திமுக வரலாறு - பதிப்புரை

திமுக வரலாறு - பதிப்புரை

தலைப்பு

திமுக வரலாறு

எழுத்தாளர் டி.எம்.பார்த்தசாரதி
பதிப்பாளர்

பாரதி பதிப்பகம்

பக்கங்கள் 168
பதிப்பு ஒன்பதாம் பதிப்பு - 2012
அட்டை காகித அட்டை
விலை Rs.170/-

 

புத்தகத்தை இங்கே வாங்கலாம்

https://periyarbooks.com/thi-mu-ka-varalaaru.html

 

பதிப்புரை

மதிப்பிற்குரிய பெரியவர் திரு. டி. எம். பார்த்தசாரதி அவர்களை எனக்கு நாற்பதாண்டு காலமாகத் தெரியும். ஆனால் ஒருவரையொருவர் சந்திக்கும் போது ஒரு புன்சிரிப்புதான் சிரித்துக் கொள்வோமே தவிர, அதிகமாகப் பேசிப் பழகியதில்லை. ஆனால் கடந்த ஆறுமாதகத்தான் அவருடன் எனக்கு நெருங்கிப் பழகி வரும் வாய்ப்புக் கிடைத்தது. அவர் ஒருநாள், பாரி நிலையத்தார் வெளியிட்ட தி.மு.க. வரலாறு நூலை பல திருத்தங்கள் செய்து வெளியிடத் தயாராக வைத்திருப்பதாயும் அதையும் அவசியம் நான் வெளியிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்கள். நான் உடனே, பாரி நிலையம் திரு. செல்லப்பா அவர்களைக் கேளுங்கள். நானும் சொல்கிறேன்.

அவர்களே போடட்டும் என்று சொன்னேன். அதன்படி திரு. செல்லப்பா அவர்களைக் கேட்டார்கள். அதற்கு அவர்களும், வெளியிடுவதற்கு சற்று காலதாமதம் ஆகும். மேலும் நூல் விரைவில் வெளிவர எண்ணினால் பாரதி நிலையத்தில் கொடுங்கள். அவர்கள் உடனடியாகப் போடுவார்கள் என்று சொல்லி என்னிடமே அனுப்பி வைத்திருக்கிறார்கள். திரு. டி.எம். பி. அவர்கள் மீண்டும் என்னிடமே நூலைத் தந்து கலைஞர் மணி விழா அன்று புத்தகத்தைக் கண்டிப்பாய் வெளியிடுகிறீர்கள் என்று 20 நாள்களே உள்ள நிலையில் அன்புக் கட்டளையிட்டார்கள்.

நானும் சம்மதித்து நூலைப் பெற்றுக் கொண்டு அதன்படி அட்டைப்படம் கூட திரு. டி. எம்.பி. அவர்கள் சொல்லியபடி எழுதி மிகுந்த சிரமங்களுக்கு இடையே நான்கு அச்சகங்களில் கொடுத்து கலைஞர் அவர்களுடைய மணி விழா சிறப்பு வெளியீடாக இந்நூலை வெளியிடுகின்றேன்.

நண்பர் டி.எம். பி. அவர்கள் கடைசியாக 20 நாட்களுக்கு முன் எங்களது அலுவலகத்திற்கு வந்து என்னைச் சந்தித்து எப்படியும் மணிவிழாவில் வெளியிட வேண்ம். உற்சாகத்துடன் ஏற்பாடு செய்யுங்கள் நானும் ஒரு வாரம் மருத்துவமனையில் இருக்கிறேன். புரூப்புகளை முடிந்தால் அங்கு அனுப்புங்கள். பார்த்துத் தருகிறேன் என்றார்கள். ஆனால் எதிர்பாராத விதமாக மருத்துவமனையில் சேர்ந்த மூன்று தினங்களில் காலமாகி விட்டார் என்பதை அறிந்த போது அதிர்ச்சி கலந்த வருத்தம் ஏற்படுகிறது. வரது ஆத்மா சாந்தி அடைய இந்நூலை அவருக்குக் கொத்த வாக்குப்படி கலைஞரின் மணிவிழா தினத்தில் வெளியிடுகின்றேன்.

 

தி.நகர்

- 03.06.84                                                                                                                                                      பழ. சிதம்பரம்

Back to blog