பெரியாரின் நண்பர் டாக்டர் வரதராஜுலு நாயுடு வரலாறு

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/products/periyarin-nanpar-doctor-varatharajulu-naidu-varalaru 
பெரியாரின் நண்பர் டாக்டர் வரதராஜுலு நாயுடு வரலாறு

டாக்டர் பெருமாள் வரதராஜுலு நாயுடு (1887-1957) நவீன தமிழகத்தின் சமூக, அரசியல், பத்திரிகை உலகில் அரை நூற்றாண்டுக் காலம் பல முன்னோடிச் செயல்களை ஆற்றிய பேராளுமை.

சமூக சமத்துவம் நோக்கி சேரன்மாதேவி குருகுலம் தொடங்கி குலக்கல்வித் திட்டம் வரை; நாட்டு விடுதலைக் காக ஹோம்ரூல் தொடங்கி சென்னை மாகாண சங்கம், சைமன் குழு விலக்கு, நீல் சிலை அகற்றம், உப்புச் சத்தியாகிரகம் வரை இந்நூற்றாண்டின் முதல் அரைப் பகுதியின் அனைத்துப் போராட்டங்களிலும் முதல் கொடி உயர்த்திய முன்னணிப் போராளி. தென்னாட்டுத் திலகர் என வ.உ.சியும், தமிழ்ப் பெரியார் என வ.ரா.வும் இவரைக் கொண்டாடினர். அரசியலையும் மொழியை யும் ஜனநாயகப்படுத்திய செயலாளுமை. பிரபஞ்சமித்திரன், தமிழ்நாடு பத்திரிகைகளின் ஆசிரியர். இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழைத் தொடங்கியவர்.

பெரியாரின் நண்பராய் விளங்கிய தேசியவாதியான சேலம் வரதராஜுலுவின் வாழ்க்கை வரலாறு இந்நூல். நம்பகமான முதன்மை ஆதாரங்களுடன் உருவாகி யுள்ளது இவ்வரலாறு. இதுவரை ஆய்வாளர் எவரும் பார்த்திராத ஆவணங்களின் உதவியுடன் கடும் உழைப்பில் உருவாகியுள்ள இந்நூலிற்கான ஆதாரங்கள் தமிழகத்திலிருந்து மட்டுமல்லாமல் தில்லி, கல்கத்தா, கொழும்பு ஆகிய ஊர்களிலிருந்தும் திரட்டப்பட்டவை.

தென்னாட்டுத் திலகர் என்று புகழப்பெற்ற சேலம் டாக்டர் வரதராஜுலு நாயுடுவின் (1887-1957) வாழ்க்கை வரலாறு இந்நூல். தன் பேச்சாற்றலால் தமிழகக் காங்கிரசை மக்களிடம் கொண்டுசென்ற இப்பேராளுமையின் சமூக, அரசியல், பத்திரிகைத் துறைப் பங்களிப்பை விவரிக்கும் வரலாறு இது.

தமிழக சமூக நீதிப் போராட்டங்களான சேரன்மாதேவி குருகுலப் போராட்டம், காஞ்சிபுரம் காங்கிரசு மாநாடு, கல்பாத்தி தலித் நுழைவுத் தடுப்பு, (குலக்) கல்வித் திட்ட எதிர்ப்பு . . . உள்ளிட்ட அரை நூற்றாண்டுத் தமிழக சமூக அரசியல் வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளைச் சமகால ஆதாரங்களின் அடிப்படையில் இந்நூல் விவரிக்கிறது.

வ.உ.சி., பெரியார், இராஜாஜி, காந்தி, சாவர்கர், ஷியாமா பிரசாத் முகர்ஜி, கே.எம். பணிக்கர் தொடர்பில் இதுவரை வெளிவராத பல முக்கியச் செய்திகள் முதன்முறையாக இந்நூலில் இடம் பெறுகின்றன.

அக்கால இந்திய தமிழக அரசியல் பின்புலத்தில் வரதராஜுலு நாயுடுவின் வரலாறு சுவாரசியமான நடையில் எழுதப்பட்டுள்ளது.

தங்கள் தேச சேவையின் உத்தேசம் எதுவாயிருந்தாலும், தங்கள் சுயராஜ்யத்தின் கருத்து எதுவாயிருந்தாலும், எனது தொண்டிற்கும் அதன் கருத்துக்கும் தங்கள் ஒத்துழைப்பும் இருந்தால்தான் முற்றிலும் நிறைவேறும் என்பது எனக்குத் தெரியும்.

- பெரியார் (1925)

வரதராஜுலுவுக்கு எழுதிய கடிதத்தில் 

 

தொடர்புடைய மற்ற பதிவுகள்:

Back to blog