அசுரன் - வீழ்த்தப்பட்டவர்களின் வீர காவியம் - பத்து முகத்தோன்

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/products/asuran-veezththappattavargalin-veera-kaaviyam 
பத்து முகத்தோன்

ராவணன் ஏன் பத்து முகங்களைக் கொண்டவனாகச் சித்தரிக்கப்பட்டுள்ளான்?

ராவணன் பத்து முகங்களைக் கொண்ட ஒருவனாக நம் ஒவ்வொருவருக்கும் பரிச்சயமானவனாக இருந்தாலும்கூட, அவன் ஏன் அவ்வாறு சித்தரிக்கப்பட்டுள்ளான் என்பது பரவலாக அறியப்படாத ஒரு விஷயமாக இருந்து வந்துள்ளது.

பாரம்பரிய இந்தியத் தத்துவஞானமானது, ஒருவர் தனது அடிப்படை உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது. அதோடு அறிவு மட்டுமே ஒப்புயர்வற்றது என்றும் அது முழங்குகிறது. கோபம், கர்வம், பொறாமை, மகிழ்ச்சி, வருத்தம், பயம், சுயநலம், தணியாத விருப்பம், லட்சியம் ஆகிய ஒன்பது அடிப்படை உணர்ச்சிகளை வெறுத்து ஒதுக்குமாறு மகாபலிப் பேரரசன் ராவணனுக்கு போதிக்கிறான். அறிவு மட்டுமே வணக்கத்துக்கு உரியது என்றும் அவன் எடுத்துரைக்கிறான். மனிதன் தன் சுயத்திலிருந்து மீள்வதன் அவசியத்தை எப்போதுமே வலியுறுத்தி வந்துள்ள இந்திய ஆன்மீக ஞானிகள், ஆன்மா மேன்மையுறுவதற்கு இந்த ஒன்பது உணர்ச்சிகளும் தடையாக இருப்பதாக கருதினர்.

ஆனால், தான் இந்தப் பத்து முகங்களைக் கொண்டிருப்பது தன்னை ஒரு முழுமையான மனிதனாக ஆக்குவதால், தான் அவை குறித்துப் பேருவகை கொள்வதாக மகாபலி அரசனுக்கு ராவணன் பதிலளிக்கிறான். ஒரு முழுமையான மனிதனின் உச்சகட்ட எடுத்துக்காட்டாக ராவணன் தன்னைப் பார்க்கிறான். தான் தெய்வாம்சம் பொருந்தியவன் என்பதுபோல அவன் வெளிவேஷம் போடவில்லை. சமூக மற்றும் சமயரீதியான விதிமுறைகள் அவனை மட்டுப்படுத்தவில்லை. மனிதன் எவ்வாறு இருக்க வேண்டும் என்று இயற்கை விதித்திருந்ததோ, அவன் அவ்வாறே இருந்தான். ராமனின் விஷயத்தில் செய்ய முடிந்ததைப்போல, ராவணனின் விஷயத்தில் அவனது மற்ற ஒன்பது முகங்களையும் இந்தச் சமூகத்தால் ஒடுக்க முடியவில்லை. ராமன் தெய்வீகப் புருஷனாகப் பார்க்கப்படக்கூடும், ஆனால் ராவணன் பூரணத்துவம் பெற்ற ஒரு மனிதனாகத் திகழ்ந்தான்.

தனது தணியாத விருப்பங்களின் மீது எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாத, ஆனால் வாழ்க்கையை ஆரத் தழுவுவதற்கும் முழுமையாக ருசித்துப் பார்ப்பதற்கும் ஆர்வமாக இருந்த ஒரு மனிதனின் குறியீடாகவே நமது இதிகாசங்கள் ராவணனைப் பத்து முகத்தோனாகச் சித்தரிக்கின்றன.

Back to blog