கீதையின் மறுபக்கம் - ஓர் எளிய தொண்டனின் நன்றிப் பெருக்கு...!

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/products/geethaiyin-marupakkam
ஓர் எளிய தொண்டனின் நன்றிப் பெருக்கு...!

ஒப்பாரும் மிக்காரும் இல்லாத
உயர் தனித் தொண்டால் உலகெலாம் உயர்ந்து
கல்லார்க்கும் அல்லார்க்கும் எல்லார்க்கும்
களிப்பருளும் களிப்பாகி, காலத்தை வென்று மிளிர்ந்து
வல்லாரின் வாயடி கையடியால்
வலிமையற்று வதிந்த மானுடத்தின் இப்பகுதிக்கு
மானமும் அறிவும் வாரித்தந்த வள்ளலாய் வாழ்ந்து
பகுத்தறிவுப் பகலவனாய்ப் பாருக்கு ஒளி தந்து
தனது அறிவு, ஆற்றல், உழைப்பு, செல்வம்
என்ற எல்லாச் சொத்துகளையும் மக்கள் உடைமையாக்கி
மண் புழுக்களெனக் கிடந்த மக்களை
மனிதர்களாக மாற்றிய மாமருந்தாம்
ஞாலம் கண்ட புதுமையே!
எழுச்சிமிகு உண்மையின் உருவமே!
எங்கள் ஞானப் பேராசிரியரே!
எம் தந்தை பெரியாரே!

நன்றிப் பெருக்கையே நாடித் துடிப்பாக்கி, தாங்கள் தந்த கொள்கைகளை மூச்சாக்கி, பேச்சாக்கி, தாங்கள் விட்ட பணியையே குருதியோட்டமாக்கி, தாங்கள் தந்த புத்தியையே சொந்த புத்தியாக்கி நாளும் உழைத்திடும் ஓர் எளிய தொண்டனின் நன்றிப் பெருக்கே இந்நூல்

Back to blog