நாடார் வரலாறு கறுப்பா...? காவியா...? - நூலாசிரியர் குறிப்பு
புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/naadaar-varalaaru-karuppaa-kaaviyaa.html
தி. லஜபதிராய், கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் ஊரில் பிறந்தவர். மதுரை சட்டக் கல்லூரியில் 1983 ஆண்டு முதல் - 1988 ஆண்டு வரை ஐந்தாண்டு இளங்கலை சட்டமும், சொத்துரிமைச் சட்டத்தில் முதுகலை பட்டமும், பயின்று பின்னர் உச்சநீதிமன்றத்தில் ஏழு ஆண்டுகள் பயிற்சி பெற்று தற்போது மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞராக பயிற்சி செய்கிறார்.
- பட்டியல் சாதியினர் மீது வன் கொடுமை தொடர்பாக Atrocities against Dalits and its Relevance to Land Reforms - 2006
- மதுரையில் சமணம் தொடர்பாக மதுரை மதிரை (Madurai Mathirai) - 2008
- மதுரை உயர்நீதிமன்ற மரங்களும் சூழலும் (Green Bench of India) என்ற நூலை நண்பர் பிரபுராஜதுரையுடன் - 2012
- தமிழகத்தில் தொல்குடிகளும் காடுகளும் ஒரு அறிமுகம் - 2016
- பட்டியல் இனம் மற்றும் பட்டியல் பழங்குடிகள் மீதான வன்கொடுமை தடுப்பு சட்ட விதிகள்.
என ஐந்து நூல்களையும் எழுத்தாளர் அருந்ததிராயின் குஜராத் இனப்படு கொலை தொடர்பான கட்டுரைகளையும் தமிழில் மொழி பெயர்த்துள்ளார். மேற்கு வங்காளம் ஹூப்ளி மாவட்ட ஆட்சியரான துணைவியார் ஸ்ரீபிரியா ஐ.ஏ.எஸ் அவர்கள் மறைவிற்கு பின் மருத்துவக் கல்லூரி மாணவரான மகன் அகிலன் ராய், சட்டக்கல்லூரி மாணவி மகள் கயல் ராய் ஆகியோருடன் மதுரை, புதுத்தாமரைப்பட்டியில் வசிக்கிறார்.