இனமானப் பேராசிரியர் வாழ்வும்-தொண்டும்
இனமானப் பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள் கொள்கையிலும் சரி தோற்றத்திலும் சரி நிமிர்ந்து நிற்கக் கூடியவர்.
சிறந்த பகுத்தறிவுச் சிந்தனையாளர்; பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பாளர்; மூடநம்பிக்கை ஒழிப்பாளர்; மொழிப்பற்றாளர்; இனமானக் காப்பாளர், எதிரியும் மதிக்கும் மாண்பாளர். சட்டமன்றம், நாடாளுமன்றம், மக்கள் நல்வாழ்வு, கல்வி, நிதி என்ற முதன்மைத் துறைகளின் அமைச்சராய் திறம்பட பணியாற்றிய திறமையாளர்; குறைகாண இயலா நேர்மையாளர் இவர்.
இவரது பேச்சு, எழுத்து, வாழ்க்கை எல்லாம் ஒருசேர இந்நூலில் தொகுக்கப்பட்டு, திராவிடர் கழகத்தால் அழகுற வெளியிடப்பட்டுள்ளது. நல்ல கட்டமைப்பு.
ஒவ்வொரு தமிழர் கையிலும் தவறாது இருக்க வேண்டிய நூல். ஒவ்வொரு நூலகத்திற்கும் வாங்கப்பட வேண்டிய நூல்.
இளைய தலைமுறை தவறாது படித்து தங்களையும், தங்கள் வாழ்வையும் செப்பம் செய்துகொள்ள வேண்டும்.
படிக்க மட்டுமல்ல பரப்பப்பட வேண்டிய நூலும் இதுவாகும். இந்நூலைத் தொகுத்த பேராசிரியர் ஜனகன் அவர்களும் பேராசிரியர் மங்கள முருகேசன் அவர்களும் தமிழர்களின் நன்றிக்குரியவர்கள்.
தொடர்புடைய மற்ற பதிவுகள்:
இனமானப் பேராசிரியர் வாழ்வும்-தொண்டும் - பூமாலை