காலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம் மூலப் பதிப்புக்கு நான் முன்னுரை எழுதவில்லை. அதை கார்ல் சாகன் செய்தார். அதற்குப் பதிலாக "நன்றி" எனத் தலைப்பிட்ட சிறு குறிப்பு மட்டும் வரைந்தேன். அதில் நான் ஒவ்வொருவருக்கும் நன்றி தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. ஆனால் எனக்கு ஆதரவு நல்கிய அறக்கட்டளைகள் சிலவற்றைக் குறிப்பிட்டிருப்பதில் அவற்றுக்கு அவ்வளவாக மகிழ்ச்சி யில்லை. ஏனென்றால் ஆதரவு கோரும் விண்ணப்பங்கள் பெருமளவு அதிகரிக்க இது வழிவகுத்து விட்டது.
இந்நூல் சாதித்துள்ளதைப் போன்ற ஏதோ ஒன்றைச் செய்து காட்டும் என்று எனது வெளியீட்டாளர்களோ, எனது முகவரோ, நானோ அல்லது வேறு எவரோ எதிர்பாக்கவில்லை என நினைக்கிறேன். லண்டன் சண்டே டைம்ஸ் ஏடு விற்பனையில் சாதனை படைத்த நூல்களின் பட்டியலில் 237 வாரங்கள் இந்நூலுக்கு இடமளித்தது, வேறு எந்த நூலும் இப்பட்டியலில் இவ்வளவு நீண்ட காலம் இடம் பெற்றதில்லை (விவிலியத்தையும் ஷேக்ஸ்பியரையும் கணக்கில் கொள்ளாதது போல் உள்ளது). இந்நூல் ஏறத்தாழ 40 மொழிகளில் பெயர்க்கப்பட்டிருக்கிறது. உலகிலுள்ள ஆண்கள், பெண்கள், குழந்தைகளில் 750 பேருக்கு ஒரு படி என்ற அளவில் விற்பனையாகியுள்ளது. மைக்ரோசாஃப்டைச் சேர்ந்த நாதன் மிர்வோல்டு (முனைவர் படிப்புக்குப் பிந்தைய ஆராய்ச்சியில் என் தோழராக இருந்தவர்) குறிப்பிட்டார்: பாலியல் நூல்களை மடோனா விற்றிருப்பதைக் காட்டிலும் இயற்பியல் நூல்களை நான் அதிகமாய் விற்றுள்ளேன்.
நாம் எங்கிருந்து வந்தோம்? அண்டம் ஏன் இப்படி இருக் கிறது? என்பவை போன்ற பெரிய வினாக்களில் பரவலான ஆர்வம் இருப்பதைக் காலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம் அடைந்த வெற்றி காட்டுகிறது. ஆனால் நூலின் சில பகுதி களைப் புரிந்து கொள்வது பலருக்கும் கடினமாகவே இருந்துள்ளது என்பது எனக்குத் தெரியும். ஏராளமான பட விளக்கங்களைச் சேர்த்து நூலை எளிதாக்குவது இந்தப் புதிய பதிப்பின் நோக்கமாகும். படங்களையும் அவற்றுக்கான விளக்கக் குறிப்புகளையும் நீங்கள் பார்த்தாலே போதும், என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை ஓரளவு அறிந்து கொள்வீர்கள்.
இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி நூலை நாளது வரை புதுமைப்படுத்தவும் முதன் முதலில் (1988 ஏப்ரல் முட்டாள் தினத்தன்று) இந்நூலை வெளியிட்டதிலிருந்து பெறப்பட்ட புதிய கோட்பாட்டு முடிவுகளையும் நோக்காய்வு முடிவுகளை யும் சேர்த்தேன். புழுத்துளைகள், காலப் பயணம் பற்றிய புதிய அதிகாரத்தைச் சேர்த்திருக்கிறேன். வெளி - காலத்தின் வேறுபட்ட வட்டாரங்களை இணைக்கிற சிறு குழாய்களை, அதாவது புழுத்துளைகளை நாம் படைக்கவும் பாரமரிக்கவும் கூடிய வாய்ப்பு வழியை ஐன்ஸ்டைனின் பொதுச் சார்பியல் கோட்பாடு வழங்குவதாகத் தோன்றுகிறது. அப்படி வழங்கி னால், உடுத்திரளைச் சுற்றிய விரைவான பயணத்துக்கு அல்லது காலத்தில் பின்னோக்கிய பயணத்துக்கு இவற்றை நாம் பயன்படுத்த இயலக் கூடும். எதிர்காலத்திலிருந்தான எந்த ஒருவரையும் நாம் பார்த்ததில்லைதான் (அல்லது பார்த்திருக்கிறோமோ?). ஆனால் இதற்குக் கூடுமான ஒரு விளக்கத்தை நான் எடுத்துரைக்கிறேள்.
"இரட்டைத் தன்மைகளை" அல்லது தெளிவாக வேறுபட்ட இரு இயற்பியல் கோட்பாடுகளுக்கு இடையேயான தொடர்பு களைக் கண்டறிவதில் அண்மையில் ஏற்பட்டுள்ள முன் னேற்றத்தையும் எடுத்துரைக்கிறேன். இயற்பியலின் முழு ஒருங்கிணைந்த கோட்பாடு ஒன்று இருக்கிறது என்பதற்கு இந்தத் தொடர்புகள் வலுவான அறிகுறியாகும். ஆனால் இந்தக் கோட்பாட்டை ஓர் ஒற்றை அடிப்படை வரையறை யாகக் கூறுவது இயலாமற் போகலாம் என்பதையும் இவை காட்டுகின்றன. இதற்குப் பதிலாக, நாம் வேறுபட்ட சூழல்களில் உள்ளீடான கோட்பாட்டின் வேறுபட்ட கருத்துகளைப் பயன்படுத்த வேண்டியிருக்கக் கூடும். ஓர் ஒற்றை வரைபடத்தின் மீது புவிப் பரப்பைக் குறித்துக்காட்ட இயலாது. வேறுபட்ட வட்டாரங்களுக்கு வேறுபட்ட வரை படங்களைப் பயன்படுத்த வேண்டி இருக்கும் நமது நிலையைப் போன்றதாக இது இருக்கக் கூடும். இது அறிவியல் விதிகளின் ஒருங்கிணைப்பைப் பற்றிய நமது பார்வையில் ஒரு புரட்சியாய் இருக்கும். ஆனால் அண்ட மானது அறிவார்ந்த விதிகளின் கணம் ஒன்றினால் ஆளப் படுகிறது, இந்த விதிகளைக் கண்டுபிடிக்கவும் புரிந்து கொள்ளவும் நம்மால் முடியும் என்ற பேருண்மை இதனால் மாறி விடாது.
நோக்காய்வின் பக்கம் வந்தால், அண்டவியல் பின்னணி ஆய்வுத் துணைக்கோள் அல்லது ஏனைய கூட்டு முயற்சிகளின் வாயிலாக அண்டவியல் நுண்ணலைப் பின்னணிக் கதிர் வீச்சிலான ஏற்றவற்றங்களை அளவிடுவது இதுவரை ஏற் பட்டுள்ளவற்றில் மிக முக்கியமான வளர்ச்சியாகும். இந்த ஏற்றவற்றங்கள் படைப்பின் சுவடுளாகும், பிறவகையில் சரளமாகவும் ஒரே சீராகவும் முற்பட்ட அண்டத்தில் நேரிட்ட சின்னஞ்சிறு தொடக்க ஒழுங்கீனங்களாகும். இந்த ஒழுங் கனங்களே பிற்காலத்தில் உடுத்திரள்களாகவும் விண்மீன் களாகவும் நம்மைச் சுற்றி நாம் காணும் அனைத்துக் கட்டமைப்புகளாகவும் வளர்ந்தன. இவற்றின் வடிவம் அண்டத்திற்கு எல்லைகளோ கற்பனைக் காலத் திசையிலான விளிம்புகளோ இல்லை என்ற கொள்கையின் ஊகங்களுக்கு முத்துச் செல்கிறது. ஆனால் இந்தக் கொள்கையைப் பின்னணி பிலுள்ள ஏற்றவற்றங்களுக் கூடுமான ஏனைய விளக்கங்களி லிருந்து வேறுபடுத்திக் காட்ட மேற்கொண்டு நோக்காய்வுகள் செய்ய வேண்டியிருக்கும். ஆனால் நாம் வாழும் அண்டம் முற்ற முழுக்கத் தன்னிறைவானதும் தொடக்கமோ முடிவோ இல்லாததும் ஆகும் என்று நாம் நம்பலாமா என்பதை ஒரு சில ஆண்டுளுக்குள் நாம் தெரிந்து கொள்வதாக இருக்கும்.
ஸ்டீஃபன் ஹாக்கிங்
கேம்பிரிட்ஜ், மே 1996