Skip to content
Free Shipping on Orders over Rs.1000 (India)
Free Shipping on Orders over Rs.1000

இந்துத் தத்துவ இயல் - பதிப்புரை

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
பதிப்புரை

'ராகுல்ஜி' என்றழைக்கப்படும் ராகுல் சாங்கிருத்யாயன் இந்தியத் தத்துவச் சிந்தனையாளர்களில் மிக முக்கியமானவராவார். இந்திய அளவிலான நாளிதழ்கள், வார, மாத இதழ்களில் வெளியான அவரது கட்டுரைகள் மேலதிக கவனத்தைப் பெற்றதோடு இன்றளவும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவையாக விளங்குகின்றன.

தன் வாழ்நாளின் பெரும்பகுதியை இந்தியா முழுமையும் மற்றும் பெரும்பாலான உலகநாடுகளுக்கும் பயணம் மேற்கொண்டு பெற்ற அனுபவங்களால் தாம் எழுதிய நூற்களால் அறிவுலகில் தனக்கான தடத்தைத் திறம்பட நிறுவிக்கொண்டவர்.

மார்க்சியத்தில் மிகு புலமை பெற்று விளங்கிய ராகுல்ஜி, மனித இனம், மனித சமூகம், உலக வரலாறு, தத்துவங்கள், சமயங்கள் குறித்து ஏராளமான நூல்களைப் படைத்தநிலையில், உலகளாவிய தத்துவ இயல்கள் குறித்து எழுதத் தொடங்கியபோது முதலில் எழுதத் தொடங்கிய நூல் இதுவேயாகும்.

'இந்துத் தத்துவ இயல்' என்னும் இந்நூலில் புராதனப் பிரமாணத் தத்துவ இயல் மற்றும் முதல், இரண்டாம், மூன்றாம், நான்காம் காலகட்ட உபநிஷத்துகளையும் அதன் முக்கியமான தத்துவாசிரியர்களின் கருத்து களையும் விரிவாக விளக்கியுள்ளார். மேலும் ஜைவலி, யாக்ஞவல்கியர், கவுடபாதர், சங்கராச்சாரியார் போன்றோரின் தத்துவ விளக்கங்களும் இடம்பெற்றுள்ளன.

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வல்லுனராக விளங்கிய ஏ.ஜி.எத்திராஜுலு அவர்கள் வாசகர்களுக்கு எளிய முறையில் இந்நூலை இந்தியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார். அவரது எழுத்துப் புலமையும் திறனும் போற்றுதலுக்குரியது.

இந்நூலின் முதற்பதிப்பு என்சிபிஎச் வெளியீடாக 1985ம் ஆண்டு வெளியானது. 2003ம் ஆண்டில் இரண்டாம் பதிப்பு வெளிவந்தது. தத்துவார்த்தச் சிந்தனைகளில் நவீன புரிதலை உருவாக்கிட வகைசெய்யும் இந்நூலின் தேவையைக் கருத்தில்கொண்டு புதிய வடிவமைப்பில் தற்போது மீள்பதிப்பு செய்யப்படுகிறது.

- பதிப்பகத்தார்

 

தொடர்புடைய மற்ற பதிவுகள்:

Previous article திராவிடர் இயக்கப் பார்வையில் பாரதியார் - ஆசிரியர் குறிப்பு