பேராசிரியர் க.அன்பழகன்
பொதுச் செயலாளர், திராவிட முன்னேற்றக் கழகம்
தெண்ணகத்தில் வாழும் திராவிட மக்களின் தொண்மைக்கும்.., தனித்தன்மைக்கும், நாகரிக மேன்மைக்கும்... பண்யாட்ரு நலத்துக்கும்... அவர்கள் பேசிவரும் ஒரே குடும்ப மொழிகளான தமிழ் தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு எண்ணும் திராவிட மொழிகளே தக்க சான்றாம்...
திராவிட இனத்தாரின் வாழ்க்கை முறை தொழில், நாகரிகம், கலை, யண்பாரு... சயைச் சிந்தணை, இலக்கியம் முதலானவற்றை ஆராய்ந்த பரை இந்தியாவின் வேறு வந்துப் பகுதியையும் விட தென்னகத்தில்தான், மாந்த நேயமும், மனித மதியயும் நெருங்காலமாகவோ போற்றய யட்டு வந்துள்ளன என்று பாராட்டி உரைத்துள்ளனர்.
அந்தப் பெருமைக்குச் சான்று பகரும் கலங்கரை விளக்கமாக, இன்றும் நின்று ஓளிரவது திருக்குறள் ஆகும்... இயற்கையுடன் இயைந்து வாழ்க்கையில் திளைத்திருந்த தமிழர்களின் - திராவிட மக்களின் வாழ்வினைப் யுயை பருத் தும் தொல்லிலக்கியங்கள் யவுைம். மனித குலத்தின் மாண்யினைய் போற்றும் வகையினதாக விளாங்குவது - தென்னகத்து மக்களின் அறிவு மேம்பாட்டிற்குச் அருகே சான்றாகும்.
எனினும், இடைக்காலத்தில் - இரண்டாயிரம் ஆண்டுக்களாக நாளடைவில் புகுத்தப்பட்டுப் பரவிய வைதிகம் (வேதநெறி), கற்பித்து வளர்த்த பலப்பல புராணங்களா லும், இதிகாசங்களாலும் இடம்பெற்ற, அறிவுக்கு ஒவ்வாத கண்மூடிக் கொள்கைகளும், வருண தருமமும், அதன்வழி நிலை பெற்ற புரோகித ஆதிக்கமும், சாதிமுறை ஏற்றத் தாழ்வு எண்ணமும், தீண்டாமையும் - தென்னக மக்களின் வாழ்வினை அரித்து, பேத உணர்வுக்கு ஆளாக்கி - வீழ்ச்சி அடையச் செய்துவிட்டது.
வேற்றார் எவர் வரினும் - வந்து தங்கி வாழ்வு பெறினும், அவரையும் 'எம்போல்வார்' என்று கருத ஏதுவாகிய 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்னும் நோக்கும், 'ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்' என்னும் பார்வையும், ஆரிய வைதிகர்களைப் பொறுத்தும், தமிழர்க ளால் மேற்கொள்ளப் பட்டதாயினும் - அவர் தம் வைதிகச் செல்வாக்கு வளர வளர, தமிழர்கள் தம்மிடையே நிலவிய வேற்றுமைகளையே பதவி ஏற்றத் தாழ்வுடைய சாதி வேற்றுமையாகக் கருதிடும் ஏமாளிகளாயினர்.
புரோகிதச் செல்வாக்கு 'நான்முகன் படைப்பு நாலு சாதி' என்பதை, நாட்டு மக்களை நம்ப வைத்தபோது, அவரவரும் ஒரு படிக்கட்டில் இடம் பெற விழைந்த நிலையில், புரோகிதர்களின் கட்டளைப்படி - பெரும்பான் மையான மக்கள் 'சூத்திரர்கள்' என்னும் பட்டத்திற்குரியவ ராயினர். அவர்களுள்ளும் சிலர், சைவ, வைணவ சமயப் பற்றினால் - வைதிகத்தினின்றும் விலகிய தனித்தன்மை காட்டியோர் - 'சற்சூத்திரர்' என்னும் 'இழிவினில் மேன்மை' எய்தியவராயினர்.
உலகோர் மதித்திடும் உயர்நிலை வாழ்வு பெற்றிருந்த தமிழர்களாகிய திராவிட இனமக்களின் வீழ்ச்சிக்கு வேறு சில வரலாற்றுக் காரணங்களும் உண்டெனினும், அவர்தம் மனப்பான்மையிலேயே ''தாம் ஒரு தாழ்ந்த பிறவி - தகுதியும் உரிமையும் தமக்குரியதல்ல" என்னும் ஒரு நச்சு எண்ணம் புகுத்தப்பட்டு விட்டதனால் ஏற்பட்ட வீழ்ச்சியே பெருந்தீமை விளைவித்ததாகும். தாழ்வு மனப்பான்மை, அடிமைப்பட்ட உள்ளம், தன்னம்பிக்கை இன்மை, இன உணர்வு கொள்ளும் வழியடைப்பு என்னும் வகையால் - தமிழன் தலைதாழ்ந்தான். திராவிட இனம் தலை நிமிரும் வழியில் சிந்திக்கும் திறன் இழந்தது. வைதிகச் சிலந்தியின் வலை, மதவழிச் சடங்குகள், பழக்கங்கள் என்னும் நூலில் சமய சித்தாந்தம், சாத்திரம், தத்துவம் என்னும் பொன்மு லாம் பூசப்பட்டிருந்ததால் அறிவார்ந்த தமிழர்களுங்கூட அந்த வலையில் சிக்காமல் தப்பவில்லை.
ஆரிய மாயை விரித்த சூதுவலையான சாதி மயக்கத்தில் ஆழ்ந்ததன் விளைவே, மக்களிடையே கலப்பு உறவு குன்றி, பேதம் வளர்ந்து நிலைத்து காலச் செலவில், தாழ்த்தப்பட்டோர், மிகவும் பின்தங்கியோர் என்னும் நிலையில் மிகப் பெரும்பான்மை மக்கள், அழுந்திக் கொண்டே இருக்கும் சமுதாய நிலை வடிவு கொண்டது.
கதிமோட்சம், விடிவு, மாற்றம் எதுவும் காணமுடியாத நிலையில் - மக்கள் தள்ளப்படுவதற்கான சூழ்நிலை உருவாக்கிய ஆதிக்கச் சுரண்டல் வெறியும், அடிமைநிலை ஏற்கும் மனப்பான்மையும் வைதிகம் நாட்டிய ஆரியக் கலாச்சார விளைவாகும்.
திருவள்ளுவர் முதல் வடலூர் வள்ளலார் வரையிலும், சித்தர்களும், பக்தர்களும் பிறவி வழிப்பட்ட சாதியைச் சாடினர். இந்த நூற்றாண்டில் பாரதியாரும் பாவேந்தரும், திரு.வி.க.வும் மறைமலையடிகளும் - சாதி வேற்றுமையை ஒழித்திட விழைந்தனர். பெரியாரும் அண்ணாவும் அதற் கென்றே தன்மான இயக்கமும், திராவிடர் கழகமும் கண்டனர் என்பது வரலாறு. ஆயினும் 'சாதி' மக்களி டையே பேதத்தை நிலை நிறுத்தும் ஒரு தகுதிப்பட்டயமா கவே இன்றுங்கூட நிலவுவதை நாம் மறுப்பதற்கில்லை. ஏன்? அவர்தம் சமுதாய ஏற்றத்தாழ்வு இன்றளவும் மாறவில்லை அன்றோ!
ஆம், அவ்வாறு பாதிக்கப்பட்ட சமுதாயத்தினரின் வாழ்வுக்கு, உரிமைக்கு, உரிமம் உணர்ந்த நிலைக்கு வழிகாண முற்பட்டோர் மேற்கொண்ட முயற்சியின் பயனே தென்னகத்தின் திராவிடர் இயக்கமாக அரும்பி, போதாகி, பூவாகி, மலர்ந்து தேசிய அளவிலும் இன்று மணம் பரப்பி நிற்கின்றது.
இன்றளவும், இந்தியாவில், தாழ்த்தப்பட்டோர் உரி மைக்கு வழிகண்டு, பொதுக் கிணற்றில் நீர் எடுக்கவும், அரசுப் பள்ளியில் சேர்ந்திடவும், பொதுத் தெருவில் நடக்கவும் சட்டப்படி பாதுகாப்பு அளித்திட்ட முதல் கட்சி, சென்னை மாகாணத்தில் - இரட்டை ஆட்சி முறையில், ஆளுங்கட்சியாக அமர்ந்த நீதிக்கட்சி என்னும் திராவிடர் இயக்கமே.
அந்த நாளில் - பார்ப்பனர் ஆதிக்கத்தால் புறக்கணிக்கப் பட்ட பார்ப்பனரல்லாதார் அனைவருக்கும் - சிறுபான்மை மக்களான இசுலாமியர், கிறித்துவர் முதலானோருக்கும் அரசு அலுவல்களிலும், கல்வித் துறையிலும் முதன் முதலாக இடஒதுக்கீடு முறையைக் கொண்டுவந்து பாது காப்பு வழங்கியது திராவிடர் இயக்கமே.
இந்த இடஒதுக்கீடு கொள்கையைக் காலத்திற்கேற்ப வளர்த்தது மட்டுமின்றி, அதற்கு அரசியல் சட்டத்தின் மூலம் கேடு வந்துற்றபோது அறப்போர் தொடுத்து அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்தச் செய்ததன் மூலம் அதை நிலைபெறச் செய்யும் வழிகண்டதும் திராவிடர் இயக்கமே.
கோயில்கள், கொள்ளையர்களின் கூடாரங்களாக ஆக் கப்பட்டிருந்த நிலையில் அதைத் தடுத்து, இறைவனது சொத்து பொதுச் சொத்து என்னும் வகையில் பாதுகாத்திட இந்து அறநிலையச் சட்டம் கொண்டுவந்து நிறைவேற்றிய தும், திராவிடர் இயக்கமே.
பெண் குலத்திற்கு இழைக்கப்பட்ட கொடுமையைத் துடைத்திட - இளமங்கையர்க்குப் பொட்டுக்கட்டி கோயில் களில் தேவதாசிகளாக உலவவிடுவதைத் தடை செய்யும் சட்டம் நிறைவேற்றியதும் திராவிடர் இயக்கமே.
மனித உரிமை மதிக்கப்படும் தன்மான வாழ்வும், உடன் பிறப்புரிமை காக்கும் சமத்துவமும் எய்திடும் வழியாக வகுப்புவாரி உரிமை முறையை அரசு ஆணையா கக் கொண்டுவந்து, சனநாயக உணர்வு தழைக்க வழிகண்ட முதல் இயக்கம் திராவிடர் இயக்கம் என்பது தமிழர்கள் எந்நாளும் நன்றியுடன் நினைவுகூர வேண்டியதாகும்.
அந்தத் திராவிடர் இயக்கம் - எவ்வாறு அரும்பியது, அதன் வழிகாட்டிகள் யார்? யார்? அவர்தம் அருமை பெருமைகள் யாவை? திராவிடத் தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் - அந்த இயக்கத்தை வழிநடத்தத் தலைப்படும் முன்னர் அதை வழிநடத்திய இலட்சியவாதி கள் எவர்? அவர்தம் தொண்டும் தன்னல மறுப்பும் எத்தகையன? என்பவற்றை எல்லாம், இந்த நாள் திராவிட இளைஞர்கள் - வருங்காலத் தலைமுறைக்கு வழிகாட்டும் பொறுப்புடையோர் - அறிந்து கொள்ள வேண்டுமன்றோ?
தமிழர்கள் தமது முன்னோர் வரலாற்றையும் - அவர்தம் அருமை பெருமைகளையும் - போற்றி எழுதி வைத்திடத் தவறிவிட்டார்கள் என்று அறிஞர் அண்ணா அவர்கள் அடிக்கடி வேதனைப்படுவார்கள்.
முன்னோர் வரலாற்றை முழுவதுமாகக் காக்கத் தவறி னோம் ஆயினும் - இந்த நூற்றாண்டின் - திராவிடர் இயக்க முன்னோடிகளின் அரிய வரலாற்றுச் செய்திகளையேனும் நாம் அறிந்திருக்க வேண்டுமல்லவா?
அந்த நோக்கத்தை நிறைவேற்றத் துணையாகவே நமது திராவிட முன்னேற்றக் கழகத்தில் இடம் பெற்றுள்ள சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவரும், பல ஏடுகளின் ஆசிரியருமான எனது அன்புக்குரிய நண்பர் திரு.க.திருநாவுக்கரசு அவர் கள், வரலாற்றுச் செய்திகளைத் திரட்டி "திராவிட இயக்க வேர்கள்'' என்னும் இந்த அரிய நூலை எழுதியுள்ளார்.
டாக்டர் சி.நடேசனார்,
சர்.பிட்டி தியாகராயர்,
டாக்டர் டி.எம்.நாயர்,
எஸ். முத்தையா முதலியார்
முதலாக, திராவிட இயக்கத் தலைவர்களும், வழிகாட்டிகளு மான பலரின் வாழ்க்கையும் தொண்டும் விளங்கவும் அவர்தம் உயர்ந்த குறிக்கோள் தெளிவுபடவும் இந்த ஏட்டில் இனிதாக எழுதப்பட்டுள்ளது. தமிழ் மக்களிடையே இன உணர்வு கால்கொண்டு ஏற்றம் பெறவும், தன்மான உணர்வு தலைதூக்கவும் 'திராவிட இயக்க வேர்கள்' துணையாகும். இந்த நூல் இளைஞர் தம் இதயத்தில் இயக்க வேர் பதிந்திட வழி செய்யும். எனவே, திராவிட இயக்கம் குறித்து அறிந்திடும் ஆர்வம் கொண்ட இளைஞர் அணித் தம்பிமார்கள் ஒவ்வொருவரும் இந்த நூலைப் படித்துப் பயன்கொண்டு, மற்றவர் தெளிவடையுமாறு பயன்படுத்த வேண்டும் என்று விழைகிறேன்.
இதன் ஆசிரியர் திரு.க.திருநாவுக்கரசு அவர்களின் இந்தச் சீரிய முயற்சியைப் பாராட்டுவதுடன், இந்த முயற்சி தொடரும் என்பதறிந்து மகிழ்கிறேன். வாழ்த்தும் உரித்தாகும்.
10.4.91
சென்னை
அன்பன்
க.அன்பழகன்