பெரியார் அவர்கள் உலகச் சிந்தனையாளர்களின் வரிசையில் முதன்மையானவர் ஆவர். அவருடைய கருத்துகள் நம்மை சிந்திக்கத் தூண்டின.
தந்தை பெரியாரைப் போன்றப் பகுத்தறிவு வாதிகள் அயல் நாடுகளில் பலர் இருந்தனர். அவர்களுள் மிக முக்கியமானவர்கள் இங்கர்சால், பெட்ரண்ட்ரசல், டாக்டர் கோவூர் ஆகியோர் ஆவர். ஆங்கிலத்தில் இருந்த அவர்களின் கருத்துக்களைத் தமிழில் மொழி பெயர்த்து எழுதியுள்ளேன்.
தந்தை பெரியாரின் பகுத்தறிவுக் கருத்துகளோடு மேற்கண்ட அறிஞர்களின் கருத்துகள் எவ்வாறு பொருந்தி வருகின்றன என்பதை விவரிக்கவே இந்த நூலை எழுதினேன்.
இந்த நூலை வெளியிட முன் வந்த அருமை நண்பர் தமிழ்க் குடி அரசு பதிப்பகத்தின் உரிமையாளர் திரு. வாலாசா வல்லவன் அவர்கள் பாராட்டுக்குறியவர் ஆவர். தமிழ்ப் பெருமக்கள் இந்நூலை பெரிதும் வரவேற்பார்கள் என நம்புகிறேன்.
அன்பன்
24-12-2009 சென்னை. ப. செங்குட்டுவன்
தொடர்புடைய மற்ற பதிவுகள்: