ஜாதியற்றவளின் குரல்
சாதி ஒழிப்பு என்கிற மய்ய ஊற்றின் கிளை ஆறுகளாய் வாசிக்கும் மனங்களை நோக்கி வெள்ளமெனப் பாய்கின்றன ஜெயராணியின் இக் கட்டுரைகள் பார்ப்பன, சாதி இந்து மூளைகள் பேசத் தவிர்க்கிறதுயரந் தோய்ந்த அதே சமயத்தில் நிமிர்ந்து நிற்கிற மனித இருப்பின் சமூகக் கதையாடல்கள்.
இவை சாதியம் குறித்தும் மனித உரிமைகள் பற்றியும் ஆண் கதையாடல் 'களே பரப்பப்பட்டு வரும் நமது சமூக வெளியில் கலை, இலக்கியம், கவிதை, உடலரசியல் என்கிற உரையாடல்களையெல்லாம் முன்னெப் (போதைக் காட்டிலும் பெண்கள் துடிப்பாய், உயிர்ப்பாய் தற்போது விவாதித்து வருகின்றனர் என்கிற போதிலும் பொதுத் தளத்திலோ நமது பெண்ணுடலை கட்டுப்படுத்துகிற- கையாள்கிற சாதியம், இந்துமதம், அதுசார்ந்த ஆணாதிக்கம் குறித்த சிறு துணுக்கையும் தமது எழுத்தின், (பேச்சின் மூலமாக சமூகத் தளத்தில் முன்வைப்பதில்லை.
அப்படியல்லாத 'உடலரசியல்' இன் னொரு பார்ப்பனிய Wணாதிக்கப் பதிப்பகங்களின் வெறும் சந்தை சரக்காக மாறுவது பற்றிய எந்த வொரு கவலையும் இவர்களுக்கில்லை. சாதியத்திற் கெதிராகவும் அதன் அழுகிய சடல மான இந்து மதம் குறித்தும் கட்டுரை வடிவத்தில், சமூக இயக்கங்களின் தொண்டர்களுக்கும் அன்றாடம் பயன்படக்கூடிய உரையாடல்களை ஓரிரு பெண் (தோழர்களைத் தவிர (வ.கீதா, சிவகாமி, ஓவியா, அருள்மொழி) பெரும்பாலோர் எழுதத் துணியவில்லை.
ஆனால், தலித்தியம், பெண்ணியம், மனித உரிமை, விளையாட்டு, மதமாற்றம், பிரதிவாசிப்பின் திறனாய்வு என்கிற நவீன விமர்சனங் (Tன் அத்தனை வடிவங்களிலும் தலித்திய ஓர்மையோடு 'தலித் முரசி 'ன் வழியில் இயங்கிப் பார்த்திருக்கும் எழுத்து மட்டுமல்ல; உட்சாதியில் ஆதிக்கங்களை, ஒடுக்குமுறைகளை ஒழிக்கப் போராடி புவதாறுகளை சந்தித்த எழுத்து தோழர் ஜெயராணியின் எழுத்து என்பதை மிகுந்த நெகிழ்ச்சியோடு பதிவு செய்ய விரும்புகிறது கருப்புப் பிரதிகள்.
இப்பிரதியை வெளியிட சகலவிதமான தோழமையையும் தந்து துணை நிற்கும் 'தலித் முரசின் ஆசிரியர் புனித பாண்டியனுக்கும் ஜோன்ஸ் சாருக்கும் ஒளியச்சு செய்வதிலும் வடிவமைப்பை வழங்கிய திலும் முக்கியப் பங்காற்றிய தோழர் சுந்தர், கருப்புப் பிரதிகளில் இணை பங்காற்றி வரும் அமுதாவிற்கும் நண்பர்கள் ஷோபாசக்தி, மதிவண்ணன், பானு - தமயந்தி, விஜய் ஆனந்த் (பெங்களூரு), மெலிஞ்சிமுத்தன், யாழன் ஆதி, வேதநாயகி, அய்யனார், தேவதாசன், அறிவொளி, பேராசிரியர் பத்மினி, ஜீவமணி, விஜயன் உள்ளிட்ட நண்பர் களுக்கும் நன்றியை சொல்வது எனக்கே சொல்வதற்கொப்பானது.
-தோழமை சார்ந்து
நீலகண்டன்
தொடர்புடைய மற்ற பதிவுகள்: