கலைஞரைப் பற்றிப் பேரறிஞரும் பிற அறிஞர்களும் - வாழ்த்துரை

கலைஞரைப் பற்றிப் பேரறிஞரும் பிற அறிஞர்களும் - வாழ்த்துரை

தலைப்பு கலைஞரைப் பற்றிப் பேரறிஞரும் பிற அறிஞர்களும்
எழுத்தாளர் முனைவர் சு.எழுமலை
பதிப்பாளர் பாவை பதிப்பகம்
பக்கங்கள் 350
பதிப்பு முதற் பதிப்பு - 2018
அட்டை தடிமனான அட்டை
விலை ரூ.750/- | ரூ.600/-

 

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/kalaignaraip-pattri-perariganarum-pira-arignarkalum.html

 

திராவிட முன்னேற்றக் கழகம்

(தலைமை நிலையம்)

மு.க.ஸ்டாலின்
தலைவர்

"அண்ணா அறிவாலயம்"
367 & 389, அண்ணா சாலை
தேனாம்பேட்டை சென்னை – 600 018

வாழ்த்துரை

""கலைஞரைப் பற்றிப் பேரறிஞரும் பிற அறிஞர்களும்" என்ற தலைப்பில் "தலைவனை வியந்த தலைவர்கள்" அத்தியாயம் தொடங்கி, "இதழாளர்கள்" அத்தியாயம் வரை தலைவர் கலைஞர் அவர்களைப் பாராட்டிய, வாழ்த்தியவர்களின் நல்ல பல கருத்துக்களை இடம்பெறச் செய்துள்ள முனைவர் சு. ஏழுமலை அவர்களை மனதாரப் பாராட்டுகிறேன்.

இந்த நூலில் தலைவர் கலைஞர் அவர்களின் முழுப்பக்கப் புகைப்படத்தை வெளியிட்டு அதனடியில், "உன் பாதங்கள் பட்ட இடமெல்லாம் சமூக நீதியும் சமத்துவமும்" என்று பொறிக்கப்பட்டுள்ளா அந்தப் பொன்னான வரியே நான் 252 பக்கங்களில் தலைவர் கலைஞர் பற்றி இடம்பெற்றுள்ள கருத்துக்களுக்கு எல்லாம் மகுடமாகத் திகழ்வதாக எண்ணுகிறேன். தலைவர் கலைஞர் அவர்கள் தன் வாழ்நாள் முழுவதும் பத்திரிக்கைச் சுதந்திரத்திற்காகப் போர்முரசு கொட்டிப் பாதுகாப்பு அரணாகத் துணிந்து நின்றவர். அவருக்கு இதழாளர்கள் அளித்த பாராட்டுதல்களை இந்நூலின் இறுதி அத்தியாயமாக இடம்பெறச் செய்திருப்பது சாலப்பொருத்தமானது.

தந்தை பெரியார் முதல் தேசியத் தலைவர்கள், பல்வேறு மாநில முதல்வர்கள், நீதியரசர்கள், தமிழகத்தில் உள்ள தலைவர்கள், திரையுலகப் பிரமுகர்கள், எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ளவர்களின் கருத்துக்களை மிக அருமையாகத் தொகுத்துக் கழக உடன்பிறப்புகளின் கைகளில் தவழ வேண்டிய ஒரு சிறந்த நூலினைப் பெருமுயற்சியெடுத்துப் பிரசுரித்திருப்பதற்காக முகாசாகர் திரு சு. முழுமயாய அவர்களுக்கு எனது இதய பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புடன்,

(மு.க. ஸ்டாலின்)

Back to blog