புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/products/m-r-radha-kalagakkaaranin-kathai
எம்.ஆர். ராதா - புரிதலுக்கு அப்பாற்பட்ட குணசித்திரம், பிறவிக் கலைஞர். புரட்சிக்காரர். துணிச்சல்காரர். நாடக மேடை சூப்பர் ஸ்டார். தனித்துவமான மனிதர். தன்னிகரற்ற நட்சத்திரம் எம்.ஆர். ராதா. அந்தக் காலத்தில் தனது அசத்தலான நாடகங்கள் மூலம் ராதா அடைந்த உயரத்தை, எந்தத் திரைப்பட நட்சத்திரமும் என்றைக்குமே எட்ட முடியாது. திரையில் தோன்றும் வில்லனைக் கூட விழுந்து விழுந்து ரசிக்கலாம் என்ற சினிமா கலாசாரத்தை ஆரம்பித்து வைத்தவர் ராதாவே. அன்றைய திராவிட இயக்க அரசியலில் ராதாவின் பங்கு குறிப்பிடத் தக்கது. பெரியாருக்குத் தோள்கொடுத்து பகுத்தறிவைப் பரப்ப ராதா செய்த பணிகள் அபாரமானவை. ராதாவின் ராமாயணம் என்ற ஒற்றை நாடகம், தமிழகத்தையே உலுக்கியது. அடிதடி, கல்வீச்சு, கலவரம், 144 தடை உத்தரவு. அனைத்தையும் மீறி ராதாவுக்காக குவிந்தனர் ரசிகர்கள். ராதாவை அடக்குவதற்காக நாடகத் தடைச் சட்டம் என்ற தனிச்சட்டத் தைக் கொண்டு வந்தது அரசாங்கம். அனைத்தையும் மீறி களமிறங்கிப் போராடிய ராதாவுக்கு என்றைக்குமே நாற்காலிக் கனவு இருந்ததில்லை. திராவிடர் கழகத்துடன் நெருக்கம் காட்டினாலும் பெரியார் தொடங்கி அண்ணா , கருணாநிதி, எம்.ஜி.ஆர் என்று யார் தவறு செய்ததாகத் தோன்றினாலும் அதை வெளிப்படையாக விமரிசித்தவர் எம்.ஆர்.ராதா. காங்கிரஸ் என்றாலே ஆகாது என்றாலும் காமராஜரைப் போற்றியவர். பகுத்தறிவு பேசினாலும், 'பொன்னார் மேனியனே' என்று பக்திபொங்கப் பாடி நடித்தவர். அசாதாரண சூழ்நிலையைக்கூட தன் நகைச்சுவை உணர்வால் சாதாரணமாக மாற்றுபவர்.
நூற்றாண்டு கண்ட எம்.ஆர். ராதா என்ற உண்மைக் கலைஞனின் உன்னதமான வாழ்க்கையை, நாளைய தலைமுறையினருக்கும் கொண்டு சேர்க்கும் இந்தப் புத்தகம்.
தொடர்புடைய மற்ற பதிவுகள்: