பெரியாரின் பெண்ணியம் (வசந்தம் வெளியீட்டகம்) - முன்னுரை
பெரியாரின் பெண்ணியம் (வசந்தம் வெளியீட்டகம்) - முன்னுரை
தலைப்பு |
பெரியாரின் பெண்ணியம் (வசந்தம் வெளியீட்டகம்) |
---|---|
எழுத்தாளர் | அருணன் |
பதிப்பாளர் | வசந்தம் வெளியீட்டகம் |
பக்கங்கள் | 144 |
பதிப்பு | இரண்டாம் பதிப்பு - 2015 |
அட்டை | காகித அட்டை |
விலை | Rs.250/- |
புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/periyarin-penniyam-vasantham-veliyeetagam.html
முன்னுரை
"அண்ணா: ஆட்சியைப் பிடித்த வரலாறு" நூலுக்காகப் பெரியாரின் எழுத்துக்கள், பேச்சுக்களைப் படித்துக் கொண்டிருந்த போது தான் அந்த எண்ணம் பூத்தது தெரியாத பூப்போலப் பிறந்தது.
பெண்ணியம் குறித்தும், தலித்தியம் பற்றியும் பெரியார் எவ்வளவோ சிந்தித்திருக்கிறார், விதவிதமாக எழுதியிருக்கிறார், பேசியிருக்கிறார். அவற்றைக் காலவரிசைப்படி தொகுத்துப் பார்த்தால் தமிழகத்தின் மாதர்குல வரலாறே, தலித் மக்களது சரித்திரமே தெரிந்தது. அதனால்தான் "பெரியாரின் பெண்ணியம்", "பெரியாரின் தலித்தியம்" எனும் இரு நூல்களை எழுத முடிந்தது.
அவை எழுதப்பட்டு பல ஆண்டுகள் ஓடிவிட்ட நிலையில் அவற்றை மீண்டும் அச்சிட முடிவு செய்தேன். இப்போது பெண்ணியத்தைக் கொண்டுவர முடிந்துள்ளது. அதற்காக நூலை முடி முதல் அடி வரை படித்த பொழுது பெரிய திருத்தங்கள் தேவைப்படவில்லை. சில விபரங்களைத் தற்காலப்படுத்தலே தேவையாக இருந்தது; அதைச் செய்துள்ளேன்.
முந்தைய முன்னுரையில் குறிப்பிட்டது போல இப்போதும் பெரியாரின் சிந்தனைகள் நம்மை மலைக்க வைக்கின்றன. மிகுந்த நுணுக்கமான வாழ்வியல் சிந்தனைகள் அவரது பெண்ணியத்தின் வழி வெளிப்பட்டுள்ளன. அவரது சிந்தனா துணிச்சல் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது - அதிலும் தற்கால நிலையை மனதில் கொள்ளும் போது. "தாலி பெண்ணுக்குப் பெருமையா? சிறுமையா?" என்று ஒரு தொலைக்காட்சி விவாதம் நடத்தியதற்காகவே அது தாக்குதலுக்கு ஆளானது 2015ல் நடந்த வினோதம்! ஆனால் ஒரு நூற்றாண்டுக்கு முன்பே தாலிக்குச் சேர்க்கப்பட்டிருந்த தேவையற்ற புனிதத்தை தகர்க்கத் துணிந்தவர் அந்தப் பெண்ணியவாதி என்பதை எண்ணும் போது பிரமிக்காமல் என்ன செய்வது?
சமுதாய வரலாற்றுத் தேரை பின்னோக்கித் திருப்ப பிற்போக்காளர்கள் முயலும் போது அந்தக் காலத்துப் பெரியாரின் சிந்தனைகள் இப்போதும் நவீனத்துவம் பெற்றுவிடுகின்றன. கெடுதலில் நடக்கும் ஒரே நன்மை! அதை மேலும் பெரிதாக்கிட இந்த நூலை மக்களிடம் பரவலாகக் கொண்டு செல்வது ஒரு வழி. திருமணம் போன்ற விழா நிகழ்வுகளில் இதைப் பரிசாகக் கொடுக்க அன்பர்கள் முன்வரட்டும்.
தொடர்புடைய மற்ற பதிவுகள்: