மந்திரமும் சடங்குகளும் - மூன்றாம் பதிப்பின் முன்னுரை

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
 
https://periyarbooks.com/products/manthiramum-sadangukalum
மூன்றாம் பதிப்பின் முன்னுரை

இப்பதிப்பில் மழையும் நாட்டார் வழக்காற்றியலும்' என்ற கட்டுரை புதிதாக இணைக்கப்பட்டுள்ளது. பேராசிரியர் தே.லூர்து தொகுத்துப் பதிப்பித்த நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுகள்' என்ற நூலில் இக்கட்டுரை இடம்பெற்றிருந்தது. பல ஆண்டுகளாக இந்நூல் விற்பனை யில் இல்லை. எனவே உள்ளடக்க ஒற்றுமையின் அடிப் படையில் இக்கட்டுரை இம்மூன்றாம் பதிப்பில் இடம் பெற்றுள்ளது.

கத்தோலிக்கத் தேவாலயங்களில் இடம்பெறும் 'முளைப்பாரி' தொடர்பான படங்கள் இப்பதிப்பில் புதிதாக இடம்பெற்றுள்ளன. இப்படங்களை வழங்கியுதவிய அருட். திரு. ச. தே. செல்வராசு அடிகளார் அவர்களுக்கும், திரு. பீட்டர் ஆரோக்கியராஜ் (நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம், தூய சவேரியார் கல்லூரி, பாளையங் கோட்டை) அவர்களுக்கும் என் நன்றியுரியது.

இம் மூன்றாம் பதிப்பை வெளியிடும் காலச்சுவடு பதிப்பகத்திற்கு என் நன்றியுரியது.

இந்நூலை கணினியில் வடிவமைத்த சுபா , மெய்ப்பு பார்த்துதவிய ஸ்ரீசங்கர் ஆகியோருக்கும் என் நன்றியுரியது.

ஆ. சிவசுப்பிரமணியன்
தூத்துக்குடி

Back to blog