பண்டைய இந்தியாவில் சூத்திரர்கள்

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/products/pandaiya-inthiyavil-sooththirargal
 
இரண்டாம் பதிப்பின் முன்னுரை

1958இல் இந்நூல் வெளியிடப்பட்ட பிறகு, மஹாபாரதத்தின் விமர்சனபூர்வ பதிப்பு முடிக்கப்பட்டதோடு, கெளடில்யரின் அர்த்தசாஸ்திரப் பிரதி குறித்து இரண்டு ஆய்வுகள் வெளியிடப்பட்டுள்ளன. வரலாற்றுக்கு முற்பட்ட மற்றும் வரலாற்று ரீதியான தொல்லியலும் கூட கணிசமாக முன்னேறியுள்ளன. சமூக வேறுபாடாக்கம் குறித்த மானுடவியல் ஆய்வுகளுக்கும் பல்வேறு பண்டைய சமூகங்களின் வரலாற்று ஆய்வுகளுக்கும் புதிய பரிமாணங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இவை அனைத்தின் ஒளியிலும் கூடவே வெளியிடப்பட்ட மதிப்பாய்வுகளின், கருத்துரைகளின் ஒளியிலும் சில பகுதிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. அடிமைச் சாதிகளின் பெருக்கம் குறித்து சில விளக்கங்கள் இரண்டு இணைப்புகளில் அளிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான அத்தியாயத் தலைப்புகள் மாற்றப்பட்டுள்ளன, பல அத்தியாயங்கள் முழுமையாகத் திருத்தி எழுதப்பட்டுள்ளன. முடிவு அத்தியாயம் மீண்டும் மாற்றி எழுதப்பட்டுள்ளது, நூற்பட்டியல் மேம்படுத்தப்பட்டுள்ளது.

இந்நூலை வெளியிடுவதற்கான ஒரு முக்கியமான காரணம், இது நீண்ட காலமாக விற்பனைக்குக் கிடைக்காததுதான். மேலும் முழுமையாகத் திருத்தி எழுதுவது வெளியிடப்படுவதைத் தாமதப்படுத்தியிருக்கும் என்பதோடு பொருளுள்ள வகையில் மேம்பட்டிருக்காது. தற்போதைய பதிப்பில் செய்யப்பட்டுள்ளவை அனைத்தும் வாசகரின் எதிர்ப்பார்ப்பை நிறைவு செய்யாது. எனினும் ஒன்றுமில்லாதிருப்பதை விட ஏதேனும் இருப்பது நன்று.

பொருளடைவையும் நூற்பட்டியலையும் தயாரிப்பதில் செய்த உதவிக்காக முனைவர் மோஹன் சந்துக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்ள விழைகிறேன்.

வரலாற்றுத் துறை
டெல்லி பல்கலைக் கழகம்
26 ஜூன் 1980

ஆர்.எஸ் சர்மா

தொடர்புடைய மற்ற பதிவுகள்:

Back to blog