மந்திரமும் சடங்குகளும் - இரண்டாவது பதிப்பின் முன்னுரை

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/products/manthiramum-sadangukalum
 
இரண்டாவது பதிப்பின் முன்னுரை

1988இல் வெளியான 'மந்திரம் - சடங்குகள்' என்ற நூலின் இரண்டாவது பதிப்பு மந்திரமும் சடங்குகளும்' என்ற தலைப்புடன் தற்போது வெளியாகிறது. முதற்பதிப் பில் இடம்பெறாத ஒன்றிரண்டு புதிய செய்திகள் இப் பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன.

இவ்விரண்டாம் பதிப்பை மிகுந்த ஆர்வத்துடன் வெளியிடும் 'மக்கள் வெளியீடு' பொதுப் பதிப்பாசிரியரும் என் எழுத்துப் பணியில் தொடர்ந்து உறுதுணையாக இருப்பவருமான அன்புத் தோழர் மே.து. ராசுகுமார் அவர் களுக்கும் 'மக்கள் வெளியீடு' உரிமையாளர் திருமதி . ரா. வசந்தா அவர்களுக்கும் என் நன்றி உரியது. இப் பதிப்பை வெளிக்கொணரத் தூண்டுதலாய் இருந்த நண்பர் ஆ. இரா. வேங்கடாசலபதி அவர்களுக்கும் இரண் டாவது பதிப்பின் கையெழுத்துப்படியைத் தயாரிப்பதில் உறுதுணையாய் இருந்த செல்வி கி. சுந்தரசெல்விக்கும் என் நன்றி உரியது.

இந்நூலின் முதற்பதிப்பை வெளியிட்டுதவிய நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்திற்கும் நூலை வாங்கி உற்சாகப்படுத்திய வாசக நண்பர்களுக்கும் இரண்டாவது பதிப்பை வாசிக்க இருக்கும் வாசக நண்பர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஆ. சிவசுப்பிரமணியன்

Back to blog