ஐரோப்பியத் தத்துவ இயல் - பதிப்புரை

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/products/ayiroppia-thathuva-iyal 
பதிப்புரை

'இந்தியப் பயண உலகின் தந்தை' எனப் புகழப்படும் ராகுல் சாங்கிருத்யாயன் தன் வாழ்நாளின் 45 ஆண்டுகளை உள்நாடு மற்றும் உலகநாடுகளில் மேற்கொண்ட பயணங்களால் கழித்தவர்; பன்மொழிப் புலவர், பல்துறை அறிஞர். புத்தமதத்தை ஏற்றுக்கொண்டு புத்த பிட்சுவாக சில காலமும், பிறகு மார்க்சியவாதியாகப் பரிணமித்து பல காலமும் உலகை வலம் வந்தவர்.

மார்க்சிய லெனினிய மெய்யறிவின்பால் ஈர்க்கப்பெற்ற இவர் மனித இனத்தையும், உலக வரலாற்றையும், தத்துவங்களையும், சமயங் களையும் குறித்து ஏராளமான நூல்களைப் படைத்துள்ளார்.

'ஐரோப்பியத் தத்துவ இயல்' என்னும் இந்நூலில் கிரேக்கத் தத்துவ அறிஞர்களின் தத்துவங்களையும், பதினேழு, பதினெட்டு, பத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டு ஐரோப்பியத் தத்துவார்த்தச் சிந்தனையாளர்களின் கருத்துகளையும் விரிவாக எடுத்துரைத்துள்ளார். ஐரோப்பியத் தத்துவ அறிஞர்களை முழுவதுமாகப் புரிந்துகொள்ள இந்நூல் வகை செய்கிறது.

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வல்லுனராக விளங்கிய ஏ.ஜி.எத்திராஜுலு அவர்கள் இந்நூலை இந்தியிலிருந்து தமிழுக்கு சிறந்த முறையில் மொழிபெயர்த்துள்ளார். வாசகர்களுக்கு எளிய முறையில் இந்நூலை உவந்தளித்துன்ள அவரது புலமையையும் எழுத்தாற்றலும் போற்றுதலுக்குரியது.

இந்நூலின் முதற்பதிப்பு என்சிபிஎச் வெளியீடாக 1985ம் ஆண்டு ஆகஸ்ட்டில் வெளியானது. 2003ம் ஆண்டு ஜனவரியில் இரண்டாம் பதிப்பு வெளிவந்தது. உலகமயமாக்கலின் விளைவாக தத்துவார்த்தச் 'சிந்தனைகளில் தேக்கம் ஏற்பட்டுள்ள இன்றைய சூழலில் இந்நூற்பிரதியின் கால அவசியத்தைக் கருத்தில்கொண்டு தற்போது புதிய வடிவமைப்பில் வெளியிடப்படுகிறது.

- பதிப்பகத்தார்

 

தொடர்புடைய மற்ற பதிவுகள்:

Back to blog