திமுக தமிழுக்குச் செய்தது என்ன? - முன்னுரை

திமுக தமிழுக்குச் செய்தது என்ன? - முன்னுரை

புத்தகத்தை இங்கே வாங்கலாம்

https://periyarbooks.com/d-m-k-thamizhukku-seithathu-enna.html

முன்னுரை

முரசொலி, இளைய சூரியன், The Rising Sun, தினமணி ஆகிய இதழ்களிலும் திராவிடர் இயக்க மலர்களிலும் வெளியான என்னுடைய கட்டுரைகளையும், விடுதலை நாளிதழில் வெளியான என்னுடைய சொற்பொழிவுகளையும் தொகுத்து இந்நூலில் தந்துள்ளேன். தமிழ் மொழிக்குத் தி.மு.க ஆற்றிய தொண்டுகள், தமிழை மைய அரசின் ஆட்சிமொழியாக்க மேற்கொண்ட முயற்சிகள், இந்தி எதிர்ப்புப் போராட்டம் பற்றிய சுருக்கமான வரலாறு, ஈழத் தமிழர்களுக்குத் தி.மு.க. அளித்த ஆதரவு, சேதுக் கடல் கால்வாய்ப் பிரச்சினைகள், பேரறிஞர் அண்ணாவின் பெருமைக்குரிய சாதனைகள், கலைஞர் கண்ட களங்களும் வெற்றிகளும், தளபதி மு.க.ஸ்டாலின் பண்பு நலன்கள், தி.மு.க. ஆட்சியில் தமிழக வளர்ச்சி, மாநில சுயாட்சியின் தேவை முதலியன பற்றிய கட்டுரைகள் இந்நூலில் இடம் பெற்றள்ளன.

தமிழ்மொழிநாள் கொண்டாடப்பட வேண்டியதன் அவசியம், தொல்காப்பியத்தின் காலம், கவின்மிகுக்க கட்டடங்களை எழுப்புவதில் கலைஞருக்கு இருந்த ஆர்வம் முதலியன பற்றிய ஆங்கிலக் கட்டுரைகளும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

என்னுடைய கட்டுரைகளை வெளியிட்ட முரசொலி, இளைய சூரியன், The Rising Sun, தினமணி ஆகிய இதழ்களுக்கும், திராவிடர் இயக்க மலர்களுக்கும், என்னுடைய சொற்பொழிவுகளை வெளியிட்ட விடுதலை நாளிதழுக்கும் என்னுடைய நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்நூலை அழகுற அச்சிட்டு வெளியிட்டுள்ள சீதை பதிப்பகம் உரிமையாளர் அன்புச் சகோதரர் திரு. இராசசேகரன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். 16.10.2017

சென்னை
அ.இராமசாமி

Back to blog