வைகோ
பொதுச் செயலாளர்
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
“பொதுமக்கள் நலம் நாடிப் பாக்க
புதுக் கருத்தைச் சொல்க!
புன்கருத்தைச் சொல்வதில்
ஆயிரம் வந்தாலும்
அதற்கொப்ப வேண்டாமே;
அந்தமிழர் மேன்மை
அழிப்பாரைப் போற்றுதற்கும்
ஏடு பல வந்தால்
எதிர்ப்பதன்றோ தமிழர்தம்
எழுதுகோல் வேலை?
ஏற்ற செயல் செய்வதற்கும்
ஏன் அஞ்ச வேண்டும்?”
என்ற எரிமலை வினாவுக்கு இயற்கையின் சாட்சியமாய் நம் இயக்கத்திற்கு மாட்சி சேர்க்கக் கிடைத்திருக்கும் மாணிக்கக் கட்டி! எளிய தோற்றம் - அரிய ஆற்றல்! வலிந்த நெஞ்சம்!
கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது
தூக்கம் கடிந்து செயல். (668)
என்னும் வள்ளுவரின் அரிய குறளுக்குச் சரியான தெளி வுரை! வளைந்து கொடுக்காத வைர இதயத்தையும் கூரிய அறிவாண்மையையும் கூட்டிப் படைத்து இயற்கைத் தாய் நம் இயக்கத்திற்குத் தந்துள்ள காலப் பெட்டகம்! திராவிட இயக்கத்தின் வரலாற்றில் எந்தப் பக்கத்தையும் நுட்பமாக வும், திட்பமாகவும் எந்த நொடியிலும் அத்தாட்சியுடன் எடுத்தளிக்கும் கழகத்தின் நடமாடும் கணிப்பொறி! வர லாற்று நிகழ்வுகளைப் பயின்று தேர்ந்த நுண்மாண் நுழைபு லமிக்க அறிஞர்! அம்மட்டோ?
இலக்கண இலக்கியப் பயிற்சியுடன் திருக்குறளுக்குத் திராவிட இயக்கத்தின் கருத்தியலுக்கு ஏற்ப விளக்கமளிக் கும் வித்தகர். அதில் போலிப் புனைவுகள் காட்டி எவரேனும் புறப்பட்டால் - அவர் ஆள்வாராயிருந்தாலும் சரி - ஆழ்வாராயிருந்தாலும் சரி - அவர்களைப் புறமுதுகிட வைக்கும் போராளி! ஆம்; இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம் ஆசிரியர் திருநாவுக்கரசு அவர்களைப் பற்றி!
கழகத்தின் துந்துபி - சங்கொலியை, நான் எண்ணிய வடிவத்தில் திண்ணிய உள்ளடக்கத்துடன் குறித்த நாளில் வெளிக் கொணர்வதில் அவர் காட்டும் சலிக்காத உழைப்பு ஈடு இணையற்றது. பல்லவ மன்னனின் சர்வாதிகாரத்துக்கு மண்டியிடாமல்,
நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்
நரகத்தில் இடர்ப்படோம் நடலையல்லோம்!
ஏமாப்போம் பிணியறியோம்.....!
என்று எதிர் முழக்கமிட்ட அன்றைய நாவுக்கரசர் பக்தி வழி நின்று இலக்கியம் படைத்தவர். இன்றைய நம் பொறுப்பாசிரியர் - இந்நூல்களின் ஆசிரியர் திருநாவுக்க ரசோ பகுத்தறிவு நெறி நின்று வரலாறு படைப்பவர்!
"திராவிட இயக்க வேர்கள்'', "திராவிட இயக்கத் தூண்கள்'' என்னும் இரண்டு நூல்களும் நூற்றாண்டை நெருங்கிக் கொண்டிருக்கும் நம் இயக்க வரலாற்றில் கான்றென்றும் போற்றி மகிழத்தக்க பொதுப் பணியாற்றி யுள்ள - யுகழ்ப் பணியாற்றியுள்ள போராளிகள் பலரைப் பற்றிய அரிய செய்திகளை அகிலத்திற்கு அள்ளி வழங்கி யுள்ளன. காலமெல்லாம் காத்து மதிக்கத் தக்க அய்பெருமக் களின் அரும்பணியால் தான் திராவிட இயக்கம் இன்று தலை நிமிர்ந்து நடை போடுகின்றது
மரத்துக்கு வேர்கள் எப்படிக் கண்ணுக்குத் தெரியாவிட் பாலும் கட்டாயத் தேவையை மறைவாக இருந்து நிறைவாக அளிக்கின்றனவோ, அப்படி எண்ணற்ற பெரியோர்களின் தியாகத்தைப் பெற்றுத்தான் திராவிட இயக்கம் செம்மாந்து நிற்கின்ற பெருமைக்குரியதாக ஆகியிருக்கின்றதே அலைா மல், எந்த ஒருவருடைய தயவாலோ, குடும்பத்தாலோ அல்ல!.
அய்ந்தாம் ஆண்டில் நடைபயிலுகின்ற சங்கொலியின் - நாலா திசையிலும் நாடெங்கும் எதிரொலித்து நற்பணியாற் றும் சங்கொலியின் மூபைமைாக - மூளைப் பலமாகத் திகழும் திருநாவுக்கரசு அவர்களின் எழுத்தாற்றலில் மலர்ந் துள்ள ஏடுகளில் இந்த நூல்கள் சிறப்பிடம் பெறத்தக்கன.
திராவிட இயக்கத்தின் தூண்கள் என்று சொல்கிறாரே - விழுதுகள் என்று சொன்னால் என்ன என்று எண்ணிப் பார்த்தேன்... தூண்கள் எந்தப் பயனையும் துய்க்காமல் கட்டடத்தைத் தாங்கி நின்று கடமையாற்றுவது போல் இந்த மாமனிதர்கள் இயக்கத்தால் எந்தப் பயனும் பெறாமல் இயக்கத்தைத் தாங்கி மண்ணில் நிலை நிறுத்தியவர்கள் என்பதை அவர் குறிப்பால் உணர்த்துகின்றார் என்பது புரிந்தது.
ஆம்; விழுதுகள் மண்ணைத் தொடுமுன் மரத்தில் இருந்து சத்தையும் சாரத்தையும் பெற்று வளர்வண!! ஆனால் திராவிட இயக்கத்தினை வலிவு பெறச் செய்த இத்தூண்கள் எந்தப் பயனும் துய்க்காத தியாகத் திருவுருவங்கள் என்பது வெள்ளிடை மலை!
திராவிட இயக்க விடிவெள்ளி டாக்டர் நடேசன் முதலாக பெரியாரின் வலதுகரம் எஸ் இராமநாதன் வரையி வான தலைவர்கள் வரிசையானாலும், புலவர் குழந்தை முதல் புதுமைக்கவிஞர் வாணிதாசன் வரையிலான கவிஞர் கள் - அறிஞர்கள் வரிசையானாலும் அவர்களைப் பற்றிய அற்புதமான தகவல்களைத் தேர்ந்து தெளிந்து திரட்டித் தரத்தக்க அறிஞர் இவரன்றி நாட்டில் இன்று எவருளர் என்னும் வினாவே இந்நூல்களைப் படிப்போர் நெஞ்சில் விஞ்சும்
அந்த மலையயுடனும் மரியாதையுடனும்தான் இந்த நூக்களைப் பக்கம் பக்கமாகப் படித்திட்டேன். யஸ்கலைக் கழகங்களில் திராவிட இயக்க மாமனிதர்களின் வரலாற் கறைப் பாடமாக வைக்க வேண்டியது காலத்தின் கட்டாயமா கும்... அந்தக் கட்டாயத் தேவைக்கு ஓர் அரிய கருவூலத்தைக் கடமையுணர்வோரு தந்துள்ள ஆசிரியர் திரு. க. திருநாவுக்க ரசை உளமார வாழ்த்துகிறேன்!! அவர்தம் பணி தங்கு தடையின்றித் தொடர்க! கங்கு கரையின்றி வளர்க என்று வாழ்த்துவதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன்!
வைகோ
புதுடில்லி
19.4.1999