திராவிட இயக்க முன்னோடிக் கலைஞன். புரையோடிப் போன மூட நம்பிக்கைகளைச் சாடி, அறிவுக்கண் திறக்கச் செய்த கலையுலக ஆசான். நடிகனைப்போல சமூகப் புரட்சியாளன், புரட்சியாளனைப்போன்ற தலைசிறந்த நடிகன். நாடக உலகில் இவரைப் பார்த்து நடிக்கப் பழகிக் கொண்ட இளம் பிள்ளைகளே பின்னாளில் தமிழ்ப்பட உலகில் கொடி கட்டிப் பறந்த நட்சத்திர நாயகர்கள். இருப்பினும் அவர்களது படங்களில் அவர்களுக்கு அடுத்த நிலை பாத்திரங்களை ஏற்று நடித்தார். காரணம், அவருள் இருந்த அசுரக்கலைஞன் கலையை மனதார நேசித்ததால், மனிதர்களைப் போட்டியாளராகக் கருதவில்லை.
கி.மு. கி.பி. போல தமிழ் நாடக வரலாற்றையும் ரா.மு. ரா.பி. என்று பிரிக்கலாம். ராதாவுக்கு முன், ராதாவுக்குப் பின்.
நாடகங்களில் அவர் செய்த புரட்சி என்ன, அதனால் அவர் சந்தித்த கலாட்டாக்கள், அடிதடி சண்டைகள், போலீஸ் தடை, கோர்ட் கேஸ், சிறை தண்டனை......
திரையுலகில் அவர் செய்தவை.......
இத்தனைக்கும் மேலே, திரைப்படங்களால் வில்லனாக மக்களிடையே சித்தரிக்கப்பட்ட அவர், தனி மனித வாழ்க்கையில் எப்படி ஒரு உன்னத மனிதனாக இருந்தார் என்கிற ரகசியம்.... எல்லாம் இந்த நூல் மூலம் அறியலாம் நாம்!
அன்பன்
ஆர்.சி.சம்பத்