ஜோதிராவ் புலே - தேர்வு செய்யப்பட்ட படைப்புகள் - நன்றி
புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/jothirao-phule-theruvu-seyyappatta-padaippugal.html
நன்றி
1990 ஆம் ஆண்டில் புலேயின் மொத்த நூல்களையும் முறையாகப் படித்தேன். சூரத்தில் நடத்தப்பட்ட அவரது நூறாவது நினைவு தினத்தின் கருத்தரங்கம் அதற்கு உதவியாக இருந்தது. சில குறிப்புக்களை வைத்துக்கொண்டு அப்போது பேசினேன். சில கருத்துக்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தாலும், பல காரணங்களால் எனது கருத்துரையை முழுமையாக எழுத முடியவில்லை. அக்குறிப்புக்களின் உதவியோடு இப்புத்தகத்தின் முன்னுரை எழுதப்பட்டுள்ளது.
டெல்லியிலுள்ள ஜன நாட்டிய மஞ்ச் என்ற நாடகக் குழு, புலேயைப் பற்றி ஒரு நாடகம் எழுதும்படியாக என்னைக் கேட்டபோது இரண்டாவது முறையாக அவரைப் பற்றிப் படித்தேன். சத்யஷோதக் (Satyashodhak) என்ற அந்த நாடகம் புலேயின் வாழ்க்கை மற்றும் அவர் வாழ்ந்த காலத்தின் சூழல் பற்றி எழுதப்பட்டது. முதன்முதலில் இந்நாடகம் 1992 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மேடையேறியது. அதன்பின் மராத்திய மொழியில் வெளியிடப்பட்டது.
புலேயின் எழுத்துக்களோடு மூன்றாவது முறையாக உறவாடும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்த லெப்ட்வேர்டு புத்தகப் பதிப்பாசிரியக் குழுவிற்கு எனது நன்றியை உரித்தாக்குகிறேன். ஏறத்தாழ கடந்த ஒரு வருடமாக புலேயின் புத்தகங்களின் துணையோடு இருந்திருக்கிறேன். அது ஒரு இனிய அனுபவம். ஆனால் அது அப்படியொன்றும் சாதாரண வேலை அல்ல. மொழிபெயர்ப்பில் என்னோடு பணிபுரிந்த சக மொழிபெயர்ப்பாளர்களான மாயா பண்டிட் ஊர்மிளா பிர்டிகர் மற்றும் அனிகேட் ஜாவரே முதலியவர்களுக்கும் என் நன்றி. அவர்களது மொழிபெயர்ப்பினை சில திருத்தங்கள் செய்வதற்கு எனக்கு சுதந்திரம் கொடுத்தனர். எங்களது மொழிபெயர்ப்பில் புலேயின் மராத்திய மொழியின் சாயல் சிறிதாவது அமையும் என்று நம்புகிறோம். முன்னுரையைப் படித்த பின் ராம் பாபட் தனது கூர்மையான விமர்சனக் கருத்துக்களைத் தந்துள்ளார். கைப்பிரதியைக் கவனமாகவும் ஆர்வத்தோடும் வாசித்த மலோயாஸ்ரீ ஹாஸ்மி இந்த மொழிபெயர்ப்பைச் செம்மைப்படுத்த உதவியுள்ளார். பொருளடக்க அட்டவணையை (index) தயாரிக்க உதவியுள்ளார். லெப்ட்வேர்டு பதிப்புத் துறையைச் சார்ந்த ஆசிரியர் குழு இந்த இனிய நூலினைத் தயாரிப்பதில் கடினமாக உழைத்துள்ளனர். இந்நூலிலுள்ள கருத்துக்கள் அனைத்தினையும் அலசிப் பார்த்து ஓய்வின்றி பதிப்பு வேலையில் ஈடுபட்ட சுதன்வா தேஷ்பாண்டே அவர்களுக்கு எனது நன்றி. அவரது ஈடுபாடும் அர்ப்பணிப்பும் இல்லையெனில் இந்நூல் உருவாகியிருக்க முடியாது என்பதே உண்மை .
ஜி.பி. தேஷ்பாண்டே