நாம் திராவிடர்

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/products/naam-dravidar
பதிப்புரை

 நாம் மனிதர்! நாம் இந்தியர்! நாம் திராவிடர்! நாம் தமிழர்! நாம் கொங்கர்! நாம் தேவர்! நாம் தலித்!

 இப்படி 'நாம்' பல்வேறு பிரகடனங்கள். இதில் எது சரி? எது தப்பு? எல்லாம் சரிதான் என்பவர்கள் அதமர்கள்; நாம் மனிதர் என்பவர்கள் உத்தமர்கள்; மற்றவர்கள் மத்திமர்கள்.

 மனிதன் எப்போதும் பிரிவினைவாதிதான். பகுத்துப் பார்ப்பதுதான் அறிவு; ஆய்வு. அண்டம் முதல் பிண்டம் வரை அறிவியல் வளர்ந்துள்ளது. கடுகைத் துளைப்பதும் அணுவைப் பிளப்பதும் ஆய்வின் வளர்ச்சி. வானம் X பூமி, பகல் X இரவு, மேடு X பள்ளம், அஃறிணை X உயர்திணை, ஆண் X பெண், தலை X கால், வலது X இடது. இவை இயற்கைதான்; இயல்புதான். வலம் உயர்வு என்பதும் இடம் தாழ்வு என்பதும்தான் பேதம். இதுதான் வேதம். பெரியாரின் சிந்தனை இவ்வகையில் முக்கியமானவை. இருபதாம் நூற்றாண்டில் சமூக நீதிக்காக அவர் மனம், மொழி, செயல் மூன்றிலும் உழைத்தார். தேசியத்திற்கு இணையாக - எதிராகத் திராவிடத்தை வைத்தார். இதனால் தமிழ் தலை நிமிர்ந்தது.

 திராவிடத்தால் வீழ்ந்தோம் என்றார் குணா, திராவிடத்தால் எழுந்தோம் என்றார் சுப.வீ. திராவிடத்தால் வாழ்ந்தோம் என்றார் மனுஷ்யபுத்திரன். திராவிடத்தால் வாழ்வோம் என்கிறார் பேரா. கமலக்கண்ணன். இவர் பெரியாரின் திராவிடச் சிந்தனைகளினால் தமிழ் மொழியும் தமிழ் இலக்கியமும், தமிழ்க் கலைகளும், தமிழ்ச் சமூகமும் பெற்ற பயனைப் பெரிதும் விரித்து ஆராய்ந்துள்ளார். திருக்குறள் தொடங்கி நவீன இலக்கியம் வரை பெரியாரது கோட்பாட்டு வழி அலசியுள்ளார். பேராசிரியரின் பணி பாராட்டத் தக்கது. நாம் தமிழர்தான் சந்தேகமே இல்லை . குறைந்தபட்சம் நாம் திராவிடர் என்போம். ஏனென்றால் திராவிடர் என்பதில் நிலம், நீர், அரசியல் சார்ந்து ஆயிரம் பேதங்கள் இருப்பினும் திராவிடம் என்பது மொழிசார்ந்த இனம் மட்டுமன்று; சமூகம் சார்ந்த தர்மம்.

பகுத்தறிவுடன்

காவ்யா சண்முகசுந்தரம்

 

Back to blog