நின்று கெடுத்த நீதி: வெண்மணி வழக்கு - பதிவுகளும் தீர்ப்புகளும் (பதிப்புக் குறிப்பு)

புத்தகத்தை இங்கே வாங்கலாம்

     https://periyarbooks.com/products/nintru-kedutha-neethi-venmani-vazhakku-pathivugalum-         theerppugalum

 

 


1968 டிசம்பர் 25 அன்று இரவு கீழவெண்மணியில் உழைப்பாளி மக்கள் 44 பேர் உயிரோடு எரிக்கப்பட்ட கொடுஞ் செயல் தமிழகத்தில் மட்டுமல்லாமல் பிரிட்டிஷ் பத்திரிகைகளிலும் இடம் பெற்று இந்திய நிலப்பிரபுத்துவத்தின் கோர முகத்தை வெளிச்சம் போட்டு காட்டியது.

தஞ்சை மாவட்டத்தை 'தமிழகத்தின் நெற்களஞ்சியமாக' உயர்த்திக்காட்டிய அடித்தட்டு உழைக்கும் மக்களில் பெரும் பான்மையினர் 'தீண்டத்தகாதவர்' என்று இழிவுபடுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட சமூகத்தவரே ஆவர். வாழ்வின் துயரங்கள் அனைத்தையும் அனுபவித்த இம்மக்கள் பண்ணையார்களின் வயல்வெளிகளிலும் தோட்டங்களிலும் இரவு பகலாக தம் உழைப்பை உதிரமாக்கி கொட்டியவர்கள். ஆனால் இவர்களுக்கு உழைப்பதற்குத் தேவையான குறைந்தளவு உணவு கூட கிடைப்ப தில்லை. எத்தனையோ இரக்கச் சிந்தனைகள், தர்ம உபதேசங்கள், நீதி நூல்கள் இந்த நாட்டில் இருந்தும் இவர்களின் வாழ்க்கை யைப் பற்றி யாரும் கவலைப்பட்டதில்லை.

வயிற்றுச் சோற்றுக்கும், கந்தலாடைக்கும் கண்ணீர்விட்ட இம்மக்களுக்கு செங்கொடி சங்கத்தின் வழி காட்டுதலே வாழ்க்கைக் கான பாதையானது. கேள்வி கேட்பாரின்றி துயரப்பட்ட இவர் களுக்காக குரல் கொடுத்தது செங்கொடி இயக்கம். குறுகிக் கிடந்த நெஞ்சங்களை நிமிரச் செய்தது செங்கொடி இயக்கம். பொறுக்குமா அதிகார வர்க்கம்? 'கூலி கேட்டான் அத்தான் குண்டடிப்பட்டுச் செத்தான்' என்று பேசிய வசனங்கள் எல்லாம் இம்மக்களின் பிரச்சனைக்குத் தீர்வாகவில்லை. சவுக்கடியும், சாணிப்பால் கொடுமை யும் வெறும் பேச்சாலும் வசனத்தாலும் நிற்கவில்லை. செங் கொடியை தம் குலக்கொடியாக்கிக் கொண்ட ஒன்றுபட்ட போராட்டமே அவர்களது திசைவழியை மாற்றியது. காலம் மாறுவதை உணர்ந்து கொண்ட பண்ணையார்கள் தமது வர்க்கக் குணத்தைக் காட்டினர். ஆளும் அரசும் அதிகார வர்க்கமும் யார் பக்கம் என்பதை 'வெண்மணித் தீ' வெளிச்சம் போட்டு காட்டியது.

1968 டிசம்பர் 25 க்குப் பிறகு அந்நாள் ஒவ்வோராண்டும் நம்மைக் கடந்தே செல்கிறது. அந்நாளில் நடந்தவற்றையும் அரசு, நீதி மன்றம் அனைத்தும் எந்த வர்க்கம் சார்ந்தவை என்பதையும் அறிய போதுமான ஆவணங்கள் மக்கள் முன் வைக்கப்படவில்லை. அந்த வரலாற்றுக் கடமையைச் செயல்படுத்த முனைந்தோம். அதுவே இந்நூல். ஆவணங்களைத் தேடிக் கொடுத்த முனைவர் செ.த. சுமதி, மொழியாக்கத்தில் உதவிய தோழர் மயிலை பாலு, அணிந்துரை வழங்கிய தோழர் கோ. வீரையன் மற்றும் இந்நூலாக்கத்திற்கு உதவிய அனைவர்க்கும் எமது நன்றி.

 

தொடர்புடைய மற்ற பதிவுகள்:

நின்று கெடுத்த நீதி: வெண்மணி வழக்கு - பதிவுகளும் தீர்ப்புகளும் - முன்னுரை

நின்று கெடுத்த நீதி: வெண்மணி வழக்கு - பதிவுகளும் தீர்ப்புகளும் - அணிந்துரை

Back to blog