திராவிட இயக்கமும் பாவேந்தர் பாரதிதாசனும்

புத்தகத்தை இங்கே வாங்கலாம்

https://periyarbooks.com/products/dravida-iyakkamum-pavendhar-bharathdasanum
முன்னுரை

தமிழ்ச்சமூகத்தின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டைகளாக இருந்த சாதி, சமயம், மூடநம்பிக்கைகள், பெண்ணடிமை, தொழிலாளர் அடிமை இன்ன பிற கொடுமைகளைப் பாரதிதாசன் தன்னுடைய பீரங்கிக் கவிதைகளால் சுட்டார்.

முடைநாற்றம் வீசுகின்ற மூடக்கருத்துகளை முட்டித் தள்ளி ஒரு புதிய சமூகம் அமைய வழிவகுத்தார். ஆண்டாண்டுக் காலமாக அடிமை விலங்குகளோடு அடங்கிக்கிடந்த தமிழ் மக்களின் விலங்கு களை உடைத்துப் புதுவாழ்வு நெறி காண வழிவகுத்த மீட்புப் பாவலர். பாரதிதாசன் தமிழிலக்கிய வரலாற்றில் சிந்துக்குத் தந்தை, செந்தமிழ்த் தேனீ, புரட்சியின் குறியீடாக விளங்கியவர்.

அந்த மாக்கவிஞனைப் பற்றி நான் முனைவர் பட்ட ஆய்வு செய்தபோது எழுதிய இம் மூன்று கட்டுரைகள், புதுப்பொலிவு பெற்று 'திராவிட இயக்கமும் பாவேந்தர் பாரதிதாசனும்' என்ற தலைப்பில் நூலாக வெளிவருகிறது.

பெங்களூர்த் தமிழ்ச்சங்கம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், புதுவை மத்தியப் பல்கலைக்கழகம், தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழகம், திருச்சி பாவாணர் தமிழ் இயக்கம் முதலிய ஆறு நிறுவனங்களில் இந்நூல்களுள் இடம் பெற்றுள்ள சில கருத்து களைக் கூறியுள்ளேன். பாரதியார் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை வெளியிட்ட நூலிலும் என்னுடைய இறுதிக் கட்டுரையின் சிறு பகுதி இடம் பெற்றுள்ளது. தாயன்போடு பரிவுகாட்டி என்னை உரை நிகழ்த்த அழைத்த அந்நிறுவனங்களுக்கு நன்றி பல.

இந்நூல் இயற்றுவதற்குப் பல நிலைகளில் குறிப்பு நூல்களைத் தந்துதவிய சென்னைப் பல்கலைக்கழக மெரினா வளாக நூலகம், உலகத்தமிழாராய்ச்சி நிறுவன நூலகம், ரோஜா முத்தையா நூலகம், கன்னிமாரா நூலகம், பெரியார் நூலகம், அண்ணா நூற்றாண்டு நூலகம், அமெரிக்கத் தூதரக நூலகம் முதலிய நிறுவனங்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி.

இந்நூல் உருவாக்கத்தின் போது எனக்குத் துணையாக இருந்த முனைவர் பி. தமிழழகன், முனைவர் கு. திருமாறன் ஆகியோர்க்கும், பேரா. கு.பூங்காவனம், தன்மான இயக்க தோழர், முத்துச்செல்வன், புலவர். சு. காமராஜ் என்னுடைய அன்புகனிந்த மாணவர்கள் போ. ஜான்சன், கு. சென்னகிருட்டிணன், மணிவண்ணன் ஆகியோருக்கும் நன்றி.

இந்நூல் உருவாக்கத்திற்கு அடிப்படையாக அமைந்த என் இல்லக்கிழத்தி பேரா. திருமதி இராசாமணி, M.A. (தமிழ்), M.A. (ஆங்கிலம்) அவர்களுக்கும் என் நன்றி.

கட்டுரைகளைக் கவினுறக் கணினித் தட்டச்சு செய்த சபாநாயகம் அச்சகத்தாருக்கும் நன்றி.

நல்ல நூல்களைத் தேடிப்பிடித்து வெளியிடும் 'நியூ செஞ்சுரி நிறுவனத்தாருக்கும் நன்றி.

தோழமையுடன்,
ச. சு. இளங்கோ

 

தொடர்புடைய மற்ற பதிவுகள்:

திராவிட இயக்கமும் பாவேந்தர் பாரதிதாசனும் - பதிப்புரை

திராவிட இயக்கமும் பாவேந்தர் பாரதிதாசனும் - திருமுன் படைப்பு

திராவிட இயக்கமும் பாவேந்தர் பாரதிதாசனும் - பொருளடக்கம்

Back to blog