ஒரு மனிதன் ஒரு இயக்கம் ( கலைஞர் மு. கருணாநிதி 1924 - 2018) - பதிப்புரை

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
 https://periyarbooks.com/products/oru-manithan-oru-iyakkam-kalaignar-karunanidhi-1924-2018
பதிப்புரை

மத்தியில் உண்மையான கூட்டாட்சி இலங்கிட வேண்டுமானால் மாநிலங்கள் சுயாட்சித் தன்மை பெற்று விளங்கிட வேண்டும் என்பதுதான் பொருத்தமானதாகும். மண்டபத்தின் மேற்பகுதியில் பளு அனைத்தையும் வைத்து விட்டு, பலமற்ற தூண்களை மண்டபத்தைத் தாங்குவதற்காக அமைப்பது கேலிக்குரிய ஒன்று. இன்றுள்ள மத்திய அமைப்பும் மாநில அமைப்பும் இந்த நிலையில்தான் உருவாக்கப்பட்டுள்ளன. இதனை விவரித்து விற்பன்னர் பலரும் மாநிலங்கள் சுயாட்சி பெற வேண்டும் என்பதற்கான சரியான வாதங்களை எடுத்து வைத்துள்ளனர். அவைகள் அலட்சியப் படுத்தப்படக் கூடியவைகள் அல்ல. மாநில சுயாட்சிக் கோரிக்கையை எதிர்க்கட்சியாக இருந்து எடுத்து வைத்தபோது ஏற்பட்ட அனுபவத்தை விட அதிகமான அனுபவம் திராவிட முன்னேற்ற கழகம் ஆளுங்கட்சியாக மாறிய பிறகு ஏற்பட்டுள்ளது என்பதை 1967-68 ஆண்டுகளில் தமிழக முதல்வர் அண்ணா அவர்கள் சட்டப்பேரவை, மேலவைக் கூட்டங்களில் ஆற்றிய உரைகளின் வாயிலாகவும், அதற்குப் பிறகு கழக அரசு அளித்த நிதிநிலை அறிக்கைகளின் வாயிலாகவும் உணர்ந்து கொள்ள முடியும். இந்திய சுதந்திரத்தை ஓட்டி உருவான அரசியல் அமைப்புச் சட்டத்தின் படி இயங்கிய மத்திய-மாநில அரசுகள் எதிர்பார்த்த மேன்மையை நாட்டு மக்களுக்கு அளிக்க இயலவில்லை என்பதை நமது பல ஆண்டு கால அனுபவம் நமக்குப் புரியவைக்கிறது.

 

கலைஞர் மு. கருணாநிதி, மார்ச் 5, 1975 

 

தொடர்புடைய மற்ற பதிவுகள்:

Back to blog