இந்து மதம் எங்கே போகிறது? - முன்னுரை
புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/hindhu-madham-enge-pogirathu.html
முன்னுரை
சுருதி ஸ்மிருதி இதிஹாஸ
புராண மீமாம்ஸாத்வாய ஸுத்ரவிஸாரத
வேதார்த்த ரத்னாகர வேதவாசஸ்பதி
மஹோபாத்யாய
மஹாமஹோபாத்யாய
அக்னிஹோத்ரம்
ராமானுஜ தாத்தாச்சாரியார்
தமிழ் அறிவுலகத்துக்கு அடியேனின் வணக்கங்கள்.
நக்கீரன் சமூகத்திற்கு செய்யும் சேவையை உலகமே கொண்டாடுகிறது. அப்பேர்ப்பட்ட நக்கீரன் சார்பில் ஹிந்து மதத்தைப் பற்றி எங்கள் இதழில் நீங்கள் விளக்கமாக எழுதவேண்டும் என்று என்னிடம் வந்தார்கள்.
ஏன் என்னிடம் வரவேண்டும்? கும்ப கோணத்தில் பிறந்து திரு.பட்டுசாமி என்ற பெரிய தகப்பனாரிடம் வேதாத்யயனம் பண்ண ஆரம்பிக்கும்போதே அவரிடம் நான் முதல் கேள்வியைக் கேட்டேன்.
"நீங்கள் சொல்லும் வேதத்துக்குப் பொருள் என்ன? புரியவில்லையே? அதை தெரிந்து கொண்ட பிறகு அத்யயனம் பண்ணலாம்” என்றேன்.
பெரியதகப்பனாரோ...
'இதற்கு இப்போது பிரயத்தனம் பண்ணாதே' என்று கூறினார். ஆனால் நான் வற்புறுத்தவே.... ஒரு அரைமணி நேரம் சாவகாசம், வேதத்தைப் பற்றியும் அவைகளில் உள்ள விஷயங்கள் பற்றியும் சுருக்கமாகச் சொன்னார். அப்போது எனக்கு பத்துப் பனிரெண்டு வயதுதான்.
ஆங்கில எலிமென்ட்ரியில் படித்தேன். அவர் கூறியது அப்படியே மனதில் பதிந்தது. பின் வேத அத்யயனம் நடக்கும் காலத்திலேயே தமிழ் மொழியிலுள்ள அந்தக்காலத்து கவி, நாடகங்களையும் படித்து வந்தேன்.
கனாந்தகம், ரக்ஷணாந்தம், யஜுர் வேதாத்யயனம் முடிந்த பிறகு சாஸ்த்ரம் தயாசம் ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. தகப்பனாரும் பெரிய தகப்பனாரும் வேத அர்த்தங்களை பேசிக்கொள்வார்கள். எனக்கும் விளக்குவார்கள்.
புதுக்கோட்டை ராஜசபையில் வருடத்துக்கு ஒருநாள், நவராத்திரி உற்சவத்தில் வித்வத்சபை கூடும். வேதங்களைப் பற்றி பேச இவர்களை கூப்பிடுவார்கள். பல வருடங்கள் நடந்த இந்த சம்பவங்களால் என் வேத அறிவு விஸ்தாரப்பட்டது.
தகப்பனார், பெரிய தகப்பனார் இப்படியென்றால், சிறிய தகப்பனார் கோபால தேசிகாச்சார் சாஸ்த்ரம் படித்த அரசியல்வாதி, தேசியவாதி, பத்திரிகைவாதி.... அவரோடு பழகிய காலங்களில் தர்மத்தை பிரச்சாரம் பண்ணவேண்டும் என்ற உணர்ச்சி எழுந்தது.
அப்போது வீட்டிற்கு The Hindu ஆங்கிலப் பத்திரிகையும், சுதேசமித்திரன் தமிழ்ப் பத்திரிகையும் வந்துகொண்டிருந்தது. பிரதி தினமும் இரண்டு பத்திரிகையும் படிப்பேன்.
இவ்வாறாக... சம்ப்ரதாய அறிவையும், அதை சமுதாயத்துக்கு பயன்படுத்த வேண்டும் என்ற உணர்ச்சியையும் என் குடும்ப சூழ்நிலையே கொடுத்தது.
இதனால் தான் நக்கீரன் எடிட்டர் என்னை இந்தச் சமுதாய சேவை செய்ய கேட்டுக்கொண்டிருப்பாரோ என நினைக்கிறேன்.
இன்றுள்ள ஹிந்து மதம் பல மக்களின் கருத்துக்களோடு சேர்ந்திருந்தாலும், பல உருவங்களில் மாறுபட்டிருந்தாலும் இவைகளுக்குத் தலைமை வகித்து, தங்களுடைய மதக்கருத்துக்களையும் காப்பாற்றிக்கொண்டு, மற்றவர்களும் அதைப் பின்பற்றி இயங்க பிராமணர்கள் வழிவகுத்தார்கள்.
ஆனால் பிராமணர்களைத் தவிர மற்ற மக்களின் மதங்கள் வேறுபட்ட கொள்கைகளோடு, இன்னும் மக்களிடையே இருந்து வருகிறது. பிராமண்யமும் தன் ஒற்றுமையை வைத்துக்கொண்டு இயங்க முடியாமல் பல கருத்தளவிலும் அனுஷ்டான வழியிலும் சிதறிப்போய் நிற்கிறது.
அந்த நிலை இன்னும் நீடித்து வருகிறது. இந்தியாவில் பல வகுப்புகள், பல ஜாதிகள் இருப்பது லோக பிரசித்தம். ஹிந்து என்ற சமூகத்தில் பாமர ஜனங்கள் ஒரு கருத்தோடு இருந்து வருகிறார்கள். பிராமணர்கள் உட்பட முன்னேறிய வகுப்புகள் இதற்கு மாறான கருத்தோடு இருந்து வருகிறார்கள்.
ஹிந்து என்ற சொல் ஜாதியை குறிப்பிடுமா? அல்லது மதத்தைக் குறிப்பிடுமா? என்பது இன்னும் சந்தேகத்தில் தான் இருக்கிறது. ஆனால் ஹிந்து என்ற பெயரில் தனியாக ஒரு ஜாதியே கிடையாது. இதை அரசியல் சாசனம் முடிவு பண்ணிவிட்டது. அதற்கு முன்பே சரித்திர சாசனமும் நமக்குச் சொல்கிறது.
இப்படிப்பட்ட நிலையில்தான்... நக்கீரன் சார்பாக 'ஹிந்து மதத்தைப் பற்றி எழுதுங்கள்' என வந்தார்கள்.
மக்களுக்குச் சேவை செய்யும் நக்கீரன், ஹிந்து மதத்தைப் பற்றி மக்களுக்கு புரியும்படி செய்ய முயன்றது பெரிய சேவை. எல்லாரும் அதைப் பாராட்டுகிறார்கள். நக்கீரன் கட்டுரைகள் சித்தத்தோடு இருக்கிறது என்று போற்றுகிறார்கள்.
பெண் வர்க்கத்தைப் பற்றிக் கூறினால் அவர்கள் இப்போது முன்னேறிக்கொண்டு வருகிறார்கள். அவர்களின் பெருமையை புருஷர்கள் உணரவேண்டும். அவ்விதமே பொதுவாழ்வில் தெய்வநம்பிக்கை இருந்தால் போதும், வர்ணாஸ்ரம தர்ம முறையில் ஏற்றத்தாழ்வுகளைக் காண்பிக்கக்கூடாது.
என்னுடைய கருத்துக்களைப் படித்து மக்கள் தங்கள் சந்தோஷத்தை தெரிவித்துள்ளார்கள். நீங்கள் செய்யும் சேவைக்கு வயதான காலத்திலும் என் உதவியைச் செய்தேன்.
அடிக்கிற காற்று மங்களத்தை கொடுக்கட்டும். பகல் மங்களத்தை கொடுக்கட்டும். இரவு மங்களத்தைக் கொடுக்கட்டும்' என்று வேதம் சொல்கிறது.
நக்கீரனின் முயற்சி மேன்மேலும் வெற்றியடைய பகவானை பிரார்த்திக்கிறேன்.
(அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்)