இந்து மாயை

இந்து மாயை

தலைப்பு இந்து மாயை
எழுத்தாளர் சு.அறிவுக்கரசு
பதிப்பாளர் நாம் தமிழர் பதிப்பகம்
பக்கங்கள் 216
பதிப்பு மூன்றாம் பதிப்பு - 2015
அட்டை காகித அட்டை
விலை ரூ.100/-

 

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/hindhu-maayai.html

ஏன்? எப்படி ?

அறிஞர் எழுதினார் “ஆரிய மாயை" !

அறியாதார் எழுதினர் “திராவிட மாயை” !

இது “ஹிந்து மாயை" !

அரேபியர் பார்வையில் சிந்துவுக்கு அப்பால் இருந்த மக்களைக் குறித்த சொல் ஹிந்து என்பது, மக்களையும் மண்ணையும் குறித்த சொல் மதத்திற்கானது! அவர்கள் சிந்து (ZIND00) என்றனர். பாரசீகர் SINDU (சிந்து) என்று எழுதினர். அவர்களும் கூட Hindu என்றுதான் கூறினர். எழுதும் போது "ஹி" பயன்படுத்த முடியவில்லை . அவர்கள் மொழியில் H இல்லை. எனவே S பயன்படுத்தப்பட்டது. சமக்கிருதத்தில் "வ' இல்லை . "ப" பயன்படுத்தப்படுகிறது. வத்தலகுண்டு எனும் ஊர் பத்தலகுண்டு என்றானது. வைத்தியநாதன் என்பதை வைத்தியநாதன் என்றுதான் எழுதுகின்றனர். ''பிரணவ " என்று நாம் எழுதுவதை அவர்கள் "பிரணப்” என்றுதான் எழுதுவர். "ஹிந்து" எனும் சொல் இந்திய மொழிகளில் எந்த மொழியிலும் கிடையாது.

அந்நியர் வைத்த பெயர், அந்நிய மொழிப்பெயர் இந்திய மக்களின் மதத்திற்குச் சூட்டப்பட்டது. வில்லியம் ஜோன்ஸ் எனும் மிலேச்சரான ஆங்கிலேய நீதிபதி சூட்டிய பெயர். பொது ஆண்டு 1800இல் சூட்டிக் கடந்த 213 ஆண்டுகளாக மட்டுமே வழங்கப் பெறும் பெயர்.

இவ்வளவு "சிறப்புகள் பெற்ற பெயரின் அடிப்படையில் 90 ஆண்டுகளாக இந்நாடு கலவர பூமியாக ஆக்கப்பட்டு வருகிறது. இந்தப் பெயரை நாத்திகர் உள்பட சமண, பவுத்த, சீக்கியர் அனைவருக்கும் சூட்டியுள்ளது சட்டம். இந்தப் பெயரைக் கொண்டோர் தனித்தேசிய இனம் என்றே வி.டி. சாவர்க்கர் 1922இல் எழுதினார். பல அய்ரோப்பிய நாடுகளில்

வாழ்பவர் ஒரே மதத்தவராக இருந்தாலும் அவரவர்க்குரிய தேசிய இனப்பெயரால் அடையாளம் காணப்படுகின்றனர். நேர்மாறான அணுகுமுறை இந்தியாவில்!

ஒரே மதம். ஒரே மொழி, ஒரே நாடு எனப் பிதற்றும் இவர்களால் ஏற்படுத்தப்படும் குழப்பங்கள் எழுதி மாளா. காந்தியடிகளின் உயிர் பறிக்கப்பட்டது ஒன்றே கூறும் இவர்களைப் பற்றி!

90 ஆண்டுக்காலமாக இருந்து வரும் இந்த கடைந்தெடுத்த பிற்போக்குக்கும்பல், தம்மை வித்தியாசமானவர்கள் என்றும் யோக்கிய சிகாமணிகள் என்றும் ஏற்படுத்திக் கொண்ட மூடு திரையைக் கிழிக்க வேண்டும் என்று அன்பு இளவல் பிரின்சு விரும்பினார்.

அதன் விளைவு இது, உடுமலை வடிவேல் துணையுடன். படியுங்கள். ஆரோக்கியமாக விவாதியுங்கள். தெளிவு பெறுங்கள்.

தோழமையுடன்,

(சு. அறிவுக்கரசு)

வேத காலங்கள் என்னும் வரலாற்றுச் சவக்குழிக்குள் தேடியதால் கிடைத்த சனாதன எலும்புக்கூட்டின் மீதங்கள் - வர்ணாசிரம மிருகங்கள் பெற்றுப் போடப்பட்ட சாதிகள் - இவையே இந்துச் சமயத்தின் வேர்கள், விதைகள்.

- தணிகைச் செல்வன்

தொடர்புடைய மற்ற பதிவுகள்:

இந்து மாயை - உள்ளே

Back to blog