ஆதிக்க சாதிகளுக்கு மட்டுமே அவர் பெரியாரா? - அணிந்துரை

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/atika-sathikalugu-mattuma-avar-periyara.html
 
அய்யாவின் அணிந்துரை

உதை கொடுக்கும் இடத்தில் தீண்டாமை நீங்குகிறது.

- குடி அரசு 17.2.1929

திராவிடர், ஆதி திராவிடர், திராவிட நாட்டிலுள்ள முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் ஆகிய நான்கு கூட்டத்தினரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள்.

- குடி அரசு 8.9.1940

ஆதி திராவிடன் - திராவிடன் என்ற பிரிவையே நாங்கள் ஒப்புக்கொள்ள முடியாது.

-- விடுதலை 8.7.1947

ஆதி திராவிடன் பார்த்த எந்த உத்தியோகம் கெட்டுவிட்டது?

- விடுதலை 12.10.1957

பறையன் இந்த நாட்டை ஆண்டிருக்கிறான்.

- விடுதலை 5.10.1958

கிராமங்களில் சாதி ஒழிய வேண்டுமானால், கணக்குப் பிள்ளை வேலையைப் பறையனுக்குக் கொடுக்கணும். மணியம் வேலையை சக்கிலிக்கும் குறவனுக்கும் கொடுக்க வேண்டும்.

- விடுதலை 12.4.1964

கோவில் பூசாரி வேலையைக் கூட பறையனுக்கே கொடுக்க வேண்டும்.

- விடுதலை 16.4.1964

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலையையும் ஆதி திராவிடர் களுக்குப் பெருமளவு அளிக்க வேண்டும்.

- விடுதலை 28.4.1964

இரண்டே சாதிகள் தான் உண்டு. பார்ப்பான் ஒரு சாதி. மற்றவர்கள் கீழ்த்தர சாதி.

- விடுதலை 4.1.1960

பறையர் பட்டம் போகாமல் உங்களுடைய சூத்திரப்பட்டம் போய்விடும் என்று கருதுவீர்களேயானால் நீங்கள் வடிகட்டிய முட்டாள்களேயாவீர்கள்.

- குடி அரசு. 11.10.1931

நாங்கள் ஆதி திராவிடர்களைப் பற்றிப் பேசும்போது பார்ப்பனர்கள் மனவருத்தம் அடைவதில் அர்த்தம் உண்டு. ஆனால் பார்ப்பன ரல்லாதார் மனவருத்தமடைவதில் சிறிதும் அர்த்தமில்லை. அது வெறும் முட்டாள்தனமும் மானமற்ற தன்மையுமேயாகும்.

- குடி அரசு 11.10.1931

தீண்டாதாரின் முன்னேற்றந்தான் பிராமணரல்லாதார்களின் முன்னேற்றமாகும். தீண்டாதார்களின் துன்பந்தான் பிராமணரல்லா தாரின் துன்பமாகும்.

-குடி அரசு. 15.11.1925

எனக்கு பெண் பிள்ளை இருந்தால் சிவராஜ் மகனுக்கோ சத்திய வாணிமுத்து மகனுக்கோ கொடுத்திருப்பேன்.

- விடுதலை 11.12.1968

உயர்ந்த ஜாதி என்று எவன் திமிரோடு உங்கள் முன் வருகிறானோ அவனைக் குறுக்கே வரும் பாம்பைப் போலக் கருதி துரத்தி அடிக்க வேண்டும். அதுதான் ஜாதி ஒழிப்புக்கான சரியான மருந்து.

- விடுதலை 27.2.1948

Back to blog