகும். அது ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதற்கும் திரிபுவாதத்தையும் வறட்டு வதத்தையும் எதிர்ப்பதற்குமான ஒரு சக்திமிக்க தத்துவார்த்த ஆயுதமும் ஆகும். மா-சே துங்கின் சிந்தனையே கட்சியினதும், இராணுவத்தினதும், நாட்டினதும் சகல வேலைக்கும் வழிகாட்டும் கோட்பாடாகும்.

ஆகவே, எமது கட்சியின் அரசியல், தத்துவார்த்த வேலைகளில் மிக அடிப்படையான பணி எப்போதும் மா-சே-துங்கின் சிந்தனையாகின மகத்தான சென் தத்துவத்தை உயர்த்திப் பிடிப்பதும், நாடு எங்கணும் உள்ள மக்களின் மனங்களை அதனைக் கொண்டு ஆயுதபாணிகளாக்குவதும், ஒவ்வொரு வேலைத் துறையிலும் அதைத் தலைமையிடுலிடுவதில் விடாப்பிடியாக இருப்பதுமாக இருக்க வேண்டும். பரந்த தொழிலாளி, விவசாயி, படைவீரர் அணிகளும் புரட்சிகர இயக்குநர்களினதும் புத்திஜீவிகளினதும் பரந்த அணிகளும் எல்லோரும் மா-சே-துங்கின் சிந்தனையை நன்கு தேர்ந்துகொள்ள வேண்டும்; அவர்கள் எல்லோரும் தலைவர் மா-சே-துங்வின் கட்டுரைகளைக் கற்கவும் அவரது போதனைகளைப் பின்பற்றவும் அவரது பணித்தல்களின் பிரகாரம் நடக்கவும் தலைவர் மா-சே துங்வின் சிறந்த போராளிகளாக ஆகவும் வேண்டும்.

தலைவர் மா-சே-துங்வின் நூல்களைக் கற்பதில் ஒருவர் குறிப்பான பிரச்சினைகளை மனதில் கொண்டு அவ்வாறு செய்யவும், அவரது நூல்களைச் சிருஷ்டிகரமான முறையிற் கற்றுப் பிரயோகிக்கவும், கற்றலை நடைமுறையுடன் இணைக்கவும், விரைவிற் பயன்களை ஈட்டக் கூடியதாக அவசரமாகத் தேவைப்படுபவற்றை முதலிற் கற்கவும், தான் கற்பவற்றைப் பிரயோகிக்கப் பெரும் பிரயத்தனங்கள் செய்யவும் வேண்டும். மா-சே-துங்கின் சிந்தனையை உண்மையாக நன்கு தேர்ந்து கொள்வதற்குத் தலைவர் மாவோவின் அடிப்படையான கருத்துக்களை மீண்டும் மீண்டும் படிப்பது அவசியம், அவரது முக்கிய கூற்றுக்களிற் சிலவற்றை மனப்பாடம் செய்வதும் அவற்றை மீண்டும் மீண்டும் கற்றுப் பிரயோகிப்பதும் மிகச் சிறந்தது. வாசகர்கள் படித்துப் பிரயோகிப்பதற்காகச் செய்திப் பத்திரிகைகள் அடிக்கடி நிதர்சன நிலைமையோடு தொடர்பாகத் தலைவர் மாவோவின் மேற்கோள்களைப் பிரசுரிக்க வேண்டும். குறிப்பாக பிரச்சினைகளை மனதிற் கொண்டு தலைவர் மாவோவின் தேர்ந்தெடுக்கப்பட்ட மேற்கோள்களைக் கற்பது மா-சே-துங்கின் சிந்தனையைக் கற்பதற்கான சிறந்த ஒரு முறை, விரைவிற் பயன்களை ஈட்டுவதற்கு அனுசரணையான ஒருமுறை எனத் தலைவர் மா-சே-துங்வின் நூல்களைக் கற்பதிலும் பிரயோகிப்பதிலுமான பரந்த வெகுஜனங்களின் கடந்த சில வருடகால அனுபவம் நிரூபித்துள்ளது.

பரந்த வெகுஜனங்களுக்கு மா-சே-துங்கின் சிந்தனையை மேலும் பயனுள்ள விதத்திற் கற்க உதவி செய்யும் நோக்கத்துடன் நாம் தலைவர் மா சே-துங் மேற்கோள்களை தெரிந்தெடுத்துத் தொகுத்துள்ளோம். கற்றலை ஒழுங்கு செய்வதில் வெவ்வேறு கூறுகள் நிலைமைக்கும் பணிகளுக்கும் வெகுஜனங்களின் அப்போதைய சிந்தனைகளுக்கும் தம் வேலையின் நிலைக்கும் சம்பந்தமுடைய பகுதிகளைத் தெரிந்தெடுத்துக் கற்க வேண்டும்.

தொழிலாளர்களும் விவசாயிகளும் படை வீரர்களும் மாக்சிய - லெனினியத்தை, மா-சே- துங்சின் சிந்தனையை, நன்கு தேர்ந்து கொள்கின்ற ஒரு புதிய சகாப்தம் எமது மகத்தான தாய்நாட்டில் உதயமாகிறது. மா-சே-துங்கின் சிந்தனை ஒருகால் பரந்த வெகுஜனங்களால் விளங்கிக் கொள்ளப்பட்டதும் அது எல்லையற்ற பலத்தின் தோற்றுவாயாகவும் அளவற்ற சக்தி வாய்ந்த ஒரு ஆத்மீக அணுக்குண்டாகவும் ஆகும். தலைவர் மா-சே-துங் மேற்கோள்கள் என்ற இந்நூலின் பெரும் ரீதியிலான பிரசுரம், பரந்த வெகுஜனங்கள் மா-சே-துங்கின் சிந்தனையை விளங்கிக் கொள்வதற்கும் எமது மக்களின் சிந்தனை புரட்சிகரப்படுவதை முன்னேற்றவுமான மிக மிக முக்கியமான ஒரு நடவடிக்கையாகும். சகல தோழர்களும் பொறுப்பாயும் சிரத்தையுடனும் கற்பார்கள். நாடு பூராவிலும் தலைவர் மா-சே-துங்வின் நூல்களைச் சிருஷ்டிகரமாகக் கற்பதிலும் பிரயோகிப்பதிலும் ஒரு புதிய பேரெழுச்சியை ஏற்படுத்துவார்கள். மா-சே-துங்கின் சிந்தனையாகிய மகத்தான சென் தத்துவத்தின் கீழ், எமது நாட்டை நவீன விவசாயமும் நவீன கைத்தொழிலும் நவீன விஞ்ஞானமும் கலாசாரமும் நவீன தேசிய பாதுகாப்பும் கொண்ட ஒரு மகத்தான சோஷலிச நாடாகக் கட்டியெழுப்ப உழைப்பார்கள் என்பது எனது நம்பிக்கை.

லின் பியாஓ

1966, டிசம்பர் 16.

 

தொடர்புடைய மற்ற பதிவுகள்:

Back to blog