அவனின்றி எல்லாம் அசைகின்றன - ஆசிரியர் குறிப்பு

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/products/avaninri-ellam-asaiginrana 
ஆசிரியர் குறிப்பு

அரசு ஊழியராக பணியாற்றியவர். அரசு ஊழியர் சங்க இயக்கங்களில் தன்னை இணக்கமாக ஈடுபடுத்திக் கொண்டவர். விருப்ப அடிப்படையில் பணியிலிருந்து ஓய்வு பெற்று இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியில் இணைந்து முழுநேர ஊழியராக இயங்கி வருகிறார். தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு என இரண்டிலும் மாநில நிர்வாகியாக இருந்து பணியாற்றி வருகிறார். இவர் இயற்றிய தே. இலட்சுமணன் நூல்கள்: 'பிரேசில் - இடதுசாரிகளின் எழுச்சியும், நிலபறிப்பு மீட்சியும்', நீதியரசர் சச்சார் கமிஷன் பரிந்துரைகள் - ஒரு கண்ணோட்டம்', 'புத்தர் - ஒரு பகுத்தறிவாளர் மற்றும் 'கனகசுப்புரத்தினம் ஏன்? பாரதிதாசனானார்.

அவனின்றி எல்லாம் அசைகின்றன என்ற இந்த நூலில் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் மூதாதையர்கள் இந்த பிரபஞ்சத்தைப் பற்றி எப்படியெல்லாம் விளக்கி இருக்கிறார்கள் அதன் வழி நம் நாட்டின் தத்துவார்த்த நிலைப்பாடு எவ்வளவு செழுமை அடைந்து இருந்தது என்பது நம்மை வியக்க வைக்கிறது. ஆனால், அந்த தத்துவார்த்த ஆளுமை எப்படியெல்லாம் சிதைக்கப்பட்டது என்பதை இன்றைய மார்க்சிய ஆசான்கள் விவரித்துள்ள விளக்கங்களை இந்த நூல் எடுத்துக் காட்டுகிறது. இதையொட்டி, இயக்கவியல் தத்துவார்த்தம் இன்றைய விஞ்ஞான உலகில் அக்காலத்திய கணிப்பு எவ்வளவு சரியானது என்பதையும் இப்போதைய காலகட்டத்தில் அந்த இயக்கவியல் தத்துவத்தை நாம் எப்படி புரிந்துகொள்ள வேண்டும் என்றும் இன்றைய மார்க்சிய ஆசான்கள் தந்துள்ள விவரங்களும் இந்த நூலில் தரப்பட்டுள்ளன. படிப்போர் சிரமமின்றி புரிந்துகொள்ள அந்த விவரங்கள் யாவும் கேள்வி, பதில் மூலம் எளிமையான முறையில் தரப்பட்டுள்ளன. 

Back to blog