அறிஞர் அண்ணா பிறந்த நாளை சிறப்பிக்கும் விதமாக

Amazon Kindle பதிப்பின் சுட்டி:
https://www.amazon.in/dp/B07DGX4W6L/

நூலைப் பற்றி:
*அண்ணா காலத்திலும் அதற்கு முந்தைய காலத்திலுமான அறிஞர்கள் பதிவு செய்துள்ள, ஆரியர்கள் என்று அழைக்கப்படும் பார்ப்பனர்களது 'சமூக சமத்துவத்திற்கு எதிரான கருத்துக்களை'ப் பட்டியலிட்டு அவற்றை விளக்கியுள்ளார் அண்ணா!

*பார்ப்பனர்களின் வடஇந்திய வருகை, அதற்குப்பின்னாலான சமூக மாற்றங்கள் பற்றி விளக்கியுள்ளார்.

*பார்ப்பனர்களது தென்னிந்திய நுழைவுக்கு முந்தைய தமிழர்ப் பண்பாடு மற்றும் ஆரியர்களின் பண்பாட்டை ஒப்பிட்டு எவ்வாறு இவையிரண்டும் எதிரெதிர்த் திசையில் இருக்கின்றன என்று விளக்கம் கொடுக்கிறார்.

*பார்ப்பனர்களின் மதமென்னும் மாய வலையில் தமிழக அரசர்கள் விழுந்தது, அதன் பின்னான தமிழக வீழ்ச்சி பற்றி தரவுகளோடு விளக்குகிறார்.

*அரசர்களைத் தொடர்ந்து, பார்ப்பனர்களின் மதமெனும் மாயையில் மக்களும் விழுந்து, எவ்வாறு அண்ணா காலத்திய சமூகம் பல்வேறு நிலைகளில் பின்தங்கிப் போய்விட்டது என்று விளக்கம் தருகிறார் அண்ணா.

நூறு ஆண்டுகளுக்கு முன்பு மட்டுமல்ல, இப்போதும் நம்மில் பெரும்பாலான மக்கள் இந்த 'ஆரிய மாயை' யில் உழன்று, பெயர் வைப்பதில் தொடங்கி சுடுகாடு வரைக்கும்  பார்ப்பனர்களின் பின்னாலேயே போகிற நிலை இருக்கிறது. ஆனால், பாரப்பனர்களோ, நம் மக்களின் எல்லாப் பிரச்சினைகளிலும் போராட்டங்களிலும் நமக்கு எதிரான நிலைப்பாட்டையே தொடர்ந்து எடுத்து வருகின்றனர்.

இப்படிப்பட்ட பார்ப்பனர்களைப் புரிந்துகொள்ளவும், அவர்களின் 'ஆரிய மாயை' யிலிருந்து வெளிவரவும் பெரிதும் துணைநிற்பது அண்ணாவின் இந்நூல்.

படியுங்கள் நண்பர்களுக்கும் பரப்புங்கள்.

-நன்றி
PeriyarBooks.in
Back to blog