மனுதர்ம சாஸ்திரம்

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/products/manudharma-sasthiram
பதிப்புரை

சமூக மாற்றத்தில், வழக்கிழந்து போவதே வளர்ச்சிக்கு அடையாளம். இந்தியச் சமூகத்தில் பாரம்பரிய வழக்குகள் இன்றும் இறுக்கமாகவே செயலாற்றுகின்றன. இடையிடையே விவாதப் படுத்தப்பட்டாலும் பழைய மரபுகள் மக்கள் சிந்தனையில் மாறாமல் இருப்பதுடன் நடைமுறையிலும் தொடரவே செய்கின்றன. ஆட்சி - அதிகாரம் - தலைமை அனைத்தும் பாரம்பரிய சமூக அமைப்பை அப்படியே ஏற்காவிட்டாலும் அவற்றின் சாரத்தைக் கைக்கொள்ள விழைவதையே காண்கிறோம்.

இந்தியச் சமூகத்துக்கு கருத்தளிக்க வந்த கபிலர், புத்தர், மகாவீரர் மற்றும் பலரையும் பின்தள்ளி 'மநு 'வே அனைவரையும் வழி நடத்துபவராக இன்றும் இருக்கிறார். அள்ளியும் குறையாத அதன் வளம் பிள்ளைப் பிறப்பிலிருந்தே தொடங்கிவிடுகிறது. உலக மயமாதலில் இந்தியாவின் பங்களிப்பு எப்படியானாலும் 'இந்தியா' மயமாவதில் அது தன்னிறைவுடனேயே இருக்கிறது. இந்தியச் சமூகத்தின் தனி முத்திரையாக விளங்கும் மநுவின் சட்ட திட்டங்களை கல்லார் - கற்றார் அனைவருமே கைக்கொள்வதற் கான காரணங்களை இந்நூலைப் படிப்பதன் மூலம் ஆழமாக அறிய முடிகிறது. நமது செயல் ஒவ்வொன்றுக்கும் அது விளக்கம் சொல்லு கிறது. இன்றைய இந்தியாவை நம் கண்முன்னால் நிறுத்துகிறது. என்றைக்கோ எழுதப்பட்ட சட்டம் இன்னும் நடப்பில் இருக்கின்ற காரணத்தை அறிய ஒவ்வொருவரும் 'மதுவை அவசியம் அறிய வேண்டும்.

எத்தனை மொழியாக்கங்கள், பதிப்புகள் வெளிவந்தாலும் தேவை குறையாமல் இருக்கின்ற இந்நூலை வெளியிட வாய்ப் பளித்தவரும் 'சேக்கிழார் அடிப்பொடி' என அன்போடு தஞ்சை மக்களால் அழைக்கப்படுபவருமான பெரியவர் டி. என். இராமச்சந்திரன் அவர்களுக்கும், அவரோடு தொடர்பு கொண்டு இந்நூல் வெளிவர உறுதுணையாகயிருந்த 'நிறப்பிரிகை ஆசிரியர் குழுவைச் சேர்ந்த தோழர் பொ.வேல்சாமி, தோழர் அ. மார்க்ஸ் ஆகியோருக்கும் எங்களது நன்றி என்றும் உரியது.

பெ.நா. சிவம்

 

தொடர்புடைய மற்ற பதிவுகள்:

மனுதர்ம சாஸ்திரம் - பொருளடக்கம்

Back to blog