இவர்தாம் பெரியார் (வரலாறு) என்னும் வரிசையில் இந்த நூல் பத்தாம் நூலாக இப்பொழுது வெளிவருகிறது. இந்நூலாசிரியர் பெரியார் பேருரையாளர் மா.நன்னன் 2017 நவம்பர்த் திங்கள் 7ஆம் நாளில் இயற்கை எய்தினார். ஆனால் அவர் மறைவுக்கு முன்பே அவரால் தொகுக்கப்பட்டு இருந்த போதிலும் இந்நூலின் வெளியீடு சில காரணங்களால் தள்ளிப் போனது.
தமிழர்களின் நீண்ட நெடிய வரலாற்றில் தந்தை பெரியார் தோற்றமும், அவர்தம் கொள்கைகளும், அவர் ஆற்றிய அரும்பெரும் செயல்களும் நீக்கமுடியாதவை. இனிவரும் காலத்திலும் நிலைத்து நிற்கும் என்பது பேருண்மை. பேராசிரியர் மா.நன்னன் தமது அக வாழ்க்கையிலும், புற வாழ்க்கையிலும் தந்தைபெரியாரின் பெருநெறியைப் பற்றி ஒழுகியவர். அவர் எழுதிய பெரியாரியல் தொடர்பான நூல்களின் எண்ணிக்கை மட்டும் ஏறக்குறைய 50 இருக்கக் கூடும். திராவிடர் கழகத்தின் திருப்புமுனைத் தீர்மானங்கள் என்ற தலைப்பில் இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது. இதனை வெளியிட்டு நன்னன்குடி பெருமிதம் கொள்கிறது. திராவிடத் தமிழர்கள் இதனைப் படித்துப் பயன்பெறுவார்களாக.
இந்த நூலை செவ்விய முறையில் அச்சிட்டு நூலாக ஆக்கித் தந்த எழிலினி பதிப்பகத்தாருக்கும் அதன் உரிமையாளர்கள் கோ.ஒளிவண்ணன் - நல்லினி இணையருக்கும் எங்கள் மனமுவந்த நன்றியை உரித்தாக்குகிறோம்.
1-7-2019 நன்னன்குடி
சென்னை
தொடர்புடைய மற்ற பதிவுகள்: