கருஞ்சட்டைப் பெண்கள்
சுயமரியாதை இயக்கக் கொள்கைகளில் உயிர்நாடியாக விளங்குவது சமூக நீதியும், அதன் உள்ளடக்கங்களில் ஒன்றான பெண் விடுதலையுமே என்பதை நாமறிவோம். பேச்சளவில் மட்டுமின்றிச் செயலிலும் பெண்களை முன்னிறுத்திய இயக்கம், திராவிட இயக்கம். வீட்டை விட்டுப் பெண்கள் வெளியில் வரவே தயங்கிய கால கட்டத்தில் அவர்களைப் பொது மேடைகளிலும், போராட்டங்களிலும் கொண்டு வந்து நிறுத்தி, ஒரு பெரும் புரட்சியை இம்மண்ணில் ஏற்படுத்தியவர் தந்தை பெரியார் அதனால்தான் 1938-ம் ஆண்டு நடைபெற்ற பெண்கள் மாநாட்டில் அவருக்குப் பெரியார் என்று பட்டம் வழங்கப்பட்டது. அதுவே இன்று வரை நிலைத்தும் நிற்கிறது.
பெரியாரின் ஆணையை ஏற்றுக் களத்தில் நின்ற வீராங்கனைகளின் படை வரிசை மிக நீளமானது. அவர்களுள் சிலரை இப்புத்தகம் அறிமுகப் படுத்துகிறது. சமூக அக்கறையுள்ள ஒவ்வொருவர் கைகளிலும் இருக்க வேண்டிய புத்தகம் இது.
அந்தப் படை வரிசையின் இன்றையத் தொடர்ச்சியாகவும், புதிய குரல் என்னும் இயக்கத்தைத் தலைமை ஏற்று நடத்தும் பெண்ணாகவும் உள்ள தோழர் ஓவியாவின் இந்நூலை வெளியிடுவதில் கருஞ்சட்டைப் பதிப்பகம் பெருமை கொள்கிறது- இன்னும் பல வீராங்கனைகள் இம்மண்ணில் உருவாக வேண்டும் என்னும் பேராவலுடன்!
- 'பெல்' ராஜன்,
இயக்குனர், கருஞ்சட்டைப் பதிப்பகம்
கருஞ்சட்டைப் பெண்கள் - தோழர் சல்மா
தோழர் ஓவியா எழுதிய கருஞ்சட்டைப் பெண்கள் நூல் பற்றி தோழர் அருள்மொழி
தொடர்புடைய மற்ற பதிவுகள்:
கருஞ்சட்டை பெண்கள் - அணிந்துரை#1
கருஞ்சட்டை பெண்கள் - அணிந்துரை#2