இனமானப் பேராசிரியர் வாழ்வும்-தொண்டும் - பூமாலை
தமிழ் இலக்கிய வரலாற்றில் 'பேராசிரியர்' எனில் தொல்காப்பிய -உரையாசிரியர் பேராசிரியரையே குறிக்கும். இன்றையத் தமிழ் சுகூறு நல்லுலகத்தில் 'பேராசிரியர்' எனில் இனமானப் பேராசிரியர் க.அன்பழகன் எனும் பண்புசால் சிந்தனையாளரைக் குறிக்கும்.
இந்நூல் பேராசிரியரின் முழு வாழ்க்கை ஓவியம் என்று கூற மாட்டோம். ஏனெனில் 92 அகவை எய்திய பேராசிரியரின் வாழ்க்கை எனும் தேனடையை முழுமையாகச் சுவைக்க இயலாது. இது அவருடைய வாழ்க்கை ஓவியத்தின் வரிவடிவம் மட்டுந்தான். நிறைவு தரும் முழுமையான வாழ்க்கை ஒவியம் அவர்தாம் திட்ட இயலும், எனவே தித்திக்கும் தேனடையைப் பிழிந்த அளவில் வடித்து வழங்குகிறோம்.
பேராசிரியப் பெருமகனாரின் வாழ்க்கை ஏட்டின் பக்கங்கள் விரிந்து, பரந்தவை. முத்தமிழ் வளர்த்த சோழவள நாட்டில் தஞ்சைத் தரணியில் பிறந்து, செந்தமிழ் வளர்த்த அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சங்கத்தமிழ் பயின்று, தந்தை பெரியாரின் சுயமரியாதைக் காற்றை நுகர்ந்து, பகுத்தறிவுப் பூங்காவில் உலாவித் தமிழ்ப் பண்பாடு கற்பித்து, மேடைத் தமிழில் அண்ணா தமிழ், திரு.வி.க. பாணி என்பது போல் பேராசிரியர் பாணி எனும் புதுப் பாணிகண்டு, பேரறிஞர் அண்ணாவின் அடியொற்றி, அரசியல் வானில் வால்மீன் ஆகாமல், செஞ்ஞாயிற்றின் விடியல் கதிராக ஒளிபரப்பித் தமிழக அரசியல் வானில் எவர் மனத்திலும் நிலைத்து நிற்கும் இடம்பிடித்துக் கலைஞரின் தோளோடு தோள் சேர்த்துச் சுமைதாங்கிடும் திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் எனத் திகழும், அவர் வாழ்க்கை வரலாற்றைப் பதிவு செய்யவும் தமிழ் கூறு நல்லுலகிற்கு எடுத்துக் கூறவும் கிடைத்த இவ்வாய்ப்பு குறித்துப் பெருமையும், பெருமிதமும் கொள்கிறோம்.
1949களில் பகுத்தறிவுத் தந்தை பெரியாரின் திராவிடர் கழகத்திலிருந்து அறிஞர் அண்ணா தலைமையில் பிரிந்தாலும், ஆயுள் முழுவதும் அய்யாவின் தன்மானச் சிந்தனைத் தடம் விட்டு விலகாது பகுத்தறிவுக் கொள்கை காத்திடும் தனிப் பண்பு பேராசிரியரைப் போற்றிப் புகழச் செய்கிறது.
இந்நூல் ஆக்கத்திற்கு நன்றி தெரிவிப்பது எனில் முதலில் நம் பேராசிரியருக்குத்தான் நன்றி தெரிவிக்க வேண்டும். அவருடைய வாழ்வையும், தொண்டையும் பதிவு செய்ய விழைகிறோம் என்ற போது, எளிதில் அவர் அதற்கு உடன்படவில்லை,"திராவிட இயக்கப் பெருமக்கள் பலருடைய வாழ்வும், தொண்டுமே பதிவு செய்யப்படாது உள்ளது, இந்நிலையில் என் பணியென்ன அவ்வளவு முதன்மையானதா? நான் தி.மு.கழகத்தின் பொதுச் செயலாளர், கலைஞரின் தலைமையை முழு மனதுடன் ஏற்றுச் செயல்புரிந்து வருபவன், நான் பெரும் தலைவனுமல்லள்” என்று அடக்கத்துடன் கூறிய அவர், உண்மையாகவே விருப்பப்படவில்லை, அவரைச் சம்மதிக்க வைப்பது அவ்வளவு எளிதாக இல்லை.
கடைசியில் பலருடைய வற்புறுத்தல்கள் வலியுறுத்தல்கள் ஆகியவற்றிற்குப் பின்னே ஒரு வழியாகச் சம்மதம் தெரிவித்தபோது அடைந்த மகிழ்ச்சியை விடவும், பேராசிரியர் கண்டு மகிழும் வண்ணம், கூடுதல், குறைதல் இல்லாது, நாம் பதிவு செய்திருப்பது ஒரு பகுதிதான் என்ற போதிலும் மேலே குறிப்பிட்டதைப்போல் அவரின் வாழ்வும் தொண்டும் எனும் ஓவியத்தின் வரிவடிவத்தை மட்டுமேனும் அழகுற வடித்திட முயன்றிருக்கிறோம். உண்மையிலேயே பேராசிரியரின் வாழ்வு, தொண்டு ஆகியன வடித்தளிக்க மிகவும் அரிதின் முயன்று திரட்டி அளிக்கிறோம்.
இந்நூலுக்குப் பெருமை சேர்க்கும் வண்ணம் மிக உயர்வான அணிந்துரை, மிக அருமையான அணிந்துரை, நூலைப் படித்துச்
சுவைத்து அளித்த முத்தமிழ் அறிஞர், தமிழினத் தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கும், வாழ்த்து அளித்து மகிழ்ந்து, மகிழவைக்கும் விடுதலை ஆசிரியர், திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர். ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கும் எங்கள் நன்றி முதலில் உரியது.
பேராசிரியரின் நாடாளுமன்ற உரைகள் கிடைப்பதற்கு பெரிதும் துணைபுரிந்த வி.அய்.டி, வேந்தர் திரு.ஜி.விசுவநாதன், மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.இரா.செழியன் ஆகியோருக்கு எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
பேராசிரியரின் இல்லம், இல்லறம் குடும்பப் புகைப்படங்கள், அரிய நெருக்கமான வெளி உலகம் இதுவரை அறிந்திடாத தகவல்கள் ஆகியவற்றிளை அளித்த, பேராசிரியரின் திருமகள்கள் டாக்டர் திருமதி செந்தாமரை சொக்கலிங்கம்,டாக்டர் மணமல்லி சிவராமன், பேராசிரியரின் திருமகன், கட்டடக் கலைப்பொறியாளர் அன்புச்செல்வன், பேராசிரியரின் மருமகள்கள் டாக்டர் சொக்கலிங்கம், டாக்டர் சிவராமன், மருமகள் டாக்டர் கல்யாணி அன்புச்செல்வன், பேராசிரியரின் உடன்பிறப்புகள் திருமிகு திருமாறன், திருபாலகிருட்டிணன், திருமதி இராஜம் ராமதாஸ், பேராசிரியரின் மைத்துனர். திரு.ஜெயபாலன், திருமதி கவுசல்யா ஜெயபாலன், பேராசிரியரின் பெயரன்களில் ஒருவரான வெற்றிச்செல்வன் ஆகியோர் நினைந்திடத் தக்கவர்கள்.
பேராசிரியருடன் தொடர்புடைய பலரும் பல்வேறு செய்திகளை வழங்கினர்.ஆனால் அவற்றை முழுமையாகப் பயன்படுத்த வாய்ப்பில்லாது போயிற்று. காரணம் இது மலர் அன்று, வரலாற்றுப் பதிவு நூல் என்பதே.
திராவிட இயக்க எழுத்தாளர் திரு.கதிருநாவுக்கரசு நூலின் படியைப் படித்துத் திருத்தங்கள் மேற்கொண்டு நூலின் செம்மைக்குக் கருத்துரை வழங்கி வழிகாட்டியமைக்கு நன்றி தெரிவித்தல் எங்கள் கடனாகும்.
திராவிட இயக்க முதுபெரும் கவிஞரும், தமிழ் இலக்கியப் பாசறையில் 'நக்கீரர்' என அறியப் பெற்றவருமான கல்விக்கொண்டல் மா.செங்குட்டுவன் புகைப்படங்கள் சில அளித்து, நூலில் திருத்தங்கள் பல கூறி, நூலின் சிறப்புக்கு உதவினார். அவருடைய மனமுவந்த பணிகளுக்கு எங்கள் நன்றி. | நூலின் எழுத்துப் பணி எங்களுடையது எனினும் வேண்டப்படும் நபர்களைத் தொடர்பு கொள்வதிலும், தகவல்களைப் பெற்று ஒன்றே கால் மணி நேரம், அவரை அருகில் வைத்துக் கொண்டே நாள் தொடர்ந்து படித்துக் கொண்டே இருந்தேன் என்றால், அதிலே உள்ள செய்திகள் எப்படிப்பட்ட விறுவிறுப்பும் விசையும் கொண்டவை என்பதை, படிப்போர் அனைவரும் உணர்ந்து கொள்ளலாம்.
இருபதாவது - இருபத்தொன்றாவது நூற்றாண்டுகள் எனத் திராவிட இயக்கச் சரித்திரத்தில் இரண்டு நூற்றாண்டுகளிள் சங்கமத்தில் வாழ்பவர் பேராசிரியர். வாழ்பவர் மட்டுமல்லாமல், இயக்க வரலாற்றில் ஏராளமான நிகழ்வுகளுக்குத் "திசைமானி"யாகத் திகழ்ந்து வருபவர் பேராசிரியர்.
“நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே" என்ற நக்கீரனை நான் பார்த்ததில்லை;
"தீதும் நன்றும் பிறர் தர வாரா” என்று வாழ்க்கையில் இன்ப துன்பங்களைச் சமச் சீரான கண்ணோட்டத்தோடு அணுகிட வேண்டுமென்பதை வலியுறுத்திய புறநானூற்றுப் புலவன் கணியன் பூங்குன்றனாரை நான் கண்டதில்லை;
தனித் தமிழ் இயக்கத்தின் தந்தை, மறைமலை அடிகளோடும், தமிழ்த் தென்றல் திரு.வி.க. வோடும், நான் நெருங்கிப் பழகியதில்லை. ஆனால் இவர்கள் அனைவரையும் நான் நமது இனமானப் பேராசிரியர் அன்பழகனார் அவர்களின் திருவுருவில் கண்டு களிப்புறுகிறேன்.
நமக்குப் பகுத்தறிவையும் தன்மானத்தையும் எடுத்தூட்டி எழுச்சி கொள்ளச் செய்த நம் தாயுமானவரான ஈரோட்டுப் பகலவன் தந்தை பெரியாரையும்; திராவிட மாண்புகளைத் தெளிவுபடுத்தி, நாம் யார் - நமது ஆதிமூலம் யாது - நமது பாதையும் பயணமும் எங்ஙனம் அமைதல் வேண்டும் என உணர்த்தி, இருட்டறையில் ஏங்கிக் கொண்டிருந்த தமிழ் இனத்தை ஒளி உலகுக்கு அழைத்து வந்த அறிஞர் அண்ணாவையும், இயற்கை இரக்கமின்றிப் பறித்துக் கொண்டு விட்டாலும் அவ்விரு பெருந்தலைவர்கள் அலங்கரித்த ஆசனத்தில் நமது இனமானப் பேராசிரியர் அன்பழகளார் அவர்களை அமர்த்தி ஆறுதல் கொள்கிறேன்.
நேர்மையான சிந்தனை-நிதானமான போக்கு- ஆழமானநீர் நிலைக்குரிய அமைதி - ஆபத்து தமிழ் இனத்துக்கு என்றால் அனலாகக் கொதிக்கின்ற உள்ளம் - இவற்றின் மொத்த உருவம் தான் இனமானப் பேராசிரியர்.
அறிஞர் அண்ணா அவர்கள், அண்ணாமலைப்பல்கலைக்கழகத்திலே கண்டெடுத்த முத்து தான் நம்முடைய பேராசிரியர் அண்ணா உருவாக்கிய இந்த இயக்கத்திற்குச் சோதனைகள், சூறாவளிச் சுழற்சியாக வந்த போதெல்லாம் எஃகுத்தூணாக நின்று எட்டப்பர்களை உமிழ்ந்து, அசையாத உறுதிக்கு எடுத்துக்காட்டாக இருப்பவர்.
சிதம்பரம் கல்யாண சுந்தரனார் குடும்பம், சாதாரண நடுத்தரக் குடும்டம்-ஆனால் செந்தமிழ்க் குடும்பம், சீர்திருத்தக் குடும்பம். அந்தப் பகுத்தறிவு - சுயமரியாதைக் குடும்பத்தில் தோன்றி குன்றின்மேலிட்ட விளக்காக ஒளி உமிழ்பவர் தான் நம்முடைய பேராசிரியர்.
இன்று நேற்றா? எளக்கும் பேராசிரியருக்கும் 73 ஆண்டுக் காலத்திற்கு முன்பே முகிழ்த்த நட்பு. அந்த முதிரா வயதில், முறுக்கேறிய பருவத்தில், கொள்கை வழி கூடியதும், குன்றென நிமிர்ந்து நிற்பதாகும். பண்படுத்தப்பட்ட பளபளப்பான தார்ச் சாலையில் இன்று பயலாம் நடத்தும் திராவிட இயக்கம், அன்று காடுமேடுகளில், கரடுமுரடான வழிகளில், கால்களில் முட்கள் குத்தி ரத்தம் வழியப் பயணம் நடத்திய காலத்தில், அந்தப் பயனைக் காவலர்களில் ஒருவராக விளங்கியவர். விளங்கிக் கொண்டிருப்பவர் பேராசிரியர்,
துள்ளித் திரியும் பருவத்திலே தான் நான் பேராசிரியரை முதன் முதலில் பார்த்தேன். அப்போது அவரும் இளைஞர்! திருவாரூரிலே நடைபெற்ற இஸ்லாமியர் விழா ஒன்று. நூறு பேர் மட்டுமே அமர்ந்திடக் கூடிய சிறிய மண்டபம். அண்ணா அவர்கள் அந்தக் கூட்டத்தில், அந்த இளைஞரை அறிமுகப்படுத்தி, உரையாற்றிடவும் அழைக்கிறார். அண்ணா அவர்கள் முதன் முதலாக உரையாற்ற அமைத்த காரணத்தால் தானோ என்னவோ, இன்றளவும், அவரை உரையாற்றி ஒளி பாய்ச்சிட தமிழ்ப் பெருங்குடி மக்கள் உற்சாகத்தோடு அழைத்துக் கொண்டே உள்ளார்கள்.
பேராசிரியர் அவர்களுக்கும் எனக்கும் ஏற்பட்ட முதல் தொடர்டைப் பற்றி இந்த நூலின் தொடக்கத்திலேயே பக்கம் 27-28இல் நான் எழுதியதையே அப்படியே குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார்கள். பேராசிரியர் அவர்களைப் பற்றி தமிழகத்திலே உள்ள அறிஞர் பெருமக்கள் பலரும் எடுத்துத் தெரிவித்த அத்தளை கருத்துகளும்; அதுபோலவே பேராசிரியர் அவர்கள் பலரைப் பற்றி எடுத்துரைத்த கருத்துகளும் இந்த நூலிலே பல்வேறு இடங்களில் விரிவாக இடம் பெற்றுள்ளன. மேலும் பேராசிரியர் அவர்கள் பல்வேறு மாநாடுகளிலும், முக்கிய நிகழ்ச்சிகளிலும் ஆற்றிய எழுச்சிமிகு உரைகள் எல்லாம் இந்த நூலிலே இடம் பெற்றுள்ளன. குறிப்பாக கோவையில் தி.மு.கழகத்தின் ஐந்தாவது மாநில மாநாடு நடைபெற்ற போது, அந்த மாநாட்டுத் தலைவரான என்னை வழிமொழிந்து பேராசிரியர் ஆற்றிய உரை நான் பெற்ற பெரும் பேறு. அந்த உரையும் இந்த நூலில் இடம் பெற்றுள்ளது, அப்போது என்ளைவழி மொழிந்த போது தான், பேராசிரியர் அவர்கள் என்னிடம் பெரியாரின் சாயலையும் - அண்ணாவின் சாயலையும் - காமராஜருடைய சாயலையும் - இராஜாஜியின் சாயலையும் - காயிதே மில்லத்தின் சாயலையும் - முத்துராமலிங்கத் தேவரின் சாயலையும் காண்பதாகக் குறிப்பிட்டதோடு, தன்னை “வருங்கால் காப்போம்” என்றும், என்னை “வருமுன் காப்பவர்” என்றும் பாராட்டிய மனப்பாங்கிளை இந்த நூவில் நான் மீண்டும் படித்துணர்ந்தேன்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதல் தொழிற்சங்கச் செயலாளர் நம்முடைய பேராசிரியர் அவர்கள் தான். 17359ஆம் ஆண்டில் அவர் தொழிற் சங்கச் செயலாளராக இரண்டு ஆண்டுகளில் ஆற்றிய பணிகள் அளவிடற்கரியவை. அது பற்றிய நிகழ்வுகளும் இந்த நூலில் காணக் கிடைக்கின்றன,
பேராசிரியர் அவர்கள் 1957 முதல் 1962 வரை எழும்பூர் சட்டப் பேரவை உறுப்பினராகவும், 1962 முதல் 1967 வரை மேலவை உறுப்பினராகவும், 1967 முதல் 1971 வரை திருச்செங்கோடு நாடாளுமன்ற உறுப்பினராகவும், 1977 முதல் 1984 வரை புரசைவாக்கம் சட்டப் பேரவை உறுப்பினராகவும், 1984 முதல் 1983 வரை பூங்கா நகர் சட்டப் பேரவை உறுப்பினராகவும், 1989 முதல் 1991 வரை அண்ணா நகர் சட்டப் பேரவை உறுப்பினராகவும், 1996 முதல் 2011 வரை துறைமுகம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினராகவும் வெற்றி பெற்று. ஆளுங் கட்சியிலும், எதிர்க் கட்சியிலும் அரும்பணியாற்றியது குறித்தும், அந்த மன்றங்களில் ஆற்றிய மறக்கமுடியாத விவாதங்கள் குறித்தும், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராகவும், கல்வி அமைச்சராகவும், நிதி அமைச்சராகவும் செய்த சீர்மிகு சாதனைகள் குறித்தும் இந்த நூலில் விரிவாகவும், விளக்கமாகவும் தொகுத்து தரப்பட்டுள்ளன. தமிழகத்தின் நலனுக்காக பேராசிரியர் நாடாளுமன்றத்தில் எழுப்பிய கூர்மையான பல்வேறு கேள்விகளும், எடுத்து வைத்த இன்றியமையாத கோரிக்கைகளும் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன.
கல்லூரியிலே பேராசிரியராக இருந்து, மாணவச் செல்வங்களைத் தமிழ்ப் பண்பாட்டின் மாண்புகெடாமல் செதுக்கித் தந்த இந்தப் புதுமைச் சிற்பி - கழகக் கண்மணிகளுக்கும், பேராசிரியராக இருந்து அண்ணா வழங்கிய கடமை, கண்ணியம், கட்டுப்பாடு எனும் மூன்று கட்டளைகளுக்கும் பதவுரை, பொழிப்புரைகளைத் தெளிவுரைகளாக வழங்கிக் கொண்டிருப்பவர்.
பச்சையப்பன் கல்லூரி விரிவுரையாளராக இருந்து - தமிழகம் முழுதும் சுற்றிச் சுற்றித் தன்மான விதைகளை ஊன்றி வளர்த்திடும் வீறு கொண்ட சொற்பொழிவாளராகப் பரிணாமம் பெற்றவர்.
பேராசிரியர் எழுதியுள்ள நூல்கள், தமிழ்ச் சமுதாயத்தின் கருத்துக் கருவூலங்களாக என்றைக்கும் போற்றப்பட்டு ஆவணப்படுத்தப்பட வேண்டியவை.
இந்த நூலில் மற்றுமோர் சிறப்பு, "உறவுகளின் உள்ளத்தில் பேராசிரியர்” என்ற தலைப்பில், பேராசிரியரின் மூத்த மகள் டாக்டர் செந்தாமரை சொக்கலிங்கம், "கொள்கைக் குன்று என் தந்தை என்ற தலைப்பிலும் - இரண்டாவது மகள் டாக்டர் மாமல்லி சிவராமன், "ஒரு வானம்பாடியின் தந்தை” என்ற தலைப்பிலும் - மகன் அ.அன்புச் செல்வன், "பேராசிரியரின் மகன் என்பதே எனக்குப் பெருமை" என்ற தலைப்பிலும் - மூத்த மருமகன் டாக்டர் சொக்கலிங்கம், “என் மாமனார் மட்டுமல்லர், நண்பரும் கூட” என்ற தலைப்பிலும் - மற்றொரு மருமகன் டாக்டர் சிவராமன், "நேர்மை, ஒழுக்கம், எளிமை, பொய்யாமை, பகுத்தறிவு ஆகிய அனைத்தும் உடையவர் என் மாமனார்” என்ற தலைப்பிலும் - மருமகள் முனைவர் கல்யாணி அன்புச் செல்வன், “நான் பேராசிரியரின் மூன்றாவது மகள்” என்ற தலைப்பிலும் " பேராசிரியரின் இளவல் க.திருமாறன், "பேராசிரியரின் தம்பி என்பதில் பெருமை கொள்கிறேன்” என்ற தலைப்பிலும், மற்றொரு இளவல் க.பாலகிருஷ்ணன், “தளித்தன்மை காத்தவர் என் அண்ணன்" என்ற தலைப்பிலும் - பேராசிரியரின் தங்கை திருமதி இராஜம் என்ற தமிழரசி, “பேராசிரியர்களுக்கெல்லாம் பேராசிரியர் என் அண்ணன்” என்ற தலைப்பிலும், கடைசி இளவல் க.மணிவண்ணன், "எல்லாமே என் அண்ணன்தான்” எனும் தலைப்பிலும், பேராசிரியரின் மைத்துனர் பொறியாளர் ஜெயபாலன், “நேர்மை, பொறுப்புணர்வு, சேவை மனம் ஆகியன உடையவர் எங்கள் மைத்துனர்” என்ற தலைப்பிலும், பேரன் டாக்டர் சொ.ஆனந்த், "எங்கள் தாத்தாவின் தன்னலமற்ற வாழ்வே தவம்” என்ற தலைப்பிலும் - பேரன் அனந்தகிருஷ்ணன், "என் மம்மு தாத்தா" என்ற தலைப்பிலும் - பேத்தி பிரியா சொக்கலிங்கம், “நடமாடும் கலைக் களஞ்சியம் எள் தாத்தா” என்ற தலைப்பிலும் - பேரன் வெற்றி அழகன், "மனித நேயர் சுயமரியாதைச் சுடரொளி என் தாத்தா” என்ற தலைப்பிலும் - பேரன் கவின், "என் தாத்தா" என்ற தலைப்பிலும் இந்த நூலின் இறுதியில் எழுதியுள்ள செய்திகள் எந்த அளவுக்குப் பேராசிரியரின் குடும்பத்தினர் அவர்பால் அன்பும் பாசமும் கொண்டுள்ளனர் என்பதைக் காட்டுவதாக அமைந்துள்ளன.
இன்று நான் 95 இலட்சம் உறுப்பினர்களைக் கொண்ட இயக்கமாம், தி.மு.கழகத்திற்கு தலைவன் - தமிழகத்தின் முதல்வராக ஐந்து முறை இருந்திருக்கிறேன், கட்சியிலும், ஆட்சியிலும் எடுக்கும் முடிவுகள் எதுவாயினும், பேராசிரியரின் கருத்து என்னவென்று அறியாமலும், அவருடைய எண்ணத்தை இணைக்காமலும் நாள் செயல்பட்டதில்லை, இது, நான் அவரது வயதுக்கு, பொறுப்புக்கு அளிக்கும் மதிப்பு மட்டுமல்ல; பேராசிரியரின் அறிவுக்கு, ஆற்றலுக்கு, அனுபவத்திற்கு, அண்ணா சாவுக்கு அடுத்து எனக்கு அண்ணனாக இருக்கிறார் என்பதற்காகவும்தான்!
உயரமான மலையிலிருந்து கொட்டுகின்ற அருவி போலத் தமிழ்ப் பொலிவு! ஆழமான சுரங்கத்திலிருந்து அகழ்ந்தெடுக்கும் பொன் போல் எண்ணக் குவியல்! அநீதி கண்ட இடத்து அலைகடல் புயலின் போது சீறுவது போல சின முழக்கம்! அமைதி வழி - அண்ணா வழி - அன்பு வழி காண்பதிலே இனிய ககக் குளிர் தென்றல் பழகிடும் பண்போ கரும்பு! பகுத்தறிவுக் கொள்கையிலே என்றும் இளகாத இரும்பு நமது பேராசிரியர்! அத்தகைய அரிய ஆற்றலும், அருங் குணங்களும் நிறைந்த முழுமையான மனிதராக இருப்பவர் பேராசிரியர் அவருடைய வாழ்க்கை வரலாறு, ஒரு தளி மனிதருடைய வாழ்க்கை வரலாறு அல்ல! ஒரு மாபெரும் சமுதாய இயக்க வரலாற்று நிகழ்வுகளின் தொகுப்பு. இந்நூலை அனைவரும் படித்துப்பாடமும் பயனும் பெற்றிட வேண்டும் என்பது எனது பெரு விருப்பம். குறிப்பாகக் கழகத் தோழர்கள் அனைவரும் தங்கள் தங்கள் இல்லங்களில் பாதுகாத்து வைத்திட வேண்டிய மதிப்புமிக்கக் கருவூலம் தான் பேராசிரியர் அவர்களின் வரலாற்றைத் தெரிவித்திடும் இந்நூல், எனது இந்த விழைவினை எல்லோரும் நிறைவேற்றுவீர்கள் எனும் நம்பிக்கை எனக்கு நிரம்ப உண்டு.
வாழ்க வாழ்க பேராசிரியர்!
அன்புள்ள,
மு.கருணாநிதி
சென்னை – 86
16.6.2015