சென்னை : தலைநகரின் கதை - முன்னுரை

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/products/chennai-thalainagarin-kathai
 
முன்னுரை

நவீன இந்தியாவின் முதல் நகரமான சென்னை கருவாகி, உருவாகி, வளர்ந்த கதை

சென்னை என்ற நகரைக் கட்டமைக்க எடுத்துவைக்கப்பட்ட முதல் அடி தொடங்கி சென்னை நகரின் பரிணாம வளர்ச்சியை அங்குலம் அங்குலமாகப் பதிவுசெய்திருக்கிறது இந்தப் புத்தகம்.

சென்னை நகரின் வரலாறு என்பது செயிண்ட் ஜார்ஜ் கோட்டை, ரிப்பன் மாளிகை, எல்.ஐ.சி கட்டடம் என்பன போன்ற கட்டடங் களின் வரலாறு மட்டுமல்ல, சென்னையை வார்த்தெடுத்த மனிதர்களின் வரலாறும்கூட.

வெறுமனே ஆண்டுகளையும் தேதிகளையும் கொண்ட புள்ளிவிவரத் தொகுப்பாக அல்லாமல், சென்னை என்ற நகரின் உருவாக்கத்தின் பின்னணியில் பொதிந்திருக்கும் சுவாரஸ்யங்களை வரலாற்று வாசனையுடன் விவரிக்கிறது இந்தப் புத்தகம்.

நூலாசிரியர் பார்த்திபன், சென்னை குறித்து தீவிரமான தேடலையும் ஆய்வையும் மேற்கொண்டு வருபவர். சென்னையின் வரலாறு குறித்து தமிழின் முன்னணி ஊடகங்களில் எழுதியும் பேசியும் வருபவர். பிரபலதனியார் தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியராகப் பணியாற்றும் பார்த்திபன் அறிமுகம் செய்யும் சென்னை உங்களுக்குப் புதிய அனுபவத்தைக் கொடுக்கும். வாசித்துப் பாருங்கள்.

Back to blog