திராவிட இயக்க வேர்கள் - பாராட்டுரை

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/products/dravida-iyakka-vergal 
முதற் பதிப்பின் பாராட்டுரை

கலைஞர் மு.கருணாநிதி

தலைவர், திராவிட முன்னேற்றக் கழகம்

இன்று இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் பேசப்படுகிற மண்டல் கமிஷன் பரிந்துரையானாலும், பல மாநிலங்களில் பிற்படுத்தப் பட்ட மக்களுக்கு சமூக அடிப்படையில் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் இட ஒதுக்கீடு எனப்படும் சமூக நீதிக் கொள்கையானாலும் இவற்றுக்கு விதை நிலமாக இருந்தது தென்னகம் என்பதும், எழுஞாயிறாகத் தோன்றி ஒளி வழங்கியது திராவிட இயக்கம் என்பதும் மறைக்க முடியாத வரலாறாகும்.

இந்தப் புரட்சிகரமான வரலாற்றை பல்வேறு நாட்டு அறிஞர்கள் ஆய்வு செய்து எழுதியுள்ளனர் இன்னமும் எழுதிக்கொண்டிருக்கின்றனர் இனியும் எழுத போகின்றனர்.

இந்திய நாட்டு மண்ணுரிமைக்கான போராட்டம் நடந்து கொண்டிருந்த காலகட்டத்திலேயே, சுதந்திரம் பெறுகிற நாட்டில் மனித உரிமைகள் பறிக்கப்படக் கூடாது என்பதற் காகத் தோன்றித் தொண்டாற்றி, இன்னமும் அதனைத் தொடர்ந்திடும் இயக்கமே திராவிட இயக்கமாகும்.

சமுதாயம் அடிமைத் தளையில் கட்டுண்டு கிடக்காம லும் - மூடநம்பிக்கையில் உழன்று தேய்ந்து போகாமலும் - சாதி மத பேத உணர்வுகளால் சிதறுண்டு போகாமலும் - ஆண்டவன் பெயரால் ஆதிக்கபுரியினர் வளர்ந்து கொண்டே இருக்கவும், அதே நேரத்தில் பெரும்பாலான மக்கள் வாடிக் கிடக்கவுமான நிலையைத் தகர்த்து அவர்கள் ளின் வசதி வாய்ப்புகளுக்கு தடை ஏற்படாமலும் பாதுகாத் திடும் பாசறையாக உருவானதே திராவிட இயக்கம்.

இந்த இயக்கம் மட்டும் தோன்றியிராவிடில் படிப்பது பாடம் என்று நம்பி, உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்பதெல் லாம் கடவுளின் கட்டளை எனக் கொண்டு - தங்களைத் தாங்களே புன்மைத் தேரைகளாக ஆக்கிக் கொண்டிருந்த மக்களுக்கு விழிப்பு உணர்வே ஏற்பட்டிருக்காது - அல்லது இன்னும் சில நூற்றாண்டுகள் அதற்கெனக் காலம் தேவைப்பட்டிருக்கும்.

இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் உதித்த திராவிட இயக்க உணர்வு; இன்றைக்கு அதன் தாக்கத்தை இந்திய பூபாகம் முழுவதும் பரப்பியிருக்கிறதென்றால் - அதற்கெ னப் பாடுபட்டோர், பணிபுரிந்தோர், அறிவு, ஆற்றலைச் செலவிட்டோர், தியாகம் புரிந்தோர் ஏராளமானவர்களாகும்.

அவர்களின் ஒவ்வொருவர் வாழ்க்கை வரலாறும் திராவிட இயக்கத்தின் அத்தியாயங்களாகவே திகழ்கின்றன.

இளைய தலைமுறையினர்க்கு அவர்களில் பலரைத் தெரியாது! எதிர்கால தலைமுறையும் தெரிந்துகொள்ளக் கூடாதென்ற இருட்டடிப்பு சூழ்ச்சி திட்டமிட்டே நடத்தப்ப டுகிறது - அந்தச் சூது முயற்சியைத் தோற்கடித்து முகிலைக் கிழித்து வெளிக் கிளம்பும் முழுமதி போல "திராவிட இயக்க வேர்கள்'' என்ற தலைப்பில் இந்த நூல் வெளிவருகிறது.

வலுவான அடித்தளமுடைய திராவிட இயக்க எழுத்தா ளர்கள் நிரம்பத் தேவை என்கிற ஆதங்கம் எனக்கு உண்டு. சிலர் எழுதுவார்கள்; மேலோட்டமாக இருக்கும்! சிலர் எழுதுவார்கள்; மெருகிருக்கும் பலன் இருக்காது! சிலர் நல்ல எழுத்தாளர்கள்; எழுதத்தான் சோம்பேறித்தனம்!

இந்த வருத்தம் தரும் சூழலுக்கிடையே திராவிட இயக்கத் தடாகத்து தாமரைகள் பல பூத்துக் குலுங்குவது உண்டு!

அந்த மலைர்களில் ஒரு மலர்தான் தம்பி க... திருநாவுக்கரசு! ஆர்வம், அக்கறை, அயராமாஸ் உழைத்துக் குறியயுகளைத் தேடி எடுக்கும் உயரிய அமைதி, ஆற்றல், இத்தணையும் வாய்க்கப் பெற்ற திருநாவுக்கரசு, திராவிட இயக்கத்தினர் எத்துறையில் ஈடுபட்டிருப்பினும் அத்துறை அவரால் எத்துணை கீர்த்தி பெற்றது என்பதை நேர்த்தியாக எழுதக் கூடியவர்!! தமிழ் நெஞ்சினார்!! திராவிட இயக்க உணர்வில் திளைத்திட்ட உடன்பிறப்பு!

அவர் இந்த இயக்கத்திற்கு வழங்கும் புதிய படைக்கலனே இந்தப் பழைய வரலாற்றுக் குறிப்புகள்!! -

பாராட்டுகிறேன்...

வாழ்த்துகிறேன்...

அன்புள்ள

மு.கருணாநிதி

10.4.1991

Back to blog