கலைஞரைப் பற்றிப் பேரறிஞரும் பிற அறிஞர்களும் - அணிந்துரை
தலைப்பு | கலைஞரைப் பற்றிப் பேரறிஞரும் பிற அறிஞர்களும் |
---|---|
எழுத்தாளர் | முனைவர் சு.எழுமலை |
பதிப்பாளர் | பாவை பதிப்பகம் |
பக்கங்கள் | 350 |
பதிப்பு | முதற் பதிப்பு - 2018 |
அட்டை | தடிமனான அட்டை |
விலை |
ரூ.750/- | ரூ.600/- |
புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/kalaignaraip-pattri-perariganarum-pira-arignarkalum.html
எஸ். ஜெகத்ரட்சகன்
மேனாள் மத்திய இணையமைச்சர்
(வர்த்தகம் மற்றும் தொழில் துறை)
இந்திய அரசு
வீடு:
1, முதல் பிரதான சாலை,
கஸ்தூரிபாய் நகர்,
அடையாறு,
சென்னை - 600 020.
: 044-2491 3113
அலுவலகம்:
25, மகாலிங்கம் தெரு,
மகாலிங்கபுரம், நுங்கம்பாக்கம்,
சென்னை - 600 034.
:044 28173144, 45
அணிந்துரை
வானத்தை ஒளி வீசும்படி செய்து வந்த சூரியன் மண்ணில் வந்து பிறந்தது போல் தோன்றினார் கலைஞர். விழிகளுக்கும் பார்வைக்கும் எப்படித் தொடர்பு உண்டோ அது போல் மக்களுக்கும் கலைஞருக்குமான தொடர்பு:
வானம் இல்லாத கார் இல்லை . அது போல் கலைஞரைப் போற்றிப் பாடாத துறையினர் இல்லை . இருபத்து ஆறு எழுத்தில் ஆங்கிலம் முடிந்து விடும். 247 எழுத்தில் தமிழ் முடிந்து விடும்.
ஆனால் எம் தலைவர் எத்தனை துறையில் உள்ளவர்கள் போற்றினாலும் அவற்றில் முடிபவர் இல்லை என்று முயற்சி செய்து எழுதிய நூல். காலத்தை வென்றது மூலமாக ஞாலத்தை வென்ற தலைவரை எழுத்துக் கோலங்களால் வரைந்த நூல் இது.
எத்தனை மேதைகள் தூவிய விதைகளில் விளைந்த ஒரே மலராகக் கலைஞர் பூத்தார் என்பதை யாத்துத் தந்துள்ளார் சகோதார் ஏழுமலை அவர்கள்.
ஏழு - மலை இருக்க எனக்கு என்ன மனக்கவலை என்று இருந்து வருபவன் நான். இங்கும் ஏழுமலை அவர்கள் மக்கள் மனக்கவலை தீரத்த மாதலைவர் பற்றி மாபெரும் மேதைகள் கூறியது எல்லாம் தொகுத்து வழங்கியுள்ளார். வாழ்த்துக்கள்.
அன்புடன்
(எஸ்.ஜெகத்ரட்சகன்)