தலித் பார்ப்பனன் (சிறுகதைகள்)

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/products/dalit-parpanan-short-stories

 

கருப்புக் குறிப்புகள்....

மாமனிதர் அம்பேத்கராலும், புலே - சாவித்திரி இணையர்களாலும், ஓர்மையூட்டப்பட்ட மகராட்டிய மண்ணிலிருந்து பீறிட்ட எழுத்துக்கள் சரண்குமால் லிம்பாலேயின் இச்சிறுகதைகள்.

வகைவகையாய் படித்து செரித்து, விவவிதமாய் எழுதிக்காட்டி, பொலபொலவென உலுக்கியெடுத்துக் கொள்ளும் விருதுகள், அங்கீ காரங்கள், விழாக் கேளிக்கை கொண்டாட்டங்கள் என பார்ப்பனர் களும், ஜாதி இந்துக்களும் இடத்தையும், பக்கங்களையும் நிரப்பியும் பிடித்துக் கொள்ளவும் யத்தனிக்கும் போக்குகளுக்கு மத்தியில் பன்னூறு கிலோ மீட்டரின் பாதாளத்தில் உயிரைப் பணயம் வைத்து எடுத்து வந்து தனது வர்க்கத்திற்காக கவிதை பாடிய பாப்லோ நெரூடாவிற்கு பரிசளித்த அந்த சிலி நாட்டு சுரங்கத் தொழிலாளியின் நிலக்கரித் துண்டைப் போன்ற அனுபவக் குருதி யிலானவை லிம்பாலேயின் இக்கதைகள்.

வேலைப் பார்த்தக்களங்களிலேயே விடுதலைக்கான நம்பிக்கை பெற்று இயங்கி வந்தவர்கள் தான் நாம் எனினும் நம்மைத் தலை குனிய வைத்த கயர்லாஞ்சிகளுக்கும் எரித்தும் புதைத்தும், அழித்தும் கொண்டிருக்கும் தர்மபுரிகளுக்கும் மத்தியிலிருந்தும் இத்தகைய எதிர்த்தலை இருத்தாலாய் கொண்ருக்கும் சுயவிமர்சன இலக்கியங் களை பதிப்பிபதை பெரியாரியல் பணியென்றே கொள்கிறோம்.

பிரதியின் மீது ஆதிக்கம் செலுத்தாத, ஒரு மொழி பெயர்ப்பாள ராய், தன்னகங்காரமற்ற சுய விளம்பரம் தேடியலையாத ஒரு கவிஞனாய் இத்தகைய அடிப்படை வேலைகளை செய்து வரும் மதிவண்ணனின் தமிழாக்கத்தில் இக்கதைகளை வெளியிடுவதில் மகிழ்ச்சி பெரும் மகிழ்ச்சி!

இக்கதைகளுக்கும் இவற்றை வாசிக்கும் மனதிற்கும் பக்கத்தில் இருக்கும் கலையாய் இப்பிரதிக்கெனவே ஓவியங்களை வரைந்தளித்த தோழர் நட்ராஜ் அவர்களுக்கு மிகுந்த நன்றியும் அன்பும்.

வழக்கம் போல் நூலாக்கத்தில் துணை நிற்கும் தோழமைகள் 'தலித் முரசு சுந்தர், அமுதா, புனிதப்பாண்டியன், ஷோபாசக்தி, ஜீவமணி, விஜயன், விஜயானந்த் (பெங்களுரூ), நவம், மெலிஞ்சி முத்தன் (கனடா), விஜி - ஞானம், தர்மினி, பிரேமா ரேவதி, கவின் மலர், மே.கா. கிட்டு, அறிவொளி ஆகியோருக்கு அன்பு .. பேரன்பு..

தோழமையுடன்
நீலகண்டன்

கண்ணீர் படலமிட்ட
ஒடுக்கப்பட்டோரின்,
பெண்களின் கண்களில்
வெளிச்சம் புலப்பட பாடாற்றிய
நிறையத் துயரங்களையும் கொஞ்சம் நிறைவையும்
சம்பாதித்த

சாவித்திரிபாய் - ஜோதிபாபுலே

இணையருக்கு .....

தொடர்புடைய மற்ற பதிவுகள்:

 

தலித் பார்ப்பனன் (சிறுகதைகள்) - சமரசமின்மையைக் குணமாகக் கொண்ட கதைகள்

தலித் பார்ப்பனன் (சிறுகதைகள்) - உள்ளே

Back to blog