டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் - ஆசிரியர் குறிப்பு

டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் - ஆசிரியர் குறிப்பு

தலைப்பு

டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர்

எழுத்தாளர் வசந்த் மூன்
பதிப்பாளர் நேஷ்னல் புக் ட்ரஸ்ட்
பக்கங்கள் 226
பதிப்பு இரண்டாம் பதிப்பு - 2016
அட்டை காகித அட்டை
விலை Rs.240/-

 

புத்தகத்தை இங்கே வாங்கலாம்

https://periyarbooks.com/dr-baba-saheb-ambedkar-nbt.html

 

ஆசிரியர் குறிப்பு

 

வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் சிற்பியான டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் தலித்துகளின் மாபெரும் தலைவர் என்று மக்களால் போற்றப்படும் பெருமை படைத்தவர். நம் வணக்கத்திற்குரிய தேசத்தலைவர்களில் ஒருவர். நாடு தழுவிய அளவில் இந்திய வரலாறு பற்றியும், இந்திய சமூகம் குறித்தும் தனது பேரறிவின் ஆற்றலால் ஒப்பற்ற சிந்தனைச் செல்வத்தை வாரிவாரி வழங்கியவர். டாக்டர் அம்பேத்கர் ஓர் அறிவு பூர்வமான எழுத்தாளர், சட்டவியல் வல்லுநர், ஆற்றல்மிக்க அரசியல் தலைவர், பொறுப்பான சமூகச் சீர்திருத்தவாதி, ஈடுபாடு நிறைந்த கல்வி நிபுணர், பல வகையிலும் புதிய தலைமுறையை விழித்தெழச் செய்து வழி நடத்திய ஒளிமிகு சூரியப் புரட்சியாளர்.

இந்த நூலின் ஆசிரியரான திரு. வசந்த் மூன், மகாராஷ்டிர அரசின் சார்பில் உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்ட டாக்டர் அம்பேத்கரின் அனைத்துப் படைப்புகளின் தொகுப்பு நூல்களின் முதன்மை ஆசிரியர். டாக்டர் அம்பேத்கர் ஆங்கிலத்தில் எழுதியுள்ள பல நூல்களை மராட்டியில் மொழி பெயர்த்துள்ளார். தலித்துகளின் பிரச்சினைகள் குறித்தும் நூல்கள் படைத்துள்ளார்.

நூலைத் தமிழாக்கம் செய்துள்ள டாக்டர் என். ஸ்ரீதரன், சென்னையில் மாநிலக் கல்லூரியில் இந்துத் துறைத் தலைவராகப் பணியாற்றியவர். நேஷனல் புக் டிரஸ்ட் உள்பட பல பதிப்பகங்களுக்கு இந்தி நூல்களை தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறார். 

Back to blog