ஏழு தலைமுறைகள் - பதிப்புரை-1
ஏழு தலைமுறைகள் - பதிப்புரை-1
தலைப்பு |
ஏழு தலைமுறைகள் |
---|---|
எழுத்தாளர் | அலெக்ஸ் ஹாலே |
பதிப்பாளர் | சிந்தன் புக்ஸ் |
பக்கங்கள் | 272 |
பதிப்பு | ஆறாம் பதிப்பு - 2016 |
அட்டை | காகித அட்டை |
விலை | Rs.150/- |
புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/ezhu-thalaimuraigal.html
பதிப்புரை-1
இன்றைய அரசியல் - பொருளாதார ஏற்பாட்டை உடைத்தெறிய, ஒரு புதிய சமூகத்தை உருவாக்கிட, மக்களை அணிதிரட்ட, கருத்து களை மக்களிடம் பரவச் செய்வதும், உணர்வுகளைத் தூண்டச் செய்வதும்தானே நமது பிரதான வேலை.
உணர்வுகள் பௌதீக சக்தியைப் பெறும் பொழுது மாற்றங்கள் நடந்தே தீரும் என்று நம்முடைய ஆசான்கள் கூறியதை யாரும் மறந்திருக்க மாட்டோம்.
வாசிப்பு நமக்கு இன்பத்தைத் தருகிறது. துன்பத்தைப் பகிர்ந்து கொள்கிறது. கோபம் கொள்ளச் செய்கிறது. எழுச்சி பெற உதவுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக அறிவைப் புகட்டுகிறது. ஆற்றலை வளர்க்கிறது.
கடந்த நூற்றாண்டு நமக்களித்த பரிசு வெகுமக்கள் வாசிப்பு. அரசர்களுக்கும், ஆள்பவர்களுக்கும் அவர்களின் அடிவருடிகளுக்கும் மட்டுமே இருந்த இலக்கிய உரிமை வெகுமக்களுக்கும் தான் விரும்புகின்றதை வாசிக்க கிடைக்கப்பெற்று ஒரு நூறு ஆண்டுகள் ஆகிவிட்டன. நவீன இந்தியாவில் இன்னும் எழுத்தறிவு பெறாதவர்கள் எத்தனை கோடி? நகர்ப்புற, கிராமப்புற ஏழை மக்களுக்குக் கல்வி கிடைக்கச் செய்யவும் மக்கள் வரலாறுகளை அவர்களிடம் கொண்டு செல்லவும் நாம் நமது முயற்சிகளை, வேலைகளைப் பன்மடங்கு அதிகரிக்கச் செய்வோம். மக்கள் விடுதலை நோக்கிய பயணத்தில் சோர்வின்றி உற்சாகமாகப் பங்கேற்போம்.
இந்நூலின் முதற் பதிப்பு 1993 இல் வெளியானது. தற்பொழுது உங்கள் கையில் தவழுகின்ற நான்காம் பதிப்பு மக்கள் பதிப்பாக குறைந்த விலையில், அழகிய வடிவில் வெளிவருகிறது. நூல்கள், அறிமுகப் படுத்தப்படும் பொழுது மட்டுமே வாசகர்களை சென்றடைகின்றன. மக்கள் ஊழியர்களின் கடமைகளில் பிரதானக் கடமையானது நூல் அறிமுகங்கள். வாசிப்பை ஊக்கப்படுத்துவோம். பலப்படுத்துவோம்.
7 - 11 - 2008 எம். பாலாஜி
தொடர்புடைய மற்ற பதிவுகள்: