Skip to content
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000

நாடார் வரலாறு கறுப்பா...? காவியா...?

நாடார் வரலாறு கறுப்பா...? காவியா...?

தலைப்பு நாடார் வரலாறு கறுப்பா...? காவியா...?
எழுத்தாளர்  தி.லஜபதி ராய்
பதிப்பாளர்  தி.லஜபதி ராய்
பக்கங்கள் 140
பதிப்பு முதற் பதிப்பு - 2019
அட்டை காகித அட்டை
விலை ரூ.100/-  |  ரூ.90/-

 

புத்தகத்தை இங்கே வாங்கலாம்

https://periyarbooks.com/naadaar-varalaaru-karuppaa-kaaviyaa.html

கடந்த 19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகளில் நிகழ்ந்த சமூகப் போராட்டங்களின் பின்விளைவுதான் நாடார்களை சமூகத்தின் விளிம்பு நிலையிலிருந்து மையம் நோக்கிச் சிறிதளவு நகர்த்தியுள்ளது.

ஈயென இரத்தல் இழிந்தன்று என்பதைத் தவிர உழைத்து வாழும் எந்தத் தொழிலும் உயர்வானதே என்று நிலையில் நாடார்கள் தங்கள் பனையேறும் சகோதரர்களின் அடையாளங்களையும் தீண்டத்தகாத சாதியாகக் கருதப்பட்ட அடையாளங்களையும் மறைத்துவிட அல்லது மறந்து விட நினைப்பது ஒரு வகை பண்ணை அடிமைத்தன (feudal) எண்ணவோட்டமே.!

இன்று உயர்வாகவோ அல்லது தாழ்வாகவோ கருதப்படும் எல்லாச் சாதியினரும் சில ஆயிரம் வருடங்களுக்கு முன் வேட்டையாடி உணவு சேகரிக்கும் மிக மிகச் சிறிய வேறுபாடுகளைக் கொண்ட கிட்டத்தட்ட ஒரே மரபணுக்களைக் கொண்ட மனித குலத்தினர்தாம் என்பது நிரூபிக்கப்பட்ட அடிப்படையான மானுடவியல். கறுப்பு, வெள்ளை மனித இனங்களில் கூட மரபணு வேறுபாடுகள் மிக மிகக் குறைவாகவே உள்ளன.

இந்த நூலின் நோக்கம் வரலாற்றை மீள்பதிவு செய்வது மட்டுமே மாறாக குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்வதன்று சமீப காலமாக முகநூலிலும் பிற சமூக ஊடகங்களிலும் நேரடியாகவும் மறைமுகமாகவும் இஸ்லாமிய - கிறிஸ்தவ சமூகத்தினருடனும் பிற பட்டியல் இன விளிம்பு நிலை மக்களுடன் நிற்க வேண்டிய நாடார்களின் மனவோட்டத்தில், இந்து வலது சாரி சிந்தனை மிகுதியாக இருப்பதைக் காண முடிகிறது. இந்நிலையில் கடந்தக் காலத்தை திரும்பிப் பார்ப்பது மிகவும் அவசியமாகிறது.

 

 

தொடர்புடைய மற்ற பதிவுகள்:

நாடார் வரலாறு கறுப்பா...? காவியா...? - இந்து சத்ரிய, சாதிய மேலாதிக்கத்திற்கு எதிரான போர்க்குரல்

நாடார் வரலாறு கறுப்பா...? காவியா...?

நாடார் வரலாறு கறுப்பா...? காவியா...? - நூலாசிரியர் குறிப்பு

நாடார் வரலாறு கறுப்பா...? காவியா...? - பொருளடக்கம்

நாடார் வரலாறு கறுப்பா...? காவியா...? - காணொளிகள்

Previous article திராவிடர் இயக்கப் பார்வையில் பாரதியார் - ஆசிரியர் குறிப்பு