திராவிட இயக்கமும் பாவேந்தர் பாரதிதாசனும் - பதிப்புரை

புத்தகத்தை இங்கே வாங்கலாம்

https://periyarbooks.com/products/dravida-iyakkamum-pavendhar-bharathdasanum
பதிப்புரை

மானிடத்தின் மகத்துவத்திற்கு ஏற்றம் கொடுத்தும் 'தொல்லுலக மக்கள் எல்லாம் ஒன்றே என்று உலக மக்கள் அனைவரையும் ஒருங்கிணைத்தும் பாடியவர் பாவேந்தர் பாரதிதாசன். 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற சுங்கச் சான்றோரின் உலகளாவிய பார்வை பாவேந்தர் பாரதிதாசனின் பாடலில் கருக்கொண்டு உருவாகி வெளி வந்துள்ளது.

அவர் தமிழ், தமிழினம், தமிழ் மீட்சி, சமூக நோக்கு என்னும் களங்களில் தம்முடைய கவிதைத் தேரை ஓட்டியவர்.

தன்னேரில்லாத தலைவனைப் பாட்டுடைத் தலைவனாக வைத்துப் பாடிய பழந்தமிழ் மரபை முறித்து வண்டிக்காரன், மாடு மேய்ப்பவன், பாவோடும் பெண்கள், தறித்தொழிலாளி, உழவன், உழத்தி, ஆலைத்தொழிலாளி, இரும்பாலைத் தொழிலாளி, கோடாலிக் காரன், கூடை முறம் கட்டுவோர், பூக்காரி, குறவர், தபால்காரன், சுண்ணாம் பிடிக்கும் பெண்கள், ஓவியர் முதலிய உழைக்கும் மக்களைப் பாட்டுடைத் தலைவர்களாக வைத்துப் பாடி இலக்கியத்தில் பெரும் புரட்சியை விளைவித்தவர் பாவேந்தர் பாரதிதாசன்.

தமிழகத்தில் பொதுவுடைமை இயக்கத்தைத் தோற்றுவித்த தலைவர்களில் ஒருவரான ஜீவா அவர்கள் மறைந்த போது, ''தாமரைக்கோர் ஆசிரியர், தாய் மொழிக்கோர் ஆய்வாளர், ஊமை யரையும் பேசவைக்கும் உண்மையிதழ்த் தாமரையோ, கல்விப்பசிக்கு நல் கட்டமுது ! கற்றாரை வெல்விக்கும் வெற்றி முரசு'' என்று ஜீவாவின் பணிகளைப் பாராட்டியுள்ளார். மேலும், 'ஜீவா புகழ் காப்போம் ! செம்மல் மனை மக்கள் மூவா மகிழ்ச்சியினில் மூழ்க வைப்போம் ; ஜீவா தொடங்கியவற்றைத் தொடர்ந்து முடிப்போம்; நடுங் கோம்; தமிழ் மீட்க நாம்'' என்று ஓரணியில் நின்று சீரணி யாய்ப் பாவேந்தர் பாரதிதாசன் ஜீவாவின் பெருமைகளைச் சிறப்பித்துப் பாடியுள்ளார்.

தோழர் முனைவர் ச.சு. இளங்கோ அவர்கள் பாரதிதாசன் ஆய் வில் ஆழங்கால் பட்டவர். அவருடைய ''திராவிட இயக்கமும் பாவேந்தர் பாரதிதாசனும் '' என்னும் இந்நூலை வெளியிடுவதில் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் மிகுந்த மகிழ்ச்சியடைகிறது.

- பதிப்பகத்தார்

Back to blog